Sunday, December 4, 2016

54.என்ன நடக்கிறது


முதல் மணியிலேயே,
அவள் அழைப்புகள்,
ஏற்க்கப்பட வேண்டுமென,
ஆழ்மனது கட்டளை இட்டதும்,
என் மேல் மனது செய்து முடித்தது.....
என்ன நடக்கிறது என்னில்...!!!

53.சிறகுகள்


தறிகெட்டு பறக்கின்றேன்
உண்மைதான்,
ஒரு தேவதையே வந்து,
சிறகுகள் தந்தபின்
பறக்காமல் இருக்க,
நான் என்ன நானா?...

52. சூதாட்டம்

வாழ்வுடன் நான்
ஆடிய சூதாட்டத்தில்
வந்து விழுந்தது
முதல் தாயம்
உன்னை கண்ட நொடியில்...

51. புள்ளி


மென்மழைக்கு தயாராகும் வானம்,
கல்லூரிக்கு தயாராகும் அவள்,
அலுவலகம் செல்ல தயாராகும் நான்,
நாங்கள் மூவரும் இணையும் புள்ளி காதல் ...

50.புகைப்படம்

உன்னுடன்
ஒரு புகைப்படம்
எடுத்துக்கொள்ளவாவது அனுமதி,
தேவதையை கண்டேன் என்றால்
நம்பவா போகிறார்கள்?

49.வழித்தடங்கள்

உன்னை வந்தடையும்
வழித்தடங்கள்
அனைத்தும்
கதவு திறந்த
கருணையாய்
காத்துக்கிடக்கின்றன,
அந்த ஒரு
அதிசய நொடிக்காக
நானும் காத்துக்கிடக்கிறேன்...

48.கலை வடிவங்கள்

மனம் நெகிழ செய்யும்
ஓவியங்களும்,
இசையும்,
கதையும்
கவிதையும்
பாடலும்
கலை வடிவங்கள்
எனில்
எல்லாம் சேர்ந்த நீ யார்...

47. இதயத்தில் தீ

இதயத்தில் தீ
பற்றி எரிந்து
கனவெல்லாம் கருகிய
நேரத்தில்,
ஒரு குளிர்பார்வையில்,
தீ அணைத்து,
கனவுகளுக்கு
வேர் தந்தவளை,
தேவதை என்றழைக்காமல்
போனால்
காலம் என்னை
மன்னிக்காது...

46. மரப்பாச்சி பொம்மை

ஒரு குடியானவன்
தன் மகளுக்கு
செய்து கொடுக்கும்
மரப்பாச்சி
பொம்மை போல்
அன்பின் மிகுதியில்
இந்த கவிதைகளை
எழுதுகிறேன்,
நீயோ இதை
கோவில் சிற்பமாய்
கொண்டாடுகிறாய்...

45. கதைவடைக்கிறது

கணிப்பொறி வேலை
செய்யவில்லை
உன் பிறந்த நாளுக்காய்,
கவிதை எழுத சொல்லி
கதைவடைக்கிறது...

44. ஏன்

இந்த பூமி ஏன்
இப்படி நனைந்து கிடக்கிறது?

வீழ்ந்து கிடக்கும் கடல்
என்ற கவிதையை எழுதியது யார்?

மனுஷ்யபுத்திரனின்
இயற்பெயர் என்ன?

மா. செந்தமிழன் மாதவிடாய்
காலங்கள் குறித்து
என்ன சொன்னார்?

எல்லா கேள்விகளுக்கும்
தெரியலையே என்பாய்,
ஏதேதோ தெரிந்த எனக்கு,
உனக்குள் இருக்கும்
குழந்தைத்தனத்தின் வேர்கள்
எங்குள்ளன என்று சத்தியமாய்
தெரியவில்லை...!!!

43.ஒரு எட்டு

தென்மேற்கு பருவக்காற்று
விஜய்சேதுபதியின் கண்களின் வசீகரம்,
மழைக்குப்பின்னான மான் வாசனை,
மஞ்சணத்தி மரத்தின் இலைகள்,
எல்லாம் ஒரு பூக்கூடையில்
எடுத்துக்கொள்ளுங்கள்
அவளை ஒரு எட்டு பார்த்துவரலாம்...

 

42. ஏ கடவுளே

ஏ கடவுளே
கடல்நீருக்குள் தீ
வைத்து,
மீன்களை கொல்லும்
முயற்சி போல்,
எங்களுக்குள் ஊடல்
தீ
மூட்டி
காதலை
கொல்லப்பார்க்கிறாய்,
முந்தையதுகூட நடக்கலாம்
பிந்தையது சாத்தியமேயில்லை...

