Sunday, November 28, 2010

முழுமை

மதிய உணவுக்கு போக,
நண்பன் அழைத்தபோது,
கணிப்பொறிக்குள் இருந்து,
தலையை வெளியே எடுத்தேன்..
(blogala கவிதை எழுதி கொண்டிருந்தேன்)

பக்கத்தில் பல்வேறு
சந்தர்ப்பங்களில் அவள் சிந்திப்போன
கவிதைகளை
பொறுக்கி வைத்திருக்கும்
என் கவிதை நோட்டு புத்தகம்...

உடை மாற்றி காத்திருந்தேன் நண்பனுக்காக,
மேல மின்விசிறி மிக வேகமாய் சுழல,
TV-ல் "உன் விழியிலே, உன் விழியிலே" இளையராசா பாடல்,

மனதிற்கு இதம்
அவள் நினைவுகளுக்கு உரம்,
அவள் நினைவுகள் அடுக்கடுக்காய்
வந்து விழுந்தன...

எதற்காக இவ்வளவு கவிதைகள் எழுதுகின்றேன்,
யாருக்காக இந்த கவிதைகள் எழுதபட்டனவோ,
அவளே படிக்காத போது,
எப்படி இந்த கவிதைகள் முழுமை பெரும்?

என் கேள்விகளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை,
காற்று வந்து பக்கங்களை புரட்டிக்கொண்டு இருந்தது...
என்
முதல் வாசகன்..:-)
வழக்கம் போல்
பதிலேதும் சொல்லாமல்
குளிர்ச்சியை
முகத்தில் அறைந்து
மறைந்து போனது...
     என் கவிதைகள் முழுமைபெற்றன,
     காற்றில் அவள் சுவாசம் கலந்திருப்பதால்....

தானியங்கி குறுஞ்செய்தி

முன் குறிப்பு:
எனக்கும் அவங்களுக்கும் சண்டை...
ரெண்டுபேரும் பேசாம 4 மணி நேரம் இருந்தோம்
அவள் அழைப்பேசியில் இருந்து ஒரு குறுஞ்செய்தி, "9 இலக்க எண்ணை தங்கி வந்தது" அவளிடன் கேட்டேன்...
தான் எதுவும் அனுப்பவில்லையெனவும்..குறுஞ்செய்தி தானாய் வந்திருக்குமென கூறினால்...


இனி என் பதில்:

மனசங்களுக்கு மனசு சரி இல்லைன்னா,
தனியா பேசறமாதிரி,
மொபைல்க்கு மனசு,
சரி இல்லைனா,
தானே SMS அனுப்பிக்கும் போல,
என்ன Problem-nnu பார்த்து சரி பண்ணாதே...
நாம பேசும் போது நமக்காக பேசற மொபைல்,
நாம தனியா பேசும்போது,
அதவும் தனியா பேசறது,
ஒரு வித அன்பின் 
வெளிப்பாடா கூட இருக்கலாம்....

Good Night

குட்டிமான்னு
பெயர் வைக்கப்பட்டு,
குரங்கு என்றழைக்கப்படும்
ஒரு தேவதைக்கு
இந்த தேவதைகாதலனின்
இரவு நேர வணக்கங்கள்..
உன் இரவு முழுவதும்
கனவுகளால் நிறைந்து கிடக்கட்டும்,
உன் கனவுகள் முழுவதும்
என் நினைவுகளால் நனைந்து கிடக்கட்டும்...

மதம்பிடித்த தலையணை

உறக்கத்தில் நீ சிந்தும் புன்னகை தின்று,
உன் தலையணைக்கு மதம் பிடிக்கட்டும்,
உன் விரல் தீண்டிய போர்வை,
மலர் இதழாய் மாறி,
உன் மென்மை கண்டு போசுங்கட்டும்,
உன் பாதம் தீண்டிய அணல் காற்று,
தென்றலாய் மாறி,
இந்த தேசத்தையும் உன் தேகத்தையும் குளிர்விக்கட்டும்,
மொத்தத்தில் உன் இருப்பும், விழிப்பும்
உலகத்தின் சமநிலையை கெடுத்து
என் கவிதைக்கு காரணமாய் மாறிப்போகட்டும்....

Saturday, November 27, 2010

எது அழகு?

