Monday, November 28, 2011

கதவு திறக்கப்பட்டது

கதவு திறக்கப்பட்டதும்
என்னை சுடப்பட்டது போல் ஒரு கனவு...
நல்லவேளை விழித்துக்கொண்டேன்
இல்லையேல்
காதல் இறந்திருக்கும்...

காதல் இல்லை

காதல் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை
மலர்கிறது அல்லது வாடுகிறது.....

சன்னல் திறந்திருக்கிறது

சன்னல் திறந்திருக்கிறது
காற்று உறைந்திருக்கிறது
நினைவு  நனைந்திருக்கிறது
ஒளி நிறைந்திருக்கிறது
கவிதை பிறந்திருக்கிறது
காதல் கொஞ்சம் வளர்ந்திருக்கிறது.....

காதலுக்கு எதிர்ப்பு

காதலுக்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் பெற்றோர்கள்
ஏன்
காதலுக்கு மரியாதை படத்தை ஏற்றுக்கொண்டார்கள்?
காதல் ஒரு இருதலைக்கொள்ளி எறும்பு....

பயணம்

பெண்மை  +     ஒரு வித ஈர்ப்பு             =  நீ
ஆண்மை   +    ஒரு விட்டில் மனது    =  நான்

நீ     +    நான்   = நாம்
நாம்                  = காதல்
நாம் - நீ          =  தோற்றுப்போன ஒரு காதல்
நாம் - நான் = தோற்றுப்போன ஒரு காதல்

நாம் - நீ          = நாம் -நான்
           - நீ          = - நான்
நான்- நீ           = வெறுமை
வெறுமை      = நீ - நான்

வெறுமையை தாண்டிய ஒரு பயணம் காதல் இல்லாமல் சாத்தியமில்லை.

தூது


குறுஞ்செய்தி பரிமாற்றம் கூட
தடைசெயப்பபட்டபின்..
நிலவிடம் காதலை சொல்லியனுப்ப
முயற்சித்தேன்....
என் வீட்டு ரோஜாவும்,
பூனையும்,
கிளியும்,
போட்டி போட்டுக்கொண்டு
என்னிடம் சண்டை இழுத்தன...
நாம் காதலை சுமந்து செல்ல ஒரு வாய்ப்பு கேட்டு...

காதல் கவிதை

நானும் அவளும் காதலிக்கும்போது,
நான் கவிதை குழந்தை பெற்றெடுக்கிறேன்,
அவள் என்னை கருவுறசெய்கிறாள்....

மூன்றாம் ஜாமத்தில்


மூன்றாம் ஜாமத்தில்,
முதலில் முதல் நாய்
பின் இரண்டாம் நாய்
பின் மூன்றாம் நாய்,
பின் முதல் நாய்,
இடைவிடாமல் குரைக்கின்றன அர்த்தமில்லாமல்,
     அவள் முதல், இரண்டாம்,
     மூன்றாம் சந்திப்புகளுக்கான
     நினைவுகளும் இப்படித்தான்
     குரைத்து தொலைக்கின்றன,
     நல்லவேளை,
    கடைசியில் கவிதை பிறந்துவிடுகிறது....

காயம்

அவள் வந்தது, போனது,
நடந்தது, காதலித்து,
கண் சுருக்கி சிரித்தது,
உதடு சுளித்து அழுதது,
எல்லாம் பசுமரத்து ஆணியாய் நெஞ்சில்,
"பசுமரத்தில் ஏன் ஆணி அடித்தீர்கள்?"
என் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை...


கழற்றி எறிந்த சட்டை

கழற்றி எறிந்த சட்டை,
கசக்கிபோட்ட காகிதம்,
குவிக்கப்பட்ட நினைவுகள்,
எல்லாவற்றையும்
ஒரு புள்ளியில்
இணைக்க முடிந்தால்,
காதல் தடயங்கள் கடைசியில் மிஞ்சும்.....

அகிலா அழகாக


அகிலா அழகாக இருக்கிறாள்,
ஷகிலா சொல்லவே வேண்டாம்,
கோகிலா குணமாய்,
விமலா வீரமாய்,
கவிதா கருத்தாய்,
அனிதா அமைதியாய்,
சரிதா சமர்த்தாய்,
நீ மட்டுமே
        முழுமையாய் இருக்கிறாய்.....