41. தயார்

மென்மழைக்கு தேவையான
முன்னேற்பாடுகள் தயார்,

தென்றலை கட்டவிழ்த்து விட
முன்னேற்பாடுகள் தயார்,

தனித்தமிழ் இயக்கத்தின்
தாய்ப்பால் வார்த்தைகள்
தயார்,

தேவதை நீ
தலை சாய்த்தால்
போதும்,

என் கவிதையின்
காற்றழுத்த
தாழ்வு மண்டலம்
சூழ்கொள்ளும்,

கவிதை குழந்தைகள்
நம் காதல்
கரையெங்கும்
திரியும்...


 

40.மயில்கள்

உன் புன்னகை கண்ட
மயில்கள்
மென்மழைக்கு
தேவையான
முன்னேற்பாடுகள்
தயார் என
தொகை விரித்து ஆடுகின்றன..

39.பள்ளிகளும் கல்லூரிகளும்

பள்ளிகளும்
கல்லூரிகளும்
பல்கலைக்கழகங்களும்
கற்றுத்தர மறந்த
வாழ்வை,
காதலை,
அன்பை,
நேசத்தை,
  ஒற்றை மனுசி,
  ஒரு பூனைக்குட்டியை
  வைத்து
  கற்றுத்தரும் போது,
  மௌனமாய், மலைப்பாய்
 வேடிக்கை பார்க்காமல்
 என்ன செய்ய..

38. ஏன் தேவதை?

அவளை பெண்
என்றழைக்கும் போது,
அருவியை நீர்வீழ்ச்சி
என்பது போல்
பதற்றமாக உள்ளது,
தேவதை என்றே
அழையுங்கள்
அதுதான் சரியான
பதம்...

37.பரமபத வாழ்வில்

பரமபத வாழ்வில்
பாம்புகளுடன் மல்லுக்கட்டிய
நேரத்தில்
 உன் வரவு
 என்னைகடைசிக்கட்டம்  வரை 
 அழைத்துச்செல்லும் ஏணி,
 
இனி பாம்புகளை பற்றி
கவலை இல்லை எனக்கு...

36. வாழ்வுடன் நான்

வாழ்வுடன் நான்
ஆடிய சூதாட்டத்தில்
வந்து விழுந்தது
முதல் தாயம்
உன்னை கண்ட நொடியில்...

35. கற்றுக்கொடுங்கள்

எனக்கு ஓவியம்
கற்றுக்கொடுங்கள்,
அவள் அழகை காகிதத்தில்
காட்டுகிறேன்,

எனக்கு சிறுகதை
கற்றுக்கொடுங்கள்
இந்த நூற்றாண்டின்
மிகச்சிறந்த சிறுகதை
தொகுப்பை
எழுதிக்காட்டுகிறேன்,

எனக்கு சிற்பம்
கற்றுக்கொடுங்கள்
தாஜ்மகாலை மிஞ்சிய
காதல் கோட்டையை
அவள் கண்முன்னே
கட்டி காட்டுகிறேன்,

எனக்கு இசை
கற்றுக்கொடுங்கள்
அவள் வார்த்தைகளை
மௌனத்தை
சிரிப்பை
புருவ நடனத்தை,
இசையில்
கோர்த்துக்காட்டுகிறேன்,

எனக்கு பாட
கற்றுக்கொடுங்கள்
நான் செல்லும் வழியெங்கிலும்
அவள் புகழ் பாடிச்செல்கிறேன்,

எனக்கு கூத்து
கற்றுக்கொடுங்கள்
அவளை பற்றிய
நாடகத்தில்
அத்தனை
கதாபாத்திரத்திலும்
நானே நடிக்கிறேன்,

எனக்கு மௌனம்
மட்டும் அறவே
கற்றுத்தராதீர்கள்
 இந்த வாழ்நாள்
 முழுக்க அவள்
பெருமை
பேசித்திரிய வேண்டுமெனக்கு...

34.சொர்கத்தின் கதவுகள்

வருணபகவான் வாள் வீசும்
நேரத்தில்,
மெல்லிசையாய் உன்
கொலுசொலி,
கண்கள் மூடி
அமர்கிறேன்,
சொர்கத்தின்
கதவுகள் திறந்த
சத்தம் மழையின்
சலசலப்பில்
கேடக்கவில்லை எனக்கு,
ஆனாலும்  நான் உணர்ந்தேன்...

33.என்ன தயக்கம்

அங்கீகார குறைபாடு
உள்ளவர்களிடம்
அன்பை
அள்ளி தெளிக்கும்
ஒருத்தியை
தேவதை
என்று கொண்டாட
என்ன தயக்கம் உங்களுக்கு..?

32. தேவதைகாதலன்

என்னை மறுபடியும்
குழந்தையாக்குங்கள்,
பள்ளி அனுப்புங்கள்,
பெரியவனாகி என்னவாக போகிறாய்
என கேளுங்கள்,
தேவதைகாதலன் என்று
சொல்லவேண்டும்..

