Monday, May 17, 2010

முதல் நாள் இன்று

வாழ்க்கை துணை..
துணைவி..
மனைவி..
காலமெல்லாம் காதலி..
இந்த எல்லா வார்த்தைகளும் மனதிற்குள் எதோ ஒரு குதூகலத்தை ஏற்படுத்த..
அவளுடன் வாழப்போகும் வாழ்க்கை ஒரு ஒத்திகையாய் திரும்ப திரும்ப ஒளிப்படமாய் மனதிற்குள் ஓட,
நில்லாமல் ஓடும் மனம்,
நின்று போன இதயம்,
எதையும் அவளிடம் வெளிக்காட்டாமல் அல்லது வெளிப்படையாய் வெளிக்காட்டாமல் ஒரு உரையாடல் நிகழ வேண்டும்/நிகழ்த்த வேண்டும்..
இது சாத்தியமா? ஆம் எனில் எப்படி இது சத்தியம்.? இதுதான் கேள்வி...


பதில்: சாத்தியம்
எப்படி சாத்தியம்: பதிவை மேலும் தொடர்க

நடிகர் சூர்யா நடிப்பதற்கு ஆரம்பிப்பதற்கு முந்தைய இரவு, சிவகுமாருடன் சேர்ந்து மணிரத்தினத்தை பாக்க போனபோது என்ன நடந்தது..?
அறிமுக படலம் முடிந்து,
மெல்லிதாய் சூர்யாவை சிரிக்க சொன்ன மணி..
சூர்யா முடித்ததும், சிரித்து சொன்ன வார்த்தைகள் ..
"சிரிப்பது என்பது உதட்டை பொறுத்ததல்ல..
கண்களால் சிரிக்க வேண்டும் "..

கண்களால் சிரிப்பதற்கு கண்ணாடி இடைஞ்சலாய் இருக்கும் என் அதை கழட்டும் முன்பு இந்த ஆய்வு முடிவை கண்ணாடியுடன் படிக்கவும்..
அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வு:
கண்ணாடி போட்டவர்களை பற்றி என்ன நினைகிறார்கள் மக்கள்..?
முடிவு: கண்ணாடி போட்டவர்கள் புத்திசாலிகள் என 73 % மக்கள் சொன்னார்கள்..
என்ன காரணம் என்ற போது, உருப்படியாய் யாருமே பதில் சொல்லல.
 சுருக்கமா சொன்ன..நம்ம ஊர்ல செவப்பா இருகாறவன் பொய் சொல்லமாட்டன்னு சொல்லற மாதிரி கண்மூடித்தனமாய் இல்லாமல் ரொம்ப ஆழமான மனதிருக்குள்ளிருந்து சொன்ன ஒரு பதில்தான் மேற்சொன்ன ஆய்வு முடிவு...

அப்போ மனசுல இருந்து பேசுனா சரின்னு முடிவுக்கு வந்து..
நெறைய செய்திகளை மனசுக்குள் சேர்த்து வைத்து..
ஒத்திகை பார்த்துட்டு போகவேண்டாம்..

ஏன்னா கீழ்க்கண்ட எதுவும் நடக்கலாம்:

நிகழ்வு 1 : எப்படியும் அவங்கள பார்த்ததும் உங்க மனச அவங்ககிட்ட கொடுத்துட்டு, மறுபடியும் ஒன்னாம் வகுப்புல teacher-a பார்த்த்ததும் முழிச்ச மாதிரியே முழிப்பீங்க...

