Thursday, March 24, 2011

நீ வரும் பாதையில்

நீ வரும் பாதையில் காத்திருக்கிறேன்
எதிர் வரும் ஆண்கள் யாவரும்
உன்னைபோலவே இருக்கிறார்கள்,
பெண்கள் உன்னை போலவே தலைகோதுகிறார்கள்,
வீசும் தென்றல்,
பாடும் பறவை,
நகராத கடிகாரமுள்,
நகர்ந்துகொண்டே கதைக்கும் மனிதர்கள்,
பறக்காத தனித்த கணத்த காகிதப்பை,
உதிர்ந்து கிடக்கும் ஒற்றை ரோசா,
தவறவிடப்பட்ட ஒரு சாவிக்கொத்து,
என எல்லாமும் எதோ ஒரு
விதத்தில் உன்னை மட்டுமே
நினைவுபடுத்துகின்றன
அல்லது
என் நினைவில்
உன்னைத்தவிர வேறதுவும் இல்லை....

2 comments:

திருவாரூர்காரன் said...

ஆரம்பத்துல அப்டிதான் இருக்கும்...! அப்பறம் எதிர்த்தாப்ல நெஜமாவே வந்தாலும் பார்க்காத மாதிரி போகணும் போல தோணும்.....! :)

சிவமஞ்சுநாதன் said...

ha ha ha ...:-)