31. நாவல் பழம்

உன் கண்கள்
நீர்நாவல் என்கிறான் கம்பன்,
கொடிநாவல் என்கிறான் வள்ளுவன்,
வெண்நாவல் என்கிறான் பாரதி,
இவைகளின் சேர்மானத்தில்
முளைத்த
 புதுநாவல் என்கிறேன் நான்...
  என்னை நம்பு...

30. காடறியா மனிதன்

காடறியா மனிதனை
காட்டுக்குள் அனுப்பும் அளவு
திகில் ஊட்டுகிறது
உன் அன்பு,
ஆச்சர்யபடுவதை தவிர
வேறு வழியில்லை
எனக்கு... 

29. காதல் தீ

என் உசுருக்குள்
நீ வசிக்க சம்மதமா
என கேட்டால்
ஆம் என நீ
கிழக்கும் மேற்குமாக
தலையசைக்கும்
வேகத்தில்
காற்றில் பற்றுகிறது
காதல் தீ...

28.வலிமை

எல்லைகளை விஸ்தரித்தவளே
எங்கிருந்தாய் நீ..
எப்படி கவனியாமல்
விட்டேன் உன்னை,
என் கால் நூற்றாண்டு
தனிமையை கரைத்து
குடிக்கும் வலிமை
எப்படி வந்தது
உன் பிஞ்சு கண்களுக்கு

27. தொன்மம்

வலிகளின் தொன்மத்தை
தோண்டியெடுத்து
மலர்களை நிரப்பியவளே,
 
   கடவுள் என்ன வரம்
   வேண்டுமானாலும்
   கேட்டுக்கொள் என்னும்
   நாளில்
   நீ மட்டும்
   போதுமென
   உன் வளைக்கரம்
   பற்றி புன்னகைப்பேன்,
   இப்போதே கர்வம்கொள்...

26. மண் போதை

நீ நடந்தால்
மண் போதையுரும்,
நீ சூடினால்
மல்லிகள் மனம்பெறும்,
நீ சுவாசித்தால்
காற்றிலும் கள் ஊரும்...

25. மருந்து

இந்த வலி
தீர்ந்துபோகுமென
நான் நம்பவேயில்லை
மருந்தாய் நீ வரும் வரை...

மருந்து 

24.சுமந்து திரிகிறேன்

இரவை சுமந்து
திரியும்
பனித்துளி போல்
உன் நினைவை
சுமந்து திரிகிறேன்...

23. என்ன தரலாம்

உனக்காக என்ன தரலாம்
என கேட்டால்,
இந்த பூமியில் உள்ள
எல்லாவற்றையும்
கொடுங்கள்,
போதவில்லையெனில்
பக்கத்து கோள்களில்
கடன் கேட்கலாம்...

22.துடிக்கிறது

என் இதயம்
நீ வேண்டுமென
துடிக்கிறது
என்னைப்போலவே...

21. உபயம்

கூட்டிலிருந்து வெளிவந்த
பட்டாம் பூச்சியாய்
பறந்து திரிகிறது
மனது ,
சிறகும் வண்ணமும்
அவள்
உபயம்...

20. எதுவும் இல்லை

கவிதைக்குள் வராத
எதுவும் உன் வாழ்வில்
இல்லை
எனுமளவுக்கு,
உன் வாழ்க்கையை
மாற்றியே தீருவேன்,
இது சத்தியம்...

19. கூட்டம்

ரசிப்போரை பற்றி
கவனமின்றி திரிபவளே
கேள்,
ஒரு நாள்
உனக்கான ரசிகை
கூட்டம்,
உன் முன்னாள்
பரந்துவிரியும்,
நீயும் பறந்து
மகிழ்வாய்...

18. என்ற பேச்சு

நீ வரும்
திசையில்
எதிர் காற்று
என்ற பேச்சுக்கே
இடமில்லை...

17. சுகம்

ஒரு கவிக்கு
காதலியாகிப்பவதில்
உள்ள சுகம்
இருவருக்கும்
இறப்பே இல்லை
என்ற புள்ளியில்
தொடங்குகிறது...

16. அவள் வந்துவிட்டாள்

காது உரசி போகும்
காற்றே கேள்
அவள் வந்துவிட்டாள்,
பைக்கில் மோதிச்செல்லும்
பட்டம் பூச்சியே கேள்
அவள் வந்துவிட்டாள்,
நகர மறுக்கும்
நரக வாழ்க்கையே கேள்
அவள் வந்துவிட்டாள்,
இமைக்க மறந்த
இமையே கேள்
அவள் வந்துவிட்டாள்,
உறங்க மறுத்த
உள்ளமே கேள்
அவள் வந்துவிட்டாள்...

15. வசந்தகால பறவை

வாழ்க்கை என்னை
சிறைப்பறவை ஆக்கி
இறகொடித்த நேரத்தில்
உன்னை கண்டேன்,
  என் கூண்டுகள்
  திறக்கப்பட்டன,
  சிறகுகள் முளைத்தது
இன்று நானொரு
வசந்தகால பறவை...