நிகழ்வு 2 : அவங்கள பார்த்ததும் எல்லாம் மறந்து, இளையராஜா BGM மட்டும் கேட்கும், வார்த்தைகள்அற்ற மௌனமும், இசையும், காதலின் பரிணாம வளர்ச்சிக்கான அடையாளங்கள்.. ஆனா இது காதலின் மூன்றாம் கட்டம்..இப்போ வேணாம்

நிகழ்வு 3 : நீங்க என்ன பத்தி என்ன நினைக்கீரிங்க அப்படின்னா மனசு கேக்க சொன்ன, உங்க உதடு அழகா சொல்லும் "நீங்க உங்களைப்பத்தி நின்ன நெனைக்கீரிங்கனு" அதனால தேர்ந்டுத்த கேள்விகள் வேண்டாம்

யோவ் எதவுமே சொல்லவேண்டாம்ன்னு சொல்லற, எதுவுமே சொல்லாம இருக்க வேண்டாம்ன்னு சொல்லற..நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உன் பதிவை படிக்கறேன் என உரிமையோட கோபப்பட்டால் ..உங்களுக்கு என புன்னகையை பதிலாக தருகிறேன்...மேலும் படிக்க...


முந்தைய நாள் இரவில் செய்யவேண்டியவை:
அவங்கள பார்ப்பதற்கு முந்தைய இரவில்..இளையராஜாவின் மெல்லிசை கேட்காமல், துள்ளல் இசை கேட்கவும்..எடுத்துகாட்டு: "வர்ற வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு, ரெண்டு வாழைமரம் கட்டபோறேண்டீ"

தபுசங்கர் கவிதைகள் படிக்கவும்..

ஒரு ரோஜாபூ வாங்கி வந்து உற்று பார்க்க வேண்டாம், ஏன்னா, விடிய வரைக்கும் அதையே பாத்துட்டு இருப்பீங்க, விடிஞ்சதும் கண்ணு வீங்கி, வல்லவன் சிம்பு மாதிரி getup மாறிடும்..

நல்ல காமெடி பக்க முடியாது,
நல்லா ஜோக்  வராது,
நல்ல புத்தகம் படிக்க முடியாது,
நல்லா தூங்க முடியாது..
இதெல்லாம் மாற்ற என்ன பண்ணலாம்..!!!
ஒண்ணுமே பண்ண முடியாது..அனுபவிச்சே ஆகணும்..
காதல்ன்ன சும்மாவா என்ன..!!!
நாங்கெல்லாம் சரியா தூங்கி 3 வருஷம் 35 நாள் ஆச்சு..

மறுநாள் காலை சற்று ஈரத்துடன் விடியும்:
பின்ன? காதலால் நனைந்த ஒரு இரவின் விடில் எப்படி வறண்டுகிடக்கும்..

இந்த நொடியில் இருந்து இனிமேல் நடக்க போறது எல்லாம் உங்க மனசுல
புகைப்படம் எடுத்தது போல பதியனும்.. நீங்க வருங்கால தபுசங்கர்..mind-ல வச்சுக்கங்க...

வீட்டு மூலைல இருக்கும் பல்லிகிட்ட gudmorning  சொல்லுங்க..
பூனைகுட்டிக்கு முத்தம் கொடுக்காதீங்க ஏமாந்து போகட்டும்..
பல் விளக்கும் போது கண்ணாடி பாக்காதீங்க..அப்புறம் நாள் பூரம் பல்லு மட்டும்தான் விளக்குவீங்க...
நல்லா shave பண்ணுங்க, அறை குறையா குளிங்க..
பேனவை மறந்துட்டு சட்டை போட்டுட்டு வெளிய போங்க..

பறவை எங்க இருக்குமோ அங்க தேடிப்போய் ஒரு பறவையை தேர்ந்தெடுத்து உற்று பாருங்க, முடிஞ்சா என்ன,  கண்டிப்பா அந்த பறவைகிட்ட, அவங்ககிட்ட கேட்க்க இதுவரைக்கும் வச்சிருந்த கேள்விகளை கேளுங்க, இந்த  உலகத்துல பூனை, நாய் மற்றும் குருவிகிட்ட காதல சொல்லாத காதலர்களை வெரல் விட்டு எண்ணிடலாம்..
நானெல்லாம் கம்ப்யூட்டர்-க்கு first propose  பண்ணிட்டு அப்புறம்தான் அவங்ககிட்ட சொன்னேன்..

