Tuesday, March 22, 2011

யாரு சார் அந்த பிகரு

@வெளியூர்க்காரன்: யாரு சார் அந்த பிகரு...? :)

நான் எந்த பொன்னுக்க இவளோ உருகி கவிதை எழுதுறேன்னு வெளியூர் அவர் ஸ்டைல்-ல இந்த கேள்விய என்கிட்டே கேட்டாரு
நானும் உங்கள மாதிரியே சரோஜா படம் பார்த்துட்டு இந்த கேள்விய ரொம்ப ரசிச்சுட்டு, ரொம்ப நட்பா ஒரு புன்னகை கொடுத்துட்டு
விட்டுட்டேன்...

ஆனா ரெண்டவாது முறையா, இதே கேள்வி அழுத்தமா வந்தப்போ கண்டிப்பா இதுக்கு பதில் சொல்லனுமுன்னு தோனுச்சு..

அதன் அவருக்கு சொல்றேன் .... உங்களுக்கும் விருப்பம் இருந்த கீழ படிங்க...
என் கவிதைகள் சின்னதா இருந்தாலும் அதுக்கு பின்னாடி இருக்கற காதலும், அந்த காதல கைப்பற்ற நான் போராடிய போராட்டங்களும் ரொம்ப கடுமையானது அப்படின்னு நானே சொல்லிகிட முடியாது...

ஒரு 6 வருஷம் என்கூட பின்னோக்கி பயணம் செஞ்சா என் காதல் கதைய உங்ககிட்டு மனம் விட்டு சொல்ல முடியும்....அப்போ உங்களுக்கு சுலபமா புரியும்...

என் கைய பிடிசிக்குங்க....
என்னோட காதலி இடத்துல நீங்க இருங்க...
என் தேவதைகிட்ட சொல்லற அதே உணர்வுடன் உங்ககிட்ட சொல்றேன்..
இனிமேல் நீ எனப்படுவதேல்லாம் நீயல்ல..
காதல் எனப்படுவதும் காதல் மட்டும் அல்ல ஒரு தவமும் கூட...

அறிமுகம்:
நான்: CIT கல்லூரியில் MCA மூன்றாம் ஆண்டு மாணவன்
அவள்: அதே கல்லூரியில் இளங்கலை பொறியில் இறுதி ஆண்டு மாணவி
வருடம் : 2006

----------------------------------------------------------------------
உனக்கும் எனக்குமான உறவு எந்த புள்ளியில் ஆரம்பித்தது?
எனக்கு மிகச்சரியாக நினைவிலிருக்கிறது 11.06.2006 மதியம் 3 மணி, உன் விழிஈர்ப்புவிசை சற்று அதிகமாக இருந்த நேரம்...

TCS campus interview முதல் சுற்றில் நுழைய காத்திருந்தேன்...

வெள்ளை உடை தேவதையாய் என் கண் முன்னே நீ..
உன் ஓரப்பர்வைக்காக காத்திருந்தேன்
என்னை உன் கண்களால் கொன்று விட்டு
உயிரை பிடுங்கி,
இதயம் திருடி,
சுவாசம் தடுத்து,
எவ்வளவு வன்முறைகள் என்னுள்!!!
கடைசிவரை உன்னுள் எந்த சலனமும் இல்லை.....

எனக்கான நேர்முகத்தேர்வு நேரம் மாலை 4:40 எனதெரியாமல் காலை 9:00 மணியிலிருந்து தறிகெட்டு திரிந்தேன்...
உன் கண்கள் என்னை அசைவற்று போகச்செய்தன,
எவ்வளவு நேரம் உன்னை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன் தெரியவில்லை!!!!!!!

உடல் வெளுத்து
உணர்வு மறந்து
நான் நிற்க
நினவுபடுத்த தேவை இல்லாத தேவதைகளின் வெள்ளை உடையுடன்,
சாலையின் மறுபக்கம் நீ..
உன் பார்வை வரம் கிடைத்து 10 நொடிகளுக்குள் எல்லாம்முடிந்து விட்டது..
"இதயம் காணவில்லை" என் கூப்பாடு போடுவதில் இனி எந்த அர்த்தமும் இல்லை என் புரிந்தது...

என் இனிய தேவதையே
* நீ எப்போது பூமிக்கு வந்தாய்?

* என் கண்ணில் படாமல் இவ்வளவு நாளாய் என் கண்ணாமூச்சி காட்டினாய்?

* எனக்கு முன் எதவும் தெரியாதவள் போல நின்றவளே, என் இதயம் காணமல் போனது நிஜமாகவே உனக்கு தெரியாதா?

* கண்டவுடன் காதலில் நம்பிக்கை இல்லாதவனின் நம்பிக்கையை குழைக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது?

........tcs- இல் வேலைகிடத்துவிட்டது ..................

---------------------------------------------------------------------------------

-அடுத்த பதிவில் மீண்டும் தொடர்கிறேன்

2 comments:

திருவாரூர்காரன் said...

Sir...!

Ippavaacchum sollunga sir..?

Yaaruthaan sir antha figuru..?

:)

சிவமஞ்சுநாதன் said...

அது எங்க காலேஜ்ல படிச்ச பொண்ணு,
ஆனா வேற துறை,
அப்பவே முடிவு பண்ணிட்டேன்,
அவளத்தான் காதலிக்கனும்ன்னு,
ஆனா
அப்போ காதலை சொல்ல முடியல,
அப்புறமா
அதே பொண்ணு எங்க கம்பெனில வந்துசேர்ந்தது,
அப்போ போய் காதலை சொன்னேன்
அப்புறமா பதில் சொல்றேன்னு சொல்லிட்டு,
அடுத்த நாள் வந்து
அழுதுகிட்டே முடியாதுன்னு சொல்லிட்டா
அந்த காதல்தான் இவ்வளவு கவிதைக்கும்
அடிப்படை காரணம்...
:-)