14. உயர

வாழக்கை ஒரு கொடுங்கனவென
உறைந்த நேரத்தில்
உன்னை கண்டேன்
 அன்று  முதல்
 கர்வம் கொண்ட கழுகாய்
 மகிழ்ச்சி கொண்ட
 மயிலிறகாய்
 உயர பறக்கிறது மனது...

13. தோகை

நடனமாடி தோகை விரிக்கின்ற
பெருமயில்களே,
அவள் வெட்கப்படும்
அந்த ஒரு நொடி
அழகு போதுமே
உங்கள் ஆட்டத்தை
நிறுத்த
அவளிடம் தோற்றுப்போக...

12. ஒரு முறை

நான் ஆறுதல்
கூறுவதற்க்காய்
ஒரு முறை
சண்டையிடு
என்கிறாய்,
எங்கு தொடங்கி
எங்கு முடிப்பதென
தெரியவில்லையெனக்கு
நீயே தொடங்கு
நீயே நடத்து
நீயே முடித்து வை,
நான் நீயாகிப்போவதில்
இருக்கும் பேரின்பம்
ரசிக்கவேண்டும் எனக்கு...

11. கடைக்கண்ணால்

கடைக்கண்ணால் நோக்கி,
கடைக்கண்ணால் பேசி,
கடைக்கண்ணால் கவிதை சொல்லி,
கடைக்கண்ணால் காதல் தீ மூட்டுகிறாள்,
இதில் அன்பென்றும்
கோபமென்றும்
கருணையென்றும்
வகைக்கொரு
நிறமாய்
வண்ணமும் மாறுகிறாள்,
பற்றி எரிகிறது காதல் ,
ஆழ்கடல் அமைதியில் மனது...

10. ஊமை

கண்கள் வழி
இவ்வளவு செய்தி பரிமாற்றம்
சாத்தியமெனில்
நான் ஊமையாகிப்போகவும் தயார்

09. காரணங்கள்

என் பலவீனங்களை
துப்பறியும்
எண்ணமில்லை,
என் குற்றங்களுக்கு
பூதக்கண்ணாடியை
திணிக்கும்
முகாந்திரமில்லை,
என் இயலாமைகள்
புன்னகையுடன்
கடக்கபடுகின்றன,

இந்த
காரணங்கள் போதுமே
இந்த யுகம் முழுவதும்
அவளை காதலித்துக்கிடக்க...

 

09. கட்டக்கடைசியில்

துன்பங்கள் துரத்தியது
இயலாமைகள் எக்கலமிட்டது,
கண்ணீர் சாக்கடையைப்போல்
வழிந்தோடியது,
கட்டக்கடைசியில் அவள்
வந்தாள்,
துன்பங்கள் பின்
வாங்க, இயலாமை எதிர்த்திசையில் ஓட,
ஆனந்த கண்ணீர் பன்னீராய் மாறிக்கிடக்கிறது...

08. என்ன சொல்லி

சாபத்தை வரமென
சொல்லி கொடுத்தார்கள்,
வரத்தை என்னவென்று
சொல்லி கொடுக்கபோகிறீர்கள்
என்றேன்,

தேவதை என்ற
பெயரில் என்றார்கள்...

07. எப்படி

எப்படி காதலிப்பதென
வகுப்பெடுக்கிறாள்,

பூக்களிடம் சரணடைவது
எப்படி என புரிகிறது எனக்கு...

06. ஒரு முறை

நான் ஆறுதல்
கூறுவதற்க்காய்
ஒரு முறை
சண்டையிடு
என்கிறாய்,
எங்கு தொடங்கி
எங்கு முடிப்பதென
தெரியவில்லையெனக்கு
நீயே தொடங்கு
நீயே நடத்து
நீயே முடித்து வை,
நான் நீயாகிப்போவதில்
இருக்கும் பேரின்பம்
ரசிக்கவேண்டும் எனக்கு...

05. வேறேதும்

செமத்தியாய் அடி வாங்கிய,
பள்ளி சிறுமியின்
உள்ளங்கை போல்,
 என் வாழ்வு
 கண்ணிப்போய்
 கிடக்கிறது,
 ஒரு தாயின்
 ஸ்பரிசத்துடன்
 என்  கையை
 இறுக பற்றிக்கொள்
 எனக்கு வேறேதும்
 கேட்கத்தோன்றவில்லை…

04. மூர்க்கமாய்

நான் மூர்க்கமாய்
சம்மட்டியால்
அடித்து பிளந்தபோதும்
திறக்காத
என் கவிதையின்
ஊற்றுக்கண்
உன்
ஒற்றை பார்வையில்
திறந்துகொண்டது,
காதல் பீறிட்டு
கிளம்புகிறது,
கவிதை
ஆறாய் ஓடுகிறது...