சரி சரி நேரம் ஆய்டுச்சு..உங்க தூரத்துல ரொம்ப நேரமா பாவமா நிக்கற நண்பனை கூட்டிகிட்டு சாப்பிட போங்க...
"கண்டுபிடிச்சதில் இருந்து இன்று வரை வடிவம் மாறாமல் இருக்கும் இந்த
இட்லி போல
அவளை பார்த்ததில் இருந்து
என் பார்வை நிரந்தரமாய் மூடும் வரை
என் காதல் வடிவம் மாறாமல் இருக்கும்" அப்படின்னு நீங்க சொல்ற
கவிதையை கேட்க்க கண்டிப்பாய் ஒரு அப்பாவி வேண்டும் நமக்கு...

இப்போ அநேகமா அந்த பொண்ணு/அவங்க/உங்க வருங்காலம்/எதிர்காலம்/நிகழ்காலம் கால் பண்ணுவாங்க,
3 ரிங்கு விட்டுட்டு அட்டென் பண்ணுங்க,
எவ்ளோ நேரத்துல வருவாங்கன்னு confirm பண்ணிட்டு,
நண்பனை வீட்டுக்கு போக சொல்லிட்டு,
பக்கத்துக்கு சீட்ல இருக்கும் குழந்தை முடிய பிடிச்சு இழுங்க..
காதல் இருக்கற ஒருத்தனை எவனும் எதுவும் பண்ண முடியாது,
(பண்ணினாலும் ஒன்னும் ஒரைக்கது நமக்கு...)

அமைதி புயலாய் கிளம்புங்க சத்தம இல்லாம ஒரு மனச சாய்க்க போறீங்க..
அந்த திமிர் இருக்கட்டும்..
அதோ அவங்க தூரத்துல வராங்க..
உங்க இதயம் துடிக்கறது உங்க காதுல கேக்கும்,
train  வருதுன்னு எங்கேயாவது திரும்பி,  கெடைச்ச நேரத்தை வீண் பண்ணாதீங்க,
அவங்க பக்கத்துல வந்துட்டாங்க, so என்ன பேச போறீங்க?

"நாசமா போச்சு, அதே தெரிஞ்சுக்கதானே இவ்ளோ நேரம் படிச்சேன்.."
அப்படின்னு நீங்க சொல்லறது எனக்கு கேட்குது"

என் அனுபவத்தில் இருந்தும், மனசில் இருந்தும் சொல்றேன்,
எதுவுமே  prepare பண்ணாதீங்க,
சும்மா ஜெனரல் கேள்விகள் கேளுங்க,
ஒரு கட்டத்துல
அவங்கள காதலிக்க சொல்லி உங்க கிட்ட எதோ ஒன்னு வந்துசொல்லும்,
அந்த எதோ ஒன்னும் அவங்க கிட்டேயும் உங்கள காதலிக்க சொல்லும்...
அந்த நிமிஷம் அருவி மாதிரி காதல் உங்களுக்குள்ள அடிச்சு துவைக்கும்,
அப்புறம் எப்படியாவது பேசறத ஒரு 5 நிமிஷம் நிறுத்திட்டு வந்து எனக்கு பின்னூடடம் போடுங்க..
வாழ்த்துக்கள்....

14 comments:

சிவமஞ்சுநாதன் said...

@Veliyoorkaran: இந்த பதிவு உங்களுக்காக..
வாழ்த்துக்கள்..
அப்புறம் முதல் முறையா உங்கள கொஞ்சம் கிண்டல் பண்ணியும் எழுதி இருக்கேன்..
தப்பா எடுத்துக்காதீங்க...

Veliyoorkaran said...

