Wednesday, June 23, 2010

மீனா புஸ்

முன் குறிப்பு: படத்தில் இருக்கும் மடல்கள், மாடல்கள்
இது ஒரு UKG பொன்னுக்கும் எனக்கும் நடந்த உரையாடல்..
இடம்: ஒரு ரயில் பயணம்
பங்கேற்ப்பாளர்கள்:
1 . அந்த பொண்ணோட அம்மா
2 . என் நண்பர்கள் 5  பேர்
3 . அந்த பொண்ணோட அண்ணன்
4 . ரூபி கியுப்- அதாங்க கலர் கலரா பொட்டி பொட்டியா இருக்குமே.. ஒவ்வொரு சைடும் ஒரே கலர் வரமாதிரி சேர்க்கணும்..இத என் நண்பன் கைல வச்சிருந்தான்...
இதுக்கு பேரு ரூபி பெட்டின்னு வச்சுக்கலாம்..
5 . வைரமுத்துவோட "ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்" புத்தகம்

எங்களின் நேர்த்தியற்ற உரையாடலின் நடுவில்
அவள் பெயர் கேட்டேன்...

அவள்: "மீனா புஸ்"
நான்: அப்படீன்னா?
அ: மீனா குட்டி
நா:  பள்ளிகூடத்துல இதே பேரா?
அ: அங்க சுபலக்ஷ்மி

நா:உங்க வீட்ல பூனைக்குட்டி இருக்கா?
அ:  6 இருக்கு..
"இல்ல அவ பொய் சொல்லறா..எங்க வீட்ல பூனை இல்ல..."இது அவங்க அண்ணன் இவரு ஒன்னாவது படிக்கறாரு..

ரூபி பெட்டி கைல வச்சுருந்தா, ஒரு அழகான shapeukku அத கொண்டு வந்து..இதுதான் எங்க டாடி ஆபீஸ் மாடல்
அ: எங்கே உங்க ஆபீஸ் செய்யுங்க..
ஒரு மாதிரி வளச்சு கொடுத்தேன்..
அ: இது ரயில் மாதிரி இருக்கு...

நா: சரி எனக்கு ஒரு கதை சொல்றியா?
அ: எனக்கு தெரியாதே!!
நா: உங்க மிஸ் சொல்லிதரல?
அ: மிஸ் எதுக்கு கத சொல்லணும்?
என்னிடம் இதுக்கு பதில் இல்ல..ஒரு புன்னகை கொடுத்தேன்...

நா: நீ சிங்கம் பாத்திருக்கியா?
பதில் இல்லை
அ: இதுதான் எங்க ஸ்கூல்..மீண்டும் ரூபி பெட்டியின் அடுத்த வடிவம் காட்டினாள்..
நா: ம் நல்லா இருக்கு..சரி சொல்லு சிங்கம் பாத்திருக்கியா?
அ: இல்ல
நா: வண்டலூர் zoo போயிருக்கியா?

என் தலைமுடியை பிடித்து இழுத்தவள் கேட்டாள்..
"இவ்ளோ நீளமா முடி இருந்தா பேன் வராதா?"
நா: சீக்காய் போட்டு குளிச்சா வராது..எனக்கு ஒரு தமிழ் rhyms சொல்லுறிய?

அ: ரெண்டு கையையும் சேர்த்து நீட்டுங்க...Jan, feb வெளையாடலாமா?
நான் Jan சொன்னா நீங்க Feb சொல்லி என் கைல அடிக்கணும்..ரெடியா?
அ: Jan
நா: Feb
அ: மார்ச்
நா:april
ஒஏய்.. ஒஏய்..ஒஏய்..நீங்க பொய் சொல்லுறிங்க...கூச்சலிட்டாள்..
மீண்டும் எங்கள் விளையாட்டு தொடர்ந்தது..

அ: உங்களுக்கு எத்தனை குழந்தைங்க?
நா: மாமாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைடா...
சரி பாடடி வடை சுட்ட கதை தெரியுமா?

பதிலே இல்லை..ரூபி பெட்டியில் முமரமாய் இருந்தாள்..
நா; உனக்கு ஆத்திசூடி தெரியுமா?
"மீண்டும் பதில் இல்லை.."
நா: சரி நான் ஒரு கதை சொல்லுறேன் கேளு..
ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்துச்சாம்..
காட்டுக்கு யாரு ராஜா சொல்லு?