03. சபரிமலை

சபரிமலைக்கு
மாலையிட்டு
செல்லும் பக்தன்
போல்,
உன்னை சேர
நான் மேற்கொள்ளும்
காதல்விரதங்கள்
பகீரத பிரயத்தனங்கள்..

02. அதுதான் வேண்டும்

என் கவிதைகளும்
ஏடா கூடா வார்த்தைகளும்
அவளுக்கு
புரிவதேயில்லை,
அதுதான் வேண்டும்மெனக்கு..

01. இன்றைய தேதியில்

இன்றைய தேதியில்
பாரதி இருந்திருந்தால்
குயில் பாட்டு
முழுக்க
அவள்
குரலை பற்றியே
எழுதியிருப்பான்,

கட்டபொம்மன் இவளுக்கு
கப்பம் கட்டியிருப்பான்,

முருகன் மூன்றாம்
காதலில்
விழுந்திருப்பான்,

அவ்வையாருக்கும்
காதல் வந்திருக்கும்,

K.B.சுந்தராமப்பாள்
தன்  கட்டை குரலை
மௌனமாக்கி
அவள் அழகை
வேடிக்கை பாத்திருப்பாள்,

வங்கிகள் அவளை
கொண்டாட
வார்த்தைகள்
விற்றிருக்கும்,

ரயில்களில்
சிவப்பு, பச்சை
கோடிகளில்
அவளை பற்றி
கவிதைகள்
இடம்பெற்றிற்கும்.. 

2. புள்ளி

மென்மழைக்கு தயாராகும் வானம்,
கல்லூரிக்கு தயாராகும் அவள்,
அலுவலகம் செல்ல தயாராகும் நான்,
நாங்கள் மூவரும் இணையும் புள்ளி காதல் ...

1. புகைப்படம்

உன்னுடன்
ஒரு புகைப்படம்
எடுத்துக்கொள்ளவாவது அனுமதி,
தேவதையை கண்டேன் என்றால்
நம்பவா போகிறார்கள்?

Saturday, August 13, 2016

காத்திருப்பேன்

இப்படி ஆழமாய்,
அழுத்தமாய்,
அன்பாய் காதலிக்க ,
உன்னால் மட்டும்தான்
முடியும் என கர்வம் கொள்ளாதே ,
உன் மாணவன் நான்,
உன்னைவிட, உன்னை அதிகம் காதலித்து,
ஒரு நாள் உன்னை வென்றாலும் வெல்வேன்,
ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளாமல்
உன்னிடம் தோற்றுப்போவேன்,
எப்படியும் நீ கண்டுபிடித்து
காதுமடல் திருகும் நாள் வரை
காத்திருப்பேன்....

நிம்மதி

காலையில் இருந்து
கவிதை எழுதி
மிக தளர்வாக
உணர்கின்றேன்,
தூங்கலாம்தான்
ஓய்வில் இந்த வாழ்வை
கழிப்பதை விட,
உனக்கான கவிதை தேடலில்
களைத்து தோற்றாலும்
அந்த நிம்மதி போதுமெனக்கு....

குட்டிகுறை

குறையொன்றுமில்லை என நான் கூறுகையில்,
அதனுள் இருக்கும் குட்டிகுறையை
கண்டுபிடித்து
என் குறைதீர்க்கிறாய் நீ...
  காதலில் ஊடல் மட்டுமே பார்த்த எனக்கு,
  நீ செய்வது காதலில் ஊடுருவல்....

மீண்டும் முதல் வரிக்கு வா

பிள்ளை வரம் வேண்டி,
ஆலமரம், அரசமரம்
சுற்றி வந்த பின்
பிறந்த முதல் குழந்தை நீ..

உன் தந்தைக்கு நீ
தேவதையென்பதையும்,
தாய்க்கு, தாய்மை கொடுத்த
முதல் கடவுள் நீ
என்றும் உனக்கு தெரியுமா?

உன் குடும்ப கூட்டிற்கு
கேட்ட நேரம் வந்தபோது
தனியொருவளாய்
வெளியேறி
அத்தனை குரூரத்தையும்
ஒற்றை ஆளாய்
நெஞ்சில் தாங்கிக்கொண்ட
குலசாமி நீ தெரியுமா ?

ஆடிக்கழிக்க வேண்டிய
இளமையின் ஒரு பகுதியை
அழுது கழித்தவள் நீ தெரியுமா?

ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி
வந்து
சிறைப்பட்ட ஒரு கைதியை
ஒற்றை பூனை குட்டியை
கையில் ஏந்திக்கொண்டு
காப்பாற்றிய ,
காவல் தெய்வம் நீ தெரியுமா?

மீண்டும் முதல் வரிக்கு வா,
நீ தேவதை என்பதை
மட்டும் ஒப்புக்கொள்,
நீ கடவுள் என்பதை நாங்கள்
ஏற்கனவே ஒப்புக்கொண்டுவிட்டோம்...