அறையில் தூசி

அறையில் தூசி,
நினைவில் காதல்,
இரண்டிருக்கும் உறவுமில்லை, தொடர்புமில்லை
காதல் எல்லாவற்றையும்
எதோ ஒன்றுடன் தொடர்புபடுத்தி பார்க்கும்,
கடைசியில் தோற்றுப்போனாலும்,
மீண்டும் முதலிலிருந்தே  ஆரம்பிக்கும்....

வளரக்க

ஒரு செடி வளர்த்தல் எப்படி?
எல்லோரிடமும் சற்றேறக்குறைய,
ஒரே பதில்....

ஒரு காதல் வளர்த்தல் எப்படி?
எல்லோரிடமும்  பதில் இருக்கிறது..
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்
காதலை போலவே.....


நடு இரவு

நடு இரவை தாண்டியாகிவிட்டது,
வெளியே ஒரு நாய் குரைக்கிறது,
பூ மலர்கிறது,
நியான் விளக்கு ஒளிர்கிறது,
நிலவு நகர்கிறது,
மேகங்கள் நகரமறுக்கிறது,
எல்லாம் சுமந்த என் இரவு மட்டும்
அவள் காதலால் நனைந்துகிடக்கிறது.....

காதலில் தெய்வீகம்


காதலில் தெய்வீகம் பற்றி
சிந்திக்கையில்,
காமத்திற்கான இடத்தை
தொலைத்தவன் போல்
நடித்தல் வேண்டின்,
நடித்துக்கொள்க...
காதலில் நடிப்பு
ஏமாற்றம், மௌனம் அழுகை, உவகை
எல்லாம் ஒரு கட்டில் குழந்தைகள்,
காதல் ஒரு கம்பீரமான தாய்...

கல் மலர்

காதல் காத்துக்கிடக்கையில்
கிணற்று கல்,
பூத்துகிடைக்கையில்
பூஜை  மலர்...

நிலவொளி


நிலவொளி பூமிக்கு சொந்தமானாலும்
நிலவு விண்ணை தாண்டுவதில்லை
அவள் கண்ணொளி என்
காதலுக்கு சொந்தமாகினும்,
அவள் கரை தாண்டுவதில்லை
காதல் கரைகளை கவனிப்பதில்லை...

விதி!!??!!

கால் தடுக்கி விழுந்தால் காயம்
காதல் தடுக்கி விழுந்தால் மீண்டும் அதே காதல்
இது நியுட்டனின் எந்த விதி...?

நீ மட்டும்


பூ சூட,
புன்னகை வெளிப்படுத்த,
பொன்னகை அணிய,
புத்தாடை உடுத்த,
புல்லாங்குழல் வாசிக்க,
பூவை அவள் மட்டும் காதலிக்க..

என்ன இது?

கண்மூடி,
மனது ஒடுக்கி
கால் மடித்து,
ஒரு தவம் செய்ய தயாரானேன்,
கடவுளாய் வந்தவள்
காதல் தந்தாள்
காதல் வரமா? சாபமா?
முந்தைய கவிதையே
முற்றுப்பெறாமல் தவிக்கிறது...
இதில் தினமொரு கவிதையாய்
காதல் வரம் தருகிறாள் அவள்....

இரவும் நிலவும்


இரவில் நிலவின் நகர்வு
ஒரு அறிவியல் நிகழ்வு,
இதயத்தில் அவள் நினைவின் நகர்வு,
அறிவியலும் இல்லை
நிகழ்வும் இல்லை
அது ஒரு தவம்....

பூ புன்னகை

பூ கொடியில் மலர்கிறது
புன்னகை உதட்டில்,
அவள் மட்டும்
மௌனத்தில் மலர்கிறாள்....

Monday, July 18, 2011

இருளின் ஒளியே

இருளின் ஒளியும்

ஒளியின் இருளும்
ஒரே வண்ணம்...
தோற்கும் காதலின்,
ஜெயிக்கும் காமத்தின்
வண்ணம்.....

