Monday, November 28, 2011

கதவு திறக்கப்பட்டது

கதவு திறக்கப்பட்டதும்
என்னை சுடப்பட்டது போல் ஒரு கனவு...
நல்லவேளை விழித்துக்கொண்டேன்
இல்லையேல்
காதல் இறந்திருக்கும்...

காதல் இல்லை

காதல் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை
மலர்கிறது அல்லது வாடுகிறது.....

சன்னல் திறந்திருக்கிறது

சன்னல் திறந்திருக்கிறது
காற்று உறைந்திருக்கிறது
நினைவு  நனைந்திருக்கிறது
ஒளி நிறைந்திருக்கிறது
கவிதை பிறந்திருக்கிறது
காதல் கொஞ்சம் வளர்ந்திருக்கிறது.....

காதலுக்கு எதிர்ப்பு

காதலுக்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் பெற்றோர்கள்
ஏன்
காதலுக்கு மரியாதை படத்தை ஏற்றுக்கொண்டார்கள்?
காதல் ஒரு இருதலைக்கொள்ளி எறும்பு....

பயணம்

பெண்மை  +     ஒரு வித ஈர்ப்பு             =  நீ
ஆண்மை   +    ஒரு விட்டில் மனது    =  நான்

நீ     +    நான்   = நாம்
நாம்                  = காதல்
நாம் - நீ          =  தோற்றுப்போன ஒரு காதல்
நாம் - நான் = தோற்றுப்போன ஒரு காதல்

நாம் - நீ          = நாம் -நான்
           - நீ          = - நான்
நான்- நீ           = வெறுமை
வெறுமை      = நீ - நான்

வெறுமையை தாண்டிய ஒரு பயணம் காதல் இல்லாமல் சாத்தியமில்லை.

தூது


குறுஞ்செய்தி பரிமாற்றம் கூட
தடைசெயப்பபட்டபின்..
நிலவிடம் காதலை சொல்லியனுப்ப
முயற்சித்தேன்....
என் வீட்டு ரோஜாவும்,
பூனையும்,
கிளியும்,
போட்டி போட்டுக்கொண்டு
என்னிடம் சண்டை இழுத்தன...
நாம் காதலை சுமந்து செல்ல ஒரு வாய்ப்பு கேட்டு...

காதல் கவிதை

நானும் அவளும் காதலிக்கும்போது,
நான் கவிதை குழந்தை பெற்றெடுக்கிறேன்,
அவள் என்னை கருவுறசெய்கிறாள்....

மூன்றாம் ஜாமத்தில்


மூன்றாம் ஜாமத்தில்,
முதலில் முதல் நாய்
பின் இரண்டாம் நாய்
பின் மூன்றாம் நாய்,
பின் முதல் நாய்,
இடைவிடாமல் குரைக்கின்றன அர்த்தமில்லாமல்,
     அவள் முதல், இரண்டாம்,
     மூன்றாம் சந்திப்புகளுக்கான
     நினைவுகளும் இப்படித்தான்
     குரைத்து தொலைக்கின்றன,
     நல்லவேளை,
    கடைசியில் கவிதை பிறந்துவிடுகிறது....

காயம்

அவள் வந்தது, போனது,
நடந்தது, காதலித்து,
கண் சுருக்கி சிரித்தது,
உதடு சுளித்து அழுதது,
எல்லாம் பசுமரத்து ஆணியாய் நெஞ்சில்,
"பசுமரத்தில் ஏன் ஆணி அடித்தீர்கள்?"
என் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை...


கழற்றி எறிந்த சட்டை

கழற்றி எறிந்த சட்டை,
கசக்கிபோட்ட காகிதம்,
குவிக்கப்பட்ட நினைவுகள்,
எல்லாவற்றையும்
ஒரு புள்ளியில்
இணைக்க முடிந்தால்,
காதல் தடயங்கள் கடைசியில் மிஞ்சும்.....

