Sunday, November 28, 2010

முழுமை

மதிய உணவுக்கு போக,
நண்பன் அழைத்தபோது,
கணிப்பொறிக்குள் இருந்து,
தலையை வெளியே எடுத்தேன்..
(blogala கவிதை எழுதி கொண்டிருந்தேன்)

பக்கத்தில் பல்வேறு
சந்தர்ப்பங்களில் அவள் சிந்திப்போன
கவிதைகளை
பொறுக்கி வைத்திருக்கும்
என் கவிதை நோட்டு புத்தகம்...

உடை மாற்றி காத்திருந்தேன் நண்பனுக்காக,
மேல மின்விசிறி மிக வேகமாய் சுழல,
TV-ல் "உன் விழியிலே, உன் விழியிலே" இளையராசா பாடல்,

மனதிற்கு இதம்
அவள் நினைவுகளுக்கு உரம்,
அவள் நினைவுகள் அடுக்கடுக்காய்
வந்து விழுந்தன...

எதற்காக இவ்வளவு கவிதைகள் எழுதுகின்றேன்,
யாருக்காக இந்த கவிதைகள் எழுதபட்டனவோ,
அவளே படிக்காத போது,
எப்படி இந்த கவிதைகள் முழுமை பெரும்?

என் கேள்விகளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை,
காற்று வந்து பக்கங்களை புரட்டிக்கொண்டு இருந்தது...
என்
முதல் வாசகன்..:-)
வழக்கம் போல்
பதிலேதும் சொல்லாமல்
குளிர்ச்சியை
முகத்தில் அறைந்து
மறைந்து போனது...
     என் கவிதைகள் முழுமைபெற்றன,
     காற்றில் அவள் சுவாசம் கலந்திருப்பதால்....

8 comments:

ப.செல்வக்குமார் said...

//காற்று வந்து பக்கங்களை புரட்டிக்கொண்டு இருந்தது...
என்
முதல் வாசகன்..:-)//

நல்லா இருக்குங்க .!!

Veliyoorkaran said...

@Siva.//
என் கவிதைகள் முழுமைபெற்றன,
காற்றில் அவள் சுவாசம் கலந்திருப்பதால்...////

சார்...எவ்ளோ நாளா கேக்குறேன்...சொல்லுங்களேன் சார். யாரு சார் அந்த பிகரு...? :)

மதி said...
This comment has been removed by the author.
மதி said...

தலைவா.. இந்தக் கவிதையில காதல் சொட்டச் சொட்டக் கொட்டுது.. ஆனா கவிதை ஒரு அவசரத்திலே எழுதிட்டீங்களோன்னு தோணுதே... ஆனா முடிவுல தூக்கி நிறுத்துறீங்க !!! நல்ல அனுபவம்.

சிவமஞ்சுநாதன் said...

@Mathi: Ama konjam avasarthilathan intha kavithai ezhuthinen...:-)

I was waiting for my friend and watching the note+TV by the time the poem came my friend came. still i wrote the poem and then moved out...

Thank you for the comments..

vinu said...

sogam viduththu; nigalkaalam purinthu intha valiyilirunthu neengal viraivil velivara piraarthikkirean

சிவமஞ்சுநாதன் said...

//Veliyoorkaran
சார்...
எவ்ளோ நாளா கேக்குறேன்...சொல்லுங்களேன் சார். யாரு சார் அந்த பிகரு...? :)
//


சரோஜா படம் வந்தப்போ ஒரு கவிதைக்கு நீங்க "யார் சார் அந்த பிகரு" அப்படின்னு கேட்டிங்க..
நீங்க காமெடி பன்னரிங்கன்னு நெனச்சு ரொம்ப ரசிச்சு சிரிச்சு விட்டுடேன்...
இப்போதான் தெரியுது நீங்க சீரியஸா இந்த கேள்விய கேட்டிங்கன்னு..
இதோ எழுத ஆரம்பிச்சிட்டேன் பதிலை..

சிவமஞ்சுநாதன் said...

@Vinu: sogam viduththu; nigalkaalam purinthu intha valiyilirunthu neengal viraivil velivara piraarthikkirean

//
காதலில் மட்டுமே சோகத்தில் கூட ஒரு சுகம் இருக்கு வினு...
நான் வெளியே வந்துட்டேன்...
ஆனா என்னோட கவிதைகள் அனைத்தும் ஒரே பெண்ணைபற்றி மற்றும் ஒரே காதலை பற்றின்னு நினைக்கும் பொது...ரொம்ப விசித்திரமா இருக்கு...