நீ யாரென சொல்ல வேண்டாம்

நீ யாரென சொல்ல வேண்டாம்
உன் தோழி யாரென கேட்க மாட்டேன்,
யாரையும் முந்தாமல்,
எதையும் சந்திக்காமல்,
எதையும் நிரூபணம் செய்யாமல்,
எதையும் புரியவைக்க முயலாமல்,
வெட்டுப்பாறையில் நுழையும் வேர் போல
தீர்க்கமாய் இந்த வாழ்வில் நுழைவோம்...
நம் காதலின் தடம் ,
நம் வாழ்வெங்கும்,
சிதறிக்கிடப்பதை
எவரேனும் சுட்டிக்காட்டினால்
சட்டை செய்யாமல்
காதலித்து திரிவோம் கர்வமாய்...

தாண்டிப்போவோம் வா

"உயிரே உன்னை உன்னை
எந்தன் வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ..
இனிமேல் வெயில், புயல், மழை
பாலை, சோலை
இவை ஒன்றாக கடப்போமே"

தாமரையின் இந்த கவிதையை
தாண்டிப்போகவேண்டும்
உறுதியாய் உன் மூச்சை
இழுத்துக்கொள் ..
என் கைகளை
இறுக பற்று
இனி எந்த ஒரு நொடியிலும்
உன் கைகள் 
இந்த கவிதைக்காய்
நடுங்காது...
ஒரே தாவில்
இந்த கவிதையை
தாண்டிப்போவோம் வா....


அன்பில் அவள்

அன்பில் அவள்
சேர்க்கதுடித்த அந்த
காதலையும்
சேர்த்து,
நானே காதலிக்கபோகிறேன்....
ஒரு வெறிகொண்ட
வேங்கையின்
வேட்டையை போல,
என் காதல்
சற்று மூர்க்கமாய் கூட இருக்கும்,
விட்டதை பிடிக்க
எனக்கு வேறு வழி தெரியவில்லை...

நகம் வெட்டும் நேரத்தில்

நகம் வெட்டும் நேரத்தில்
நூறு கவிதைகள் எழுதி
அவள் அழகை
நேர்த்தியாய் பதியவே
விரும்புகிறேன்...

ஒரு ரிமோட்

கடந்த காலத்தை மற்ற
என்னிடம் ஒரு ரிமோட்
இருந்திருந்தால் ...

வேகமாய் உன்னிடம்
ஓடி வந்து கொடுத்திருப்பேன்,
நீயாவது தப்பி பிழைத்துக்கொள்
எதிர் கேள்வி கேட்க்காமல்,
எங்காவது ஓடி பிழைத்துக்கொள்
என கூறியிருப்பேன்..

காலம் தன்
கூறிய நகங்களால்
உன்னை காயப்படுத்தியதை
கனவிழும்  அனுமதிருக்கமாட்டேன்..நம்பிக்கையில்லை

எனக்கு மோட்சத்தில்
நம்பிக்கையில்லை
இங்கேயே  இப்பொழுதே
சொர்க்கம் காணவேண்டும்..
ஒரே ஒரு முறை
அந்த ரகசிய புனைபெயரால்,
என்னை காலிசெய்துவிட்டு போ.....

Friday, August 12, 2016

ஒரே ஒரு முறை

ஒரே ஒரு முறை 
அள்ளி அணைத்து விடு,
  என் நரைகள்
  விலக ,
  என் தொப்பைகள்
  குறைய,
  என் கவலைகள்
  கரைய,
  என் களங்கங்கள்
  கதற,
  என் எழும்புகள்
  நொறுங்க,
  என் நரம்புகள்
  நடுங்க..
ஒரே ஒரு முறை 
அள்ளி அணைத்து விடு..
 
 
  

ருசி கண்ட பூனை

ருசி கண்ட பூனையாய்
தினமும் அவள் அழைப்பிற்காய்
காத்திருக்கிறேன்..
   "ம்ம்ம் அப்புறம்"
 என்ற வார்த்தையை
 அவள் சொல்லி கேட்டாலே
 அதீதத்தின் ருசியை
 உணர்ந்ததாய்
கும்மாளமிடுகிறது மனது..
இன்னும் எவ்வளவோ
பாக்கி இருக்கிறது
என சொன்னால்
  "ம்ம்ம் அப்புறம்"
என கேட்டு
காலை கட்டிக்கொண்டு,
கண் சிமிட்டுகிறது
என் பூனைக்குட்டி மனது,
ருசி கண்ட பூனையாய்.... 

ரோசி

ஒரு பூனை குட்டியை
வைத்து அதிகபட்சம்
எத்தனை கவிதைகள்
எழுதிவிட முடியும் என்ற
கேள்விக்கு
உங்களை போலவே
என்னிடமும் ஒரு
ஏளனமான
பதில் இருந்தது..
  அவள் அனுதினமும்
  ஆவலாய் வந்து
  "இன்னைக்கு ரோசி
    என்ன பண்ணுச்சு
    தெரியுமா"- என
    ஆரம்பிக்கும் போது..
    வந்து விழும்
     வார்த்தைகள் அனைத்துமே
     கவிதைகள்....