Friday, July 15, 2011

ஒரு காதல் என்பது

சில காதல்களை துணிச்சலுடன் பிரித்து தொலைத்திருக்கிறேன்

சில காதல்களை சேர்த்து வைத்திருக்கிறேன்
சில காதல் கதைகளை பரிகாசம் செய்து சிரித்திருக்கிறேன்
சில காதலர்களை நேசித்திருக்கிறேன்
சில காதலர்களை எச்சரித்திருக்கிறேன்
ஒரே ஒரு காதல் தோல்வி என்னை தாக்கியதும்
முதல் முறை காதலுக்காக பயந்தேன்.
காதல் ஒரு பயம் கலந்த தேன்...

எல்லா விருப்பங்களும்

எல்லா விருப்பங்களும்
கற்பனைகளும்
கனவுகளும்
எதார்த்தத்தின் முன் மண்டியிட்டு,

புதிய விருப்பங்களுக்கான
கற்பனைகளுக்கான
கனவுகளுக்கான
விதிகளை எழுதிசெல்கின்றன..

வெற்றியும் தோல்வியும்

வெற்றியும் தோல்வியும்
கலந்ததுதான் வழ்கையெனில்
என் ஒருதலை காதலின்
கடைசி சந்திப்பில்
அவள் அழுதபோது
நான் வெற்றி பெற்றேனா? தோல்வி கற்றேனா?

சொல்லாமல் விடப்பட்டவைகள்

சொல்லாமல் விடபட்டவைகளின் தொகுப்பில்
ஒரு காதல்
சில வார்த்தைகள்
சில உண்மைகள்
சில வரலாறு
என அட்டவணை நீண்டு கொண்டே செல்கிறது,

கேட்காமல் விடபட்டவைகளின் தொகுப்பில்
ஒரு முத்தம்
சில கேள்விகள்
சில கடன்கள்
சில மன்னிப்புகள்
சில கதைகள்,

காலகண்ணாடியில் நம்மை சரிசெய்ய
முயற்சித்து தோற்றுப்போனபின்,
எல்லோரும் நிறை மனிதர்களாக
நடித்து செல்கிறோம்....

Sunday, June 12, 2011

நீ சென்ற பாதை

நீ நடந்து சென்ற பாதையில்
எந்த வசந்தகாலத்தின் தடங்களும் பதியவில்லை

நீ அருந்தி சென்ற கோப்பையில்
எந்த வசந்தந்தின் வாசமும் வீசவில்லை

நீ பயணம் சென்ற பேருந்தில்
எந்த ஏக்கத்தின் பெருமூச்சும் கேக்கவில்லை

நீ கசக்கி போட்ட காகிதத்தில்
ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை

நீ முத்தமிட்ட கன்னத்தில்
எந்த காயங்களும் இல்லை

நீ கட்டிக்கொண்ட தலையணையில்
எந்த ஏமாற்றமும் இல்லை

நீ கடந்து சென்ற என்னில் மட்டும்
ஒரு வசந்தகாலத்தின் தடம் பதிந்திருக்கிறது
ஒரு வசந்தத்தின் வாசம் வீசுகிறது
ஒரு கூடை கண்ணீர்
ஒருவித காயம்
ஒரு ஏமாற்றம்
ஒரு பழைய காதலும் புதுப்பிக்கப்பட்டது.

Saturday, June 11, 2011

காதல் ஒரு கண்ணாடி

காதல் ஒரு கண்ணாடி
வெற்றிபெறுபவர்கள் கையில் அலங்காரமாக..
தோல்வியுருபவன் கையில்

உடைந்த சில்லுகளாக..

காதல் ஒரு

காதல் ஒரு தொடர்கதை
காதல் ஒரு பரவசமழை
காதல் ஒரு உணர்வுநெருப்பு
காதல் ஒரு காந்தஈர்ப்பு
காதல் ஒரு கானக காணம்
காதல் ஒரு கவியின் கருவறை
காதல் ஒரு சுகம், வரம், சாபம், வெற்றி, தோல்வி, வாழ்வு, சாவு
காதல் ஒரு விருப்பு, வெறுப்பு, வலி, ரணம், மருந்து, விஷம், வெறுமை, முழுமை......

காதல் ஒரு குழப்பவிதை...இயக்க விசை....