அகிலா அழகாக


அகிலா அழகாக இருக்கிறாள்,
ஷகிலா சொல்லவே வேண்டாம்,
கோகிலா குணமாய்,
விமலா வீரமாய்,
கவிதா கருத்தாய்,
அனிதா அமைதியாய்,
சரிதா சமர்த்தாய்,
நீ மட்டுமே
        முழுமையாய் இருக்கிறாய்.....

அறையில் தூசி

அறையில் தூசி,
நினைவில் காதல்,
இரண்டிருக்கும் உறவுமில்லை, தொடர்புமில்லை
காதல் எல்லாவற்றையும்
எதோ ஒன்றுடன் தொடர்புபடுத்தி பார்க்கும்,
கடைசியில் தோற்றுப்போனாலும்,
மீண்டும் முதலிலிருந்தே  ஆரம்பிக்கும்....

வளரக்க

ஒரு செடி வளர்த்தல் எப்படி?
எல்லோரிடமும் சற்றேறக்குறைய,
ஒரே பதில்....

ஒரு காதல் வளர்த்தல் எப்படி?
எல்லோரிடமும்  பதில் இருக்கிறது..
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்
காதலை போலவே.....


நடு இரவு

நடு இரவை தாண்டியாகிவிட்டது,
வெளியே ஒரு நாய் குரைக்கிறது,
பூ மலர்கிறது,
நியான் விளக்கு ஒளிர்கிறது,
நிலவு நகர்கிறது,
மேகங்கள் நகரமறுக்கிறது,
எல்லாம் சுமந்த என் இரவு மட்டும்
அவள் காதலால் நனைந்துகிடக்கிறது.....

காதலில் தெய்வீகம்


காதலில் தெய்வீகம் பற்றி
சிந்திக்கையில்,
காமத்திற்கான இடத்தை
தொலைத்தவன் போல்
நடித்தல் வேண்டின்,
நடித்துக்கொள்க...
காதலில் நடிப்பு
ஏமாற்றம், மௌனம் அழுகை, உவகை
எல்லாம் ஒரு கட்டில் குழந்தைகள்,
காதல் ஒரு கம்பீரமான தாய்...

கல் மலர்

காதல் காத்துக்கிடக்கையில்
கிணற்று கல்,
பூத்துகிடைக்கையில்
பூஜை  மலர்...

நிலவொளி


நிலவொளி பூமிக்கு சொந்தமானாலும்
நிலவு விண்ணை தாண்டுவதில்லை
அவள் கண்ணொளி என்
காதலுக்கு சொந்தமாகினும்,
அவள் கரை தாண்டுவதில்லை
காதல் கரைகளை கவனிப்பதில்லை...

விதி!!??!!

கால் தடுக்கி விழுந்தால் காயம்
காதல் தடுக்கி விழுந்தால் மீண்டும் அதே காதல்
இது நியுட்டனின் எந்த விதி...?

நீ மட்டும்


பூ சூட,
புன்னகை வெளிப்படுத்த,
பொன்னகை அணிய,
புத்தாடை உடுத்த,
புல்லாங்குழல் வாசிக்க,
பூவை அவள் மட்டும் காதலிக்க..

என்ன இது?

கண்மூடி,
மனது ஒடுக்கி
கால் மடித்து,
ஒரு தவம் செய்ய தயாரானேன்,
கடவுளாய் வந்தவள்
காதல் தந்தாள்
காதல் வரமா? சாபமா?
முந்தைய கவிதையே
முற்றுப்பெறாமல் தவிக்கிறது...
இதில் தினமொரு கவிதையாய்
காதல் வரம் தருகிறாள் அவள்....

இரவும் நிலவும்


இரவில் நிலவின் நகர்வு
ஒரு அறிவியல் நிகழ்வு,
இதயத்தில் அவள் நினைவின் நகர்வு,
அறிவியலும் இல்லை
நிகழ்வும் இல்லை
அது ஒரு தவம்....

பூ புன்னகை

பூ கொடியில் மலர்கிறது
புன்னகை உதட்டில்,
அவள் மட்டும்
மௌனத்தில் மலர்கிறாள்....