உ .மு..... உ .பி....

உன்னை சந்தித்த நொடியில்,
என் வாழ்வை
உனக்கு முன் (உ .மு)
உனக்கு பின் (உ .பி )
என பகுத்து பார்க்குமளவு
ஒரு தலைகீழ்
மாற்றத்திற்கு
நான் தயாராகவே இல்லை ...

எல்லாவற்றையும்
தலைகீழாய்
மாற்றிவிட்டு ..
"நானா?"
என நீ வினவும் போது
இந்த குழந்தைதனத்திற்குள்
புகுந்து
நம் குழந்தைகளை  வளர்க்கும்
ஆர்வம் சில்லிடுகிறது....

அணில் குட்டி

உச்சி வெய்யிலில்
ஒரு வேப்ப மரத்தடியில்
குறையுடையில்
இளநீர் பருகி,
அணில் குட்டி
வேடிக்கை பார்த்து,
மாடுகளை  நீவிக்கொண்டு,
ஆடு மேய்த்துக்கொண்டு,
கோழிகளிடம் பேசும்
ஆசை நிறைவேற வேண்டும்
அல்லது
நீ அருகில் வேண்டும் .....

பட்டாம்பூச்சி

வேகமாய் பறந்து வந்து,
மெதுவாய் வந்த
என் வாகனத்தில்
மோத  எத்தனித்து விலகி சென்ற
பட்டாம்பூச்சி...

குரைக்க காதுகளை
உயர்த்தி பின்
கண் பார்த்து மௌனமான
தெருநாய் ...

மெல்ல வீட்டிற்க்குள்  எட்டிப்பார்த்து
பின்னெதுவும் சொல்லாமல்
நகர்ந்து சென்ற பக்கத்து வீட்டு பூனைகுட்டி....

கேபிள் சரியில்லை என்றதும்
பொறுமையாக முழு புகாரையும்,
கேட்டுவிட்டு உடனடியாக
சரி செய்த கேபிள்காரர்...

வாகனத்தை வெளியே எடுத்ததும்,
வேகமாய் வந்து
கதவடைத்து உதவும்
வீட்டுக்காரர்...

ஒரு வாரமாய் வீட்டிற்க்குள்
போக்கு காட்டி
பின் சாதுவாய்
சிக்கிக்கொண்டு, வெளியேறிப்போன
தவளை....

உடல்நிலை சரியில்லையென்றதும்
வேண்டுமளவுக்கு விடுமுறை
எடுத்துக்கொள்ள சொன்ன
மேலாளர்...

இவர்கள் எல்லோரும் ஏதோ
ஒரு புள்ளியில்
என்னிடம் ஒத்திசைந்து
செல்கிறார்கள்....

மா. செந்தமிழனின் ஒத்திசைவு
பற்றிய கட்டுரையை
நீங்கள் படித்திருந்தால்
மேற்பட்டவைகள் ஏன்
கொண்டாட வேண்டுமென
எளிதாய் புரியும்,
இல்லையேல் சரியான பெண்ணை
காதலித்து  பாருங்கள்....

அவள் பெருவாரியான
புள்ளிகளில் என்னிடம்
ஒத்திசைந்து செல்கிறாள்
நான் மிக சரியாய்
இருப்பதாய் சொன்ன முதல்
பெண் அவள்,
சடாரென நம்ப மறுத்து
பின் ஒத்திசைந்து செல்கிறது
இதயம்....Thursday, August 11, 2016

காதல் தீ

சமரசமற்ற எதிர்காற்றில், 
நீ தீபமேற்றிய லாவகத்தில், 
என்னுள் காதல் தீ பற்றி எரிந்தது...

வானவில்

எதிர்பாராத தருணத்தில் 
என்னுள் வானவில்லாய் நுழைந்தவள், 
என் வாழ்வின் சுவர்களெங்கும் வண்ணங்களை தெறிக்கவிடுகிறாள், 

குழப்பம்

முதல் மணியிலேயே, 
அவள் அழைப்புகள்,
 ஏற்க்கப்பட வேண்டுமென, 
ஆழ்மனது கட்டளை இட்டதும், 
என் மேல் மனது செய்து முடித்தது..... 
என்ன நடக்கிறது என்னில்.....

ஒரு தேவதை

தறிகெட்டு பறக்கின்றேன் உண்மைதான்,
ஒரு தேவதையே வந்து,
சிறகுகள் தந்தபின் பறக்காமல் இருக்க, 
நான் என்ன நானா?(நானாக நானில்லை)...