நாட்குறிப்பு

நிழல்களை பற்றிய  நாட்க்குறிப்பில்
உன் நினைவுகளை பற்றி எழுதிவிடுகிறேன்

நினைவுகளை பற்றிய நாட்க்குறிப்பில்
உன்னுடனான நிகவுகளை பற்றி எழுதிவிடுகிறேன்

நிகழ்வுகளை பற்றிய நாட்க்குறிப்பில்
உன்னில் உறங்கும் நிதர்சனங்களை எழுதிவிடுகிறேன்

நிதர்சனங்களை பற்றிய நாட்க்குறிப்பில்
உன்  நிந்தனகளை எழுதிவிடுகிறேன்

நிந்தனகளை பற்றிய நாட்க்குறிப்பில்
நம் காதலின் நிகழ்விடங்களை  எழுதிவிடுகிறேன்

எங்கேயும் நான் காதலை எழுத எத்தனிக்கவுமில்லை,
எங்கேயும் காதல் என்னை விட்டு விலகவுமில்லை....

பொழுதுகள்

பின்னிரவு பொழுதுகளில் நிறைவேறாத காதல்,

இளங்காலை பொழுதுகளில் கனவின் மிச்சங்கள்,
முன்னிரவு நேரங்களில் வராத குறுஞ்செய்திகள்,
இளமாலை பொழுதுகளில் பேசாத வார்த்தைகள்,
எல்லா பொழுதுகளும்
உன் இருப்பை நினவுபடுதிக்கொண்டே நகர,
நகராத நம் காதல் மட்டும்
உன் இருப்பை மறக்கசொல்லி
என்னை நகர்த்திக்கொண்டே செல்கிறது...

Sunday, June 5, 2011

முழுமை

வாழ்வு  முழுமைக்குமான ஒரு காதல் கிடைத்ததும்
வாழாத வாழ்க்கையை
வாழ்ந்து பார்க்க துடிக்கிறது மனது
வஞ்சியவள் கண்ணசைவில்
வாழக்கையின் அர்த்தம் ஒளிந்துகொண்டு
கண்ணாமூச்சி காட்டும் வரை 
வாழாத வாழ்க்கை  ஒரு தொடர்கதையாய்
தொடரும்...

கா.மு கா.பின்

காதலுக்கு முன்
என்னிடம் ஒரு ஓஷோ புத்தகம்
ஒரு தபு சங்கர் கவிதை
பிறக்காத நம் கவிதை குழந்தைகள்
வாழாத ஒரு வாழக்கை

(கிடைக்காத)காதலுக்கு பின்
ஒரு நூறு கவிதை குழந்தைகள்
ஒரு ஒடிந்து போன மனது
ஒரு தேவதையின் நினைவுகள்
வாழ்வு  முழுமைக்குமான ஒரு காதல்
தேவதைகாதலன் என்ற அங்கீகாரம்

வாழாத வாழ்க்கை இன்னமும் காத்திருகிறது
ஒரு மயிலிறகு மனதுடன்.....

மாற்றம்

ஒரு பாமரனை
காதலனாய் மாற்றினாய்,
உன்னை கேட்க ஆளில்லை

ஒரு காதலனை
தேவதை காதலனாய் மாற்றினாய்,
உன்னை கேட்க ஆளில்லை

ஒரு தேவதைகாதலனை பாமரனாய் மாறசொல்கிறாய்
இப்பொழுதும் உன்னை கேட்க ஆளில்லை

காதல் என்கின்ற ஒரு கம்பீரமான ஆளுமை
எல்லாவற்றுக்கும் துணை நிற்கும் வரை
உன்னை கேட்க ஆள் இருக்கபோவதில்லை..

தருணங்கள்

வேண்டாம் விட்டுவிடுங்கள் என
எளிதாய் சொல்லிவிட்டாய் .....
உன்னுடன் பேசாமல்
உலக காதல் கவிதை எழுதமுடியாது என்னால்,

ஒரு ராஜ கவி
பாமரனாய் மாறும் தருணத்தை விட,

ஒரு தேவதைகதாலன்
பாமரனாய் மாறும் தருணத்தை விட
ஒரு கருணை கொலைக்கான தருணத்தை வரவேற்கிறேன்..