@@Sivaa///
நானெல்லாம் கம்ப்யூட்டர்-க்கு first propose பண்ணிட்டு அப்புறம்தான் அவங்ககிட்ட சொன்னேன்..//
நீங்க சொல்ற
கவிதையை கேட்க்க கண்டிப்பாய் ஒரு அப்பாவி வேண்டும் நமக்கு...//
பக்கத்துக்கு சீட்ல இருக்கும் குழந்தை முடிய பிடிச்சு இழுங்க..
காதல் இருக்கற ஒருத்தனை எவனும் எதுவும் பண்ண முடியாது,//
அவங்கள காதலிக்க சொல்லி உங்க கிட்ட எதோ ஒன்னு வந்துசொல்லும்,
அந்த எதோ ஒன்னும் அவங்க கிட்டேயும் உங்கள காதலிக்க சொல்லும்...////

Siva you are rocking...! :)

Chanceless..!

Thanks man..!

Veliyoorkaran said...

@Siva..//
நான் என் பியான்சிகிட்ட பேசிட்டேன் சிவா...என்ன பேசினேன்னு தனியா
ஒரு பதிவு எழுதி உங்களுக்கு மட்டும் அனுப்பறேன்..சிவா ஸ்பெஷல்...!

நான் பேசினத கேட்ருந்தா வெளியூர்க்காரனே விழுந்து விழுந்து சிரிச்சிருப்பான் சிவா..சீரியஸா தான் ஆரம்பிச்சேன்..ஆனா அவ்ளோ காமெடியா.போயிருச்சு...அந்த பொண்ணு இன்னும் சிரிச்சிட்ருபான்னு நெனைக்கறேன்...! என் வேண்டுகோளை நிறைவேற்றியமைக்கு மிக்க நன்றி..!

Veliyoorkaran said...

@@Siva.காதல்ன்ன சும்மாவா என்ன..!!!
நாங்கெல்லாம் சரியா தூங்கி 3 வருஷம் 35 நாள் ஆச்சு..//

எனக்கு இப்போதான் சிவா ..ஒரு பன்னெண்டு மணி நேரம் ஆச்சு...! :)

பட்டாபட்டி.. said...

எனக்கு இப்போதான் சிவா ..ஒரு பன்னெண்டு மணி நேரம் ஆச்சு...! :)
//ஒரு மனுசன் 12 மணி நேரம் தூங்கலேனே.. ரொம்ப கஷ்டம்..

உடம்ப பார்த்துக்க...வெளியூரு

சிவமஞ்சுநாதன் said...

@வெளியூர்க்காரன்: ஒரு தடவ பேசினதுக்கே அவங்கள ரெண்டு நாளைக்கு சிரிக்க வச்சுடீங்க..
கல்யாணத்துக்கு அப்புறம்..உங்க வீட்டுக்கு அவங்க வரும்போது யாராவது எங்க போறேன்னு கேட்டா சிரிக்க போறேன்னு சொல்லிட்டு வரசொல்லுங்க...

@பட்டாப்பட்டி: ஆபீஸ்-ல உக்கார எடத்துல எல்லாம் ஆணி வைக்கும்போதே நம்ம வெளியூர் எழுதறது ரொம்ப நக்கலா இருக்கும், இனிமேல் புது உலகத்துக்கு போயிட்டு வந்து..என்ன அழும்பு விடபோரருன்னு தெரியல...

பட்டாபட்டி.. said...

ஆபீஸ்-ல உக்கார எடத்துல எல்லாம் ஆணி வைக்கும்போதே நம்ம வெளியூர் எழுதறது ரொம்ப நக்கலா இருக்கும், இனிமேல் புது உலகத்துக்கு போயிட்டு வந்து..என்ன அழும்பு விடபோரருன்னு தெரியல...
//

ஆமா பாஸ்.. பேச்சிலர் லைப்ல இருந்து திருமண பந்தத்தில அடியெடுத்து வக்கும் வெளியூர