அ: நாங்கெல்லாம் சப்பாத்தி சாப்பிட போறோமே!!!
நா: சரி சீக்கிரம் சாப்பிட்டு வா...மாமா அதுவரைக்கும் புக் படிக்கறேன்..

சாப்பிட்டு முடித்தவள், என் மீசை தடவி பார்த்தாள்...
அவள் கை ஈரம் என் மேல் பட்டு நான் சட்டென பின்வாங்க....
அவள் சட்டை எடுத்து என் முகம் துடைத்தாள்..!!!!

அ: உங்க கண்ணாடிய கொடுங்க..
நா: எதுக்கு
அ: கொடுப்பீங்களா மாட்டீங்களா?
நா: மாமா கண்ணாடிய போட்டா உனக்கு கண்ணு தெரியாது...

கண்ணாடி கழற்றப்பட்டு 15 நொடிகள் ஆகிவிட்டன..
கச்சிதமாய் அணிந்தவள் எல்லோரிடமும் பூரிப்பில் புன்னகையால் கூச்சலிட்டாள்...
திரும்ப எனக்கு அனுபவிக்கப்பட்டது..
Jan, Feb வெளையாட்டு மீண்டும் ஆரம்பித்தோம்..

June  மாதத்தை நடுவில் மறந்து நடிக்க..
என் காதில் வந்து மெல்லமாய் விடை சொன்னாள்...

நா: ம்ம் June June June...
ஒஏய்.. ஒஏய்..ஒஏய்..ஒரு தடவைதான் சொல்லணும்...
அடுத்த முறையும் June மறந்து நடித்தேன்..

அ: உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் சரியா சொல்லவே மாட்டியாடா?
அவள் அம்மா டா தவறென அதட்டினாள்..

நா: சரி உனக்கு ஆத்திச்சுடி தெரியுமா?
அ: ம்..தெரியுமே
ஆத்திச்சுடி
கீதிச்கிடி
காத்திச்சுடி
கேத்திச்சுடி

என் நண்பர்கள் என்னருகில் சீட்டு விளையாட பார்த்தவள்
அ: எனக்கு அந்த சீட்டு கட்டு வேணும்..
நா: அவங்க விளையாடிக்கிட்டு இருக்காங்க..நாம அப்புறம் விளையாடலாம்..
அ: எனக்கு இப்பவே வேணும்..
நா: அந்த சன்னல் ஓரமா ஒரு மாமா இருக்கன்ல அவனுக்கு பைத்தியம் பிடிச்சுக்கு
சீட்டுகட்டை வாங்கினா..அவன் கடிச்சு வச்சிடுவான்...
அ: எங்க கடிப்பாங்க?
மணிக்கட்டை கட்டி இங்கேயா? என்றாள்
இல்லை
கழுத்தை காட்டி இங்கேயா? என்றாள்!!
இல்லடி மூக்கை கடிப்பான்..போதுமா?

ஐயோ!!! மூக்கை பிடித்தவள் என்னையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்...
பக்கத்தில் 30 முதல்  40  வரையுள்ள ஒரு தம்பதி ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து  தூங்க...
அ: அந்த ஆன்ட்டிய எழுப்பி விட்டுட்டு நீங்கதான் எழுப்பிவிட்டீங்கன்னு சொல்லட்டுமா?
நா: அடிப்பாவி..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அந்த uncle தூங்கும் போதே பாப்பாரு..உன்ன போலீஸ்-ல புடிச்சு கொடுத்துருவாரு...

அவள் என் பதிலை மதிக்கவே இல்லை!!!..

என் சட்டையில் இருந்த பயணச்சீட்டு எடுத்து முன்னும் பின்னும் பார்த்தாள்..
அ: இத கிழிச்சு  எனக்கு ஒரு கப்பல் செஞ்சு தரிங்களா?
நா: blue-color சட்டை போட்டு ஒரு ஆள் வந்து இதே கேப்பாரு..அப்போ கொடுக்கலேன்னா..நடு மண்டைலேயே கொட்டுவரு..
வரிசையாக எல்லா canteen boys-ம் blue color ட்ரஸில் வர..
எல்லோரையும் உற்று உற்று பார்த்தாள்...