அரைகுறை ஆடையில்,
அங்கம் தெரிவித்து,
அகிலத்தை அசைப்பதாய் நினைக்கும்,
ஆப்பிள் நிறத்தவளே கேள்,
உனதருகில் இருக்கும்,
கோதுமை நிற அழகியின்,
சுடிதார் அசைவில் சிக்கிக்கொண்டு,
அவள் கண்ணசைவில்
விழும் கவிதைகளுக்காய்,
காத்துக்கிடக்கும் நான்,
உனக்கு புரியாத புதிர்,
வளையாத திமிர்,
எனக்கு நீ..
புரியும் பதர்,
வளையும் செங்கோல்....

மாயவலை

அவள் என்னை காதலித்தாள்,
நான் இவளை காதலித்தேன்,
இவள்மேல் கொண்ட காதலால்,
அவள் காதல் புரியவில்லை எனக்கு,
காலம் கணிந்தது,
அவள் காதலை நான் புரிந்துகொண்ட அதே கணத்தில்,
நான் இவள் மேல் கொண்ட காதலை அவள் புரிந்துகொண்டாள்,
அவள் விலகினாள்,
இவளிடம் காதலை சொன்னேன்,
இவள் அவனை காதலிப்பதாய் சொல்லி,
என் காதலை மறுதலித்தாள்,
இறுதியில்
இவளும் அவனும் இணையவில்லை,
நானும் அவளும்/இவளும் இணையவில்லை,
காதல் ஒரு மாயவலை,
நாங்கள் நால்வரும் ஒரே காரணத்திற்காய் சிக்கிக்கொண்டு,
வெவ்வேறு காரணங்களுக்காய் விடுவிக்கப்பட்டோம்,
பின்பொருநாள்
அவள் திருமணம் செய்துகொண்டாள்,
இவள் நிச்சயம் செய்துகொண்டாள்,
அவன் Tasmac-ல் account open செய்துகொண்டான்,
நான் கவிதை எழுதத்துவங்கினேன்....
காதல் ஒரு மாயவலை.....

கடைசிவரை

Gudnite சொல்லி புன்னகையுடன்,
உறக்கம் தழுவினான் நண்பன்,
உன் Gudnite குறுஞ்செய்திக்கு,
Miss U பதில் அனுப்ப காத்துகிடந்த
எனக்கு,
கடைசிவரை உறக்கம் வரவேயில்லை,
உன் Gudnite குறுஞ்செய்தியையைப்போலவே....

வேறுபாடுகள்

SMTP, POP3 protocol
வேறுபாடுகளை
விவாதிக்கிறார்கள் நண்பர்கள்,
உன் உதட்டுசுழிப்பிற்கும்,
புருவ நெளிவுக்குமான
வேறுபாடுகளை
புரிந்துகொள்ள முயலும்
என்னைப்போலவே
அவர்களும்
முடிவை எட்டவேயில்லை...
செய்தி பரிமாற்றம் சரியாய் நடக்கும் வரை,
விதிகளை பற்றி கவலை எதற்கு?

அலைகள் ஏன் ஓய்வதில்லை?

நினைவலைகள் அற்ற,
மனதிற்க்காய் மனம் காத்துகிடந்தது,
அமைதிபுயலாய் நீ வந்தாய்,
அமைதி உன்னிடம்,
புயல் என்னிடம்,
பின் எப்படி
அலைகள் ஓயும்?

காற்றில் யாரோ

அவளிடமிருது திரும்ப வராது எனதெரிந்தும்
அனுப்பிய கடைசி என் 'இனிய இரவுகள்'(gud nite) குறுஞ்செய்தி,
காற்றில் அலைந்த அதே நேரத்தில்,
அதே நோக்கத்தில்,
அனுப்பப்பட்ட வேறோருவளின்
குருஞ்செய்தியுடன் மோதிக்கொண்டது,
என்ன பேசியிருக்கும்!?!
ஒரு வறட்டுபுன்ன்கையை தவிர...