வராத குறுஞ்செய்திகள்

வராத  உன் குறுஞ்செய்திக்கு காத்திருந்த,
நகராத என் இரவுகளில்
உன்னுடன் வாழும் ஆசை
என்னில் வடியவே இல்லை....
 
 

Thursday, March 24, 2011

விருப்பு வெறுப்பு

நீ என்னை வெறுக்கிறாயா?
என்ற கேள்விக்கு
இல்லை என்றாய்
என்னை விரும்புகிறாயா?
என்ற கேள்விக்கும்
இல்லை என்றாய்
ஒரே உறைக்குள் இரண்டு கத்திகள்

ஒரு காதல்

காதல் வேண்டாம் என்பதற்கும்
ஏன் வேண்டாம் என்பதற்கும்
சரியாய் பதில் கிடைக்காதபோது
ஒரு காதல் கிடைக்கிறது....

தவிர்க்கமுடியாதவை

ஒரு விட்டுக்குகொடுத்தலுக்கு தயாராகும்போது, ஆணுக்குள் மௌனங்களும்
பெண்ணுள் விசும்பல்களும்
தவிர்க்கமுடியாதவை...

ஒரு உறுதியான மௌனம்

ஒரு உறுதியான மௌனத்தோடு அவள் இருந்தாள்,
நான்

ஒரு புன்னகை கேட்டபோது
ஒரு கோப்பை தேனீர் கேட்டபோது
ஒரு சந்திப்பு கேட்டபோது

ஒரு உறுதியான மௌனத்தோடு அவள் இருந்தாள்,
நான்

ஒரு குறுஞ்செய்தி அனுப்பியபோது
ஒரு குளிர் பார்வை தந்தபோது
ஒரு எதிர்பாராத நெருக்கத்தில் நின்றபோது
ஒரு ஏக்கபெருமூச்சு தந்தபோது
ஒரு கதை சொன்னபோது
ஒரு கவிதை எழுதியபோது
ஒரு உறுதியான மௌனத்தோடு அவள் இருந்தாள்,

அவள்
ஒரு கவிதைதரும் போது
ஒரு முடியாது சொன்னபோது
ஒரு அலட்சியம் செய்யும்போது
ஒரு அவசரவிலகலுக்கு எத்தனிக்கும் போது
ஒரு நேர் பார்வை தராதபோது
ஒரு குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பதபோது

ஒரு உறுதியான மௌனத்தோடு அவள் இருந்தாள்,

நான்  ஒரு காதல் கேட்டபோதும் கூட.

நீ வரும் பாதையில்

நீ வரும் பாதையில் காத்திருக்கிறேன்
எதிர் வரும் ஆண்கள் யாவரும்
உன்னைபோலவே இருக்கிறார்கள்,
பெண்கள் உன்னை போலவே தலைகோதுகிறார்கள்,
வீசும் தென்றல்,
பாடும் பறவை,
நகராத கடிகாரமுள்,
நகர்ந்துகொண்டே கதைக்கும் மனிதர்கள்,
பறக்காத தனித்த கணத்த காகிதப்பை,
உதிர்ந்து கிடக்கும் ஒற்றை ரோசா,
தவறவிடப்பட்ட ஒரு சாவிக்கொத்து,
என எல்லாமும் எதோ ஒரு
விதத்தில் உன்னை மட்டுமே
நினைவுபடுத்துகின்றன
அல்லது
என் நினைவில்
உன்னைத்தவிர வேறதுவும் இல்லை....

Tuesday, March 22, 2011

யாரு சார் அந்த பிகரு

@வெளியூர்க்காரன்: யாரு சார் அந்த பிகரு...? :)

நான் எந்த பொன்னுக்க இவளோ உருகி கவிதை எழுதுறேன்னு வெளியூர் அவர் ஸ்டைல்-ல இந்த கேள்விய என்கிட்டே கேட்டாரு
நானும் உங்கள மாதிரியே சரோஜா படம் பார்த்துட்டு இந்த கேள்விய ரொம்ப ரசிச்சுட்டு, ரொம்ப நட்பா ஒரு புன்னகை கொடுத்துட்டு
விட்டுட்டேன்...