நா: ஸ்கூல்-ல உன் friends பேரெல்லாம் சொல்லு..
"அவளுக்கு ஸ்கூல்-ல shyam-ன்னு ஒரு பாய் friend இருக்கான்.." இது அவங்க அண்ணன்...
அ: ஒஏய்.. ஒஏய்.. இவன் பொய் சொல்லுறன்
நா: சரி நீ சொல்லு..உன் friends பேர் என்ன?
பதில் இல்லை..!!!

என் cellphone எடுத்தவள் games வச்சுகொடுங்க என்றாள்!!
பாம்பு விளையாட்டு வச்சு கொடுத்தேன்.

அ: என்ன first level-ல செவுத்துல முட்டி அவுட் ஆகுது..?
நா: அது அப்படித்தான்..சரி நீ சொல்லு எதுல ஸ்கூல் போவ?
van-a? இல்ல bus-a?
அ: பைக்-ல
நா: நீ ஓட்டுவியா?
அ: ம் ஒட்டுவனே!!!!!
நா: உங்க டாடி லேப்டாப் வசிருக்கரா?
அ: ம்..6 இருக்கு...
நா: உங்க வீட்ல TV இருக்கா?
பதில் இல்லை!!!

French beard  வச்சிருந்த என் முகத்தை தாடை பிடித்து ஆராயந்தவள்..
முகத்தை தூக்கி பிடிதவறே..என் கழுத்தில் கிச்சு கிச்சு மூட்டி சிரித்தாள்...

என் முகம் தடவி மீசை முறுக்கினள்...

"meena  வந்து படு..' இது அவங்க அம்மா..
எதுவும்  பேசாமல்
அவள் அம்மா மேல் சாய்ந்து கொண்டு என்னை பார்த்தாள்...:-)

கண்சிமிட்டி உதடு குவித்து சிரித்தேன்...
புன்னகைத்தாள்.....

புத்தகம் படிக்க தொடங்கினேன்...
"காதல் என்பது பைதியகாரத்தனதிர்க்கு
அமைக்கப்பட்ட மேடை" என்ற வைரமுத்துவின் வரியை படித்து..புத்தகம் மூடி சிந்தித்து அவள் முகம் பார்த்தேன்...
தூங்கி விட்டிருந்தாள்....

இப்ப மனுஷயபுத்திரனின் ஒரு கவிதை...
--------------------------------
ஒரு குழந்தையும்
ஒழுங்கில் இல்லை..

எல்லாவற்றையும் உடைக்கிறார்கள்
கறையாக்குகிறார்கள்.
கிழிக்கிறார்கள்..
யாருக்கும் அடிபணிய மறுக்கிறார்கள்..
எல்லா திட்டங்களையும் கலைக்கிறார்கள்.
அக்கறையை புறக்கணிக்கிறார்கள்..
கற்றுகொடுக்கப்பட்டவை அனைத்திலும்,
கொஞ்சம் மறந்து விடுகிறார்கள்..

ஆனால்
அவர்கள் வளர்கிறார்கள்
துல்லியமாக..
நேர்த்தியாக, வலிமையாக..
நம்மைப்போல் அல்லாமல்!!!!!!.
-------------------------------

24 comments:

பட்டாபட்டி.. said...

வாவ்..கலக்கல்

பட்டாபட்டி.. said...

குழந்தைகள்...குழந்தைகள்தான்...

ஜெய்லானி said...

படிக்க இண்டரஸ்டிங்கா இருந்துச்சி. குழந்தைகளுடன் விளையாடினா நேரம் போவதே தெரியாதே..!!

ILLUMINATI said...

Wow.children will always be children,unless we decide to ruin it.
குழந்தைங்க - செல்லமான கடவுள்கள்!!

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

Veliyoorkaran said...

Beautiful man... :)

I hope you will like this one..! :)

Its my favorite too..! :)

http://rettaivals.blogspot.com/2010/04/blog-post_12.html

சிவமஞ்சுநாதன் said...

@pattapatti: மிக்க நன்றி.. :-)

சிவமஞ்சுநாதன் said...

@ஜெய்லானி: விருதுக்கு மிக்க நன்றிங்க..

சிவமஞ்சுநாதன் said...

//ILLUMINATI said... "குழந்தைங்க - செல்லமான கடவுள்கள்!!"//
நான் ரொம்ப கஷ்டபட்டு சொன்னத, நீங்க ஒரு வரில சொல்லிடீங்க...

சிவமஞ்சுநாதன் said...