நான் வாங்கிய பரிசுப்பொருள்

ஒற்றை ரோசா,
ஒரு கைப்பையுடன்,
ஒரு கூடை புன்னகை ஏந்தி,
வருபவளுக்கு
நேற்று பிறந்தநாள்,
என்ன கொடுக்கலாம்?
நீண்ட ஆலோசனைக்கு பிறகு,
வாங்கப்பட்ட கைப்பையில்,
கலர்ககிதங்கள் சுற்றி காத்துகிடந்தேன்,
நடைமுறை சிக்கலால் வரமுடியாது,
என் பரிசினை வாங்கமுடியாது,
அவள் அலை பேசியதில்
கூறியபோது.
நடைமுறை சிக்கல் என்ற வார்த்தைக்கு
காதல்முறை சிக்கல் என்று அர்த்தம் மற்ற,
அதிக நேரம் பிடிக்கவில்லை..
உள்ளுக்குள் சிரித்துக்கொண்ட
நான் வாங்கிய பரிசுப்பொருள்
8 மதமாய் என்னை பார்த்து சிரித்துகொண்டே இருக்கிறது...
காதல் அலமேரியில் கூட காத்துக்கிடக்குமா என்ன!?!?!?!
பின்குறிப்பு: நேற்று முடிந்து 8 மாதங்கள் ஆகின்றன...

வரமும் சாபமும்

வெளிச்சமற்ற இரவுகளில்,
உறக்கமற்ற விழிகளில்,
இரக்கமற்ற தேவதையாய்,
சுற்றி சுழன்று திரிபவளே கேள்...
ஒருதலை காதலர்களுக்கு,
வரமும் சாபமும்
காதலே.....
நீ சாபமாய் கொடுத்தாலும்,
வரமாய் கொடுத்தாலும்,
காதல் எங்கள் கணக்கில் வரமே...

Tuesday, November 2, 2010

உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்

நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை. இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!

யார் இந்த கிருஷ்ணன்...?!!


சமையல்கலை படிப்பு படித்து தங்க பதக்கம் வாங்கியவர் இவர்....பல விருதுகளையும் பெற்ற இவர் சில காலம் பெங்களூரில் பிரபல ஹோட்டலில் வேலை பார்த்தார், பின்னர் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்து அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்கான சன்மானம், அந்த முதியவரின் பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞரின் கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது! இந்த மாதிரி புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்காக உதவணும் என்று இவர் முடிவு செய்த போது இவரது வயது வெறும் 21இப்போது 29 வயதாகும் கிருஷ்ணன் அவர்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலை உணவையும் கிட்டத்தட்ட 400 புத்திசுவாதீனம் இல்லாதவர்களுக்கு தினம் அளிக்கிறார் .... !! இத்துடன் முடிவது இல்லை இவரது வேலை....அந்த மக்களில் சிலருக்கு முடிவெட்டுவது, நகம் வெட்டுவது தொடங்கி அவர்கள் இறந்து விட்டால் கொல்லி போடுவது வரை இவரது தொண்டு நீள்கிறது.......!!


இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது!சி.என்.என். தேர்வு பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.....!

கிருஷ்ணனுக்கு எப்படி ஓட்டு போடுவது

இவருக்கு எப்படி நாம் ஓட்டு போடுவது என்று பார்ப்போம். இந்த லிங்கில் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். http://heroes.cnn.com/vote.aspxஇதில் நான் கட்டம் போட்டு காட்டி இருப்பது தான் நம்மாளு அவர் படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள்.

உடனே அவருடைய படம் கீழே இருக்கும் காலி கட்டத்தில் வந்திருக்கும்.

அடுத்து உங்களுக்கு தெரியும் இரண்டு வார்த்தைகளை அந்த காலி கட்டத்தில் சரியாக நிரப்புங்கள்.

அடுத்து கீழே உள்ள VOTE பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் நம் தமிழனுக்கு உங்களால் ஒரு ஓட்டு அதிகமாகியது என்ற பெருமையோடு அந்த தளத்தில் இருந்து வெளியேறுங்கள்.

முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.

பதிவர்கள் நினைத்தால் இதை அனைவருக்கும் எளிதாக கொண்டு செல்ல முடியும். பதிவர்களே தமிழனுக்காக ஒரு பதிவை போடுங்கள்.

திருமதி கவுசல்யா அக்கா அவர்களின் பதிவை பார்த்து இந்த பதிவை போட எண்ணம் எனக்கு தோன்றியது. அது போல் உங்களுக்கு பதிவு போட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால் உடனே போடவும். தாமதிக்க வேண்டாம். கடைசி தேதி நவம்பர் 18 வரை மட்டுமே.