ஆனா ரெண்டவாது முறையா, இதே கேள்வி அழுத்தமா வந்தப்போ கண்டிப்பா இதுக்கு பதில் சொல்லனுமுன்னு தோனுச்சு..

அதன் அவருக்கு சொல்றேன் .... உங்களுக்கும் விருப்பம் இருந்த கீழ படிங்க...
என் கவிதைகள் சின்னதா இருந்தாலும் அதுக்கு பின்னாடி இருக்கற காதலும், அந்த காதல கைப்பற்ற நான் போராடிய போராட்டங்களும் ரொம்ப கடுமையானது அப்படின்னு நானே சொல்லிகிட முடியாது...

ஒரு 6 வருஷம் என்கூட பின்னோக்கி பயணம் செஞ்சா என் காதல் கதைய உங்ககிட்டு மனம் விட்டு சொல்ல முடியும்....அப்போ உங்களுக்கு சுலபமா புரியும்...

என் கைய பிடிசிக்குங்க....
என்னோட காதலி இடத்துல நீங்க இருங்க...
என் தேவதைகிட்ட சொல்லற அதே உணர்வுடன் உங்ககிட்ட சொல்றேன்..
இனிமேல் நீ எனப்படுவதேல்லாம் நீயல்ல..
காதல் எனப்படுவதும் காதல் மட்டும் அல்ல ஒரு தவமும் கூட...

அறிமுகம்:
நான்: CIT கல்லூரியில் MCA மூன்றாம் ஆண்டு மாணவன்
அவள்: அதே கல்லூரியில் இளங்கலை பொறியில் இறுதி ஆண்டு மாணவி
வருடம் : 2006

----------------------------------------------------------------------
உனக்கும் எனக்குமான உறவு எந்த புள்ளியில் ஆரம்பித்தது?
எனக்கு மிகச்சரியாக நினைவிலிருக்கிறது 11.06.2006 மதியம் 3 மணி, உன் விழிஈர்ப்புவிசை சற்று அதிகமாக இருந்த நேரம்...

TCS campus interview முதல் சுற்றில் நுழைய காத்திருந்தேன்...

வெள்ளை உடை தேவதையாய் என் கண் முன்னே நீ..
உன் ஓரப்பர்வைக்காக காத்திருந்தேன்
என்னை உன் கண்களால் கொன்று விட்டு
உயிரை பிடுங்கி,
இதயம் திருடி,
சுவாசம் தடுத்து,
எவ்வளவு வன்முறைகள் என்னுள்!!!
கடைசிவரை உன்னுள் எந்த சலனமும் இல்லை.....

எனக்கான நேர்முகத்தேர்வு நேரம் மாலை 4:40 எனதெரியாமல் காலை 9:00 மணியிலிருந்து தறிகெட்டு திரிந்தேன்...
உன் கண்கள் என்னை அசைவற்று போகச்செய்தன,
எவ்வளவு நேரம் உன்னை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன் தெரியவில்லை!!!!!!!

உடல் வெளுத்து
உணர்வு மறந்து
நான் நிற்க
நினவுபடுத்த தேவை இல்லாத தேவதைகளின் வெள்ளை உடையுடன்,
சாலையின் மறுபக்கம் நீ..
உன் பார்வை வரம் கிடைத்து 10 நொடிகளுக்குள் எல்லாம்முடிந்து விட்டது..
"இதயம் காணவில்லை" என் கூப்பாடு போடுவதில் இனி எந்த அர்த்தமும் இல்லை என் புரிந்தது...

என் இனிய தேவதையே
* நீ எப்போது பூமிக்கு வந்தாய்?

* என் கண்ணில் படாமல் இவ்வளவு நாளாய் என் கண்ணாமூச்சி காட்டினாய்?

* எனக்கு முன் எதவும் தெரியாதவள் போல நின்றவளே, என் இதயம் காணமல் போனது நிஜமாகவே உனக்கு தெரியாதா?

* கண்டவுடன் காதலில் நம்பிக்கை இல்லாதவனின் நம்பிக்கையை குழைக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது?

........tcs- இல் வேலைகிடத்துவிட்டது ..................

---------------------------------------------------------------------------------

-அடுத்த பதிவில் மீண்டும் தொடர்கிறேன்