//Veliyoorkaran .. //
உங்க மூலமா எனக்கு நெறைய நல்ல தகவல்களும் நிறைவான மனநிலையும் குறைவில்லாம கிடைக்குது...
ரெட்டைவல்ஸ் ப்ளாக் ரொம்ப நல்லா இருந்துச்சு... மிக்க நன்றிங்க..

கிர்பால் said...

Sharp ending na... :)

Veliyoorkaran said...

@@முன் குறிப்பு: படத்தில் இருக்கும் மடல்கள், மாடல்கள்..//

:) Itha gavanikkalaye naan..! :)

Eppo appu aduthathu...?

Veliyoorkaran said...

@//
நல்ல எழுத்தாளர்கள் என்ன மாதிரி வாசகர்கள பட்டினி போட கூடாது வாத்யாரே...ஒரு நேயர் விருப்பம்...சைந்தவியின் சாக்லேட் பக்கங்கள்ல உங்க பக்கமும் வரணும்னு உங்களோட ரசிகன் ஆசைபடறேன்...கண்டிப்பா எழுதுவீங்கன்னு நம்பறேன்...எவ்ளோ டைம் வேணா எடுத்துக்கங்க...அல்ரெடி நானும் ரெட்டைவால்சும் எழுதிருக்கோம்..நீங்களும் எழுதுனீங்கன்னா மிச்சம் இருக்கற பெண் வாசகர்கள் வோட்ட அப்டியே அள்ளிரலாம்...சைந்தவி மாதிரி எழுத விருப்பம் இல்லைனா சைந்தவி பிரெண்ட் மாதிரி காமெடியா எழுதுங்க...இல்ல சைந்தவி சிஸ்டர் மாதிரி.இந்த கதையோட பேஸ் என்னென்னு எங்களுக்கும் தெரியாது...படிக்கறவங்களுக்கும் தெரியாது.....அதனால எப்டி வேணா எழுதுங்க..ஆனா, எழுதுங்க..! :) வெளியூர்க்காரனின் பக்கங்கள் உங்கள் வரிகளுக்காக காத்திருக்கிறது...! :)

Veliyoorkaran said...

@@@சிவமஞ்சுநாதன் said...//

Sivaa my mail id..!

veliyoorkaran@gmail.com

Am waiting for your article...! :)

vinu said...

ungalin முதல் நாள் இன்று padithean athuvum intha posttumkaallkkiteenga thorai

vinu said...

innimeal thodaRNTHU pearum aavaloaduu varugai tharuvevan eandru urimaiyodu sollikkollugirean

சிவமஞ்சுநாதன் said...

@veliyoorkaran:
Kandippa ezhutharen...:-)
neenga keettu naan mattennu sollavematten...
As you said, konjam time kodunga.may be 3 days..maximum....

சிவமஞ்சுநாதன் said...

@Kirpal: Mudikkum pothu..eppadi mudikkarathnuu theriyama..just like that mudichchen..but now am very happy...:-)

சிவமஞ்சுநாதன் said...

@Vinu: Thanks for the comments...
Thandanthu vangu...manasa thottu vazhvom....
veliyoorkaran topic kuduthurukkar..so very soon..i will be back...:-)

Veliyoorkaran said...

@@@சிவமஞ்சுநாதன் said...
@veliyoorkaran:
Kandippa ezhutharen...:-)
neenga keettu naan mattennu sollavematten...
As you said, konjam time kodunga.may be 3 days..maximum....///

3 daysnaa...tamilla pathu naalaa...! :)

சிவமஞ்சுநாதன் said...

romba yosichu pathen...sariyana knot kedaikala, intha varam ponnu pakka poren...vanthu ezhutharen..appothan authentic-a irukkum....
:-)

Veliyoorkaran said...

@@@@சிவமஞ்சுநாதன் said...
romba yosichu pathen...sariyana knot kedaikala, intha varam ponnu pakka poren...vanthu ezhutharen..appothan authentic-a irukkum....
:-)//////////

Veliyoorkaran will wait for ten more years for your romantic articles...! :)

You are worth for that..! :)

Veliyoorkaran said...

@@@சிவமஞ்சுநாதன் said...
intha varam ponnu pakka poren..:-)//

Sir...yaaru sir antha figaru...! :)

rockzsrajesh said...

என்யய்யோ சின்ன புள்ள தனமா இருக்கு? ஆனா சூப்பர் ரா இருக்கு
வசந்து ...

அன்புடன்
ராக்ஸ் ....


http://rockzsrajesh.blogspot.com/