காரணம்

எப்படி இப்படி கவிதை எழுதுகிறாய்?
என ஆச்சரியமாய் கேட்கிறாள்...!!!
உன்னை பார்த்துதான்...

என் கவிதைகள் ஏறக்குறைய
"ஈ" அடிச்சான் காபி வகையறாக்கள்,
உன்னை பார்த்து அப்படியே
எழுதுகிறேன்... அவ்வளவுதான்...
இது கவிதையெனில் நீயும் கவிதையே..
LHS = RHS ...

போல

என் வாழ்வு முழுவதும் காதல் நிரம்பி, ததும்பி நிற்கின்றது ..
அவ்வப்போது சில குவளைகள் அவள் அள்ளி பருகி செல்கிறாள்...
அவள் பருக பருக இன்னும் மூர்க்கமாய், தீர்க்கமாய் சுரக்கிறது என் காதல் நதி, தாய்ப்பால் போல......

கவனிக்காமல் விடப்பட்டவை

கவனிக்காமல் விடப்பட்ட,
   ஒரு நீர் காக்கையின் 
   நீள் வட்டப்பாதை போல்,
கவனிக்காமல் விடப்பட்ட, 
   சில்வியா பிலாத்தின் 
   தற்கொலை நினைவுகள் போல்,
கவனிக்காமல் விடப்பட்ட, 
   ஒரு கவியின் 
   பின்னிரவு கவிதைகள் போல்,

நானும்,
கவனிக்காமல் விடப்பட்டவைகளுக்கான,
   ஒரு ஒழுங்கில் 
    என் வாழ்வை வாழ்ந்தேன், நேசித்தேன்....

நீ வந்தாய்,
      எவற்றையும் கவனிக்காதது போல் 
      எல்லாவற்றையும் கவனிக்கிறாய்....

 என்னுள் 
     ஒரு நீர் காக்கை 
      உயரப்பறந்து...
      தற்கொலை நினைவுகளை 
      தின்று தீர்த்து....
      கவியின் அங்கீகாரத்தை 
      அள்ளி வீசி செல்கின்றது...Friday, March 11, 2016

சுழன்றடிக்கும்

சுழன்றடிக்கும் காற்றாடி
படபடக்கும் விகடன்,
பெய்யாத மழை
எழுதாத கவிதை
மடிக்காத துணி
வராத உறக்கம்
சிரிக்காத புத்தர் ,
தனிமையின் வெம்மையை
காட்சிபடுத்த
எவ்வளவு மெனகெட வேண்டிஇருக்கு பாருங்கள்...

அது

பணம், புகழ்
சட்டை, பேனா
பருப்பு கொழம்பு
என எல்லாம் கிடைத்தபின்னும்
ஏதோவொன்று மிச்சமிருக்கின்றது,
அது மிக்க்சாரக கூட இருக்கலாம்... 

போதும்

அயல் மொழி வெறுப்பு வேறு
தாய்மொழி காதல் வேறு
   உன் காதலியை காதலிக்கையில்
   அடுத்தவன் மனைவியை
   பழிக்க தேவையில்லை
   கண்ணியமாய் நடத்தினால்
   போதும் or போறும் ....
  

அமானுஷ்யம்

அமானுஷ்யம்
என்ற வார்த்தை பிடித்திருக்கிறது
ஆனாலும் கவிதை எழுதுமுன்
சற்று சிந்திக்கிறேன்
வடமொழி சொல்லோ
என்ற ஆராய்ச்சியில்
இறங்கையில்
whats up dude!!!
என நண்பன்
குறுஞ்செய்தி
அனுப்புகிறான்,
அத்தை பெண்ணை
வெண்டாமென்றுவிட்டு
அமெரிக்க ஆயாவை
கை பிடிப்பது போல்
உணர்கிறேன்...
அமானுஷ்யம் என்று
பதிலலித்தென்..... 

ஏன் நீ

எனக்கான கவிதையை
நானே எழுதிக்கொள்கிறேன்
சமையலும், துவைத்தலும்
சலவை செய்தலும்
எனக்கானதை பெரும்பாலும்
நானே செய்துகொள்கிறேன்,
ஏய் என்னவளுடன் வாழ்பவனே
அது எனக்கான வாழ்வடா
அதில் மட்டும் ஏன் நீ !!!!!
 

உறக்கம்

ஏ மின்விசிறியே
நல்லிரவில்
நன்றாக பாடுகிறாய்
வைரமுத்து போல்
வாலி போல்
ஒரு கவிதை சொல்லேன்
காதலில் அடிபட்டு கிடக்கிறேன்
நான் உறங்கவேண்டும் ....

தனிமை

நடு நிசி பால்கனி
ஆடாத மரங்கள்
பாடாத காகங்கள்
உறங்காத தெரு
குறுக்கும் நெடுக்குமாய்
விரவிக்கிடக்கிறது
தனிமை தெருவிலும்
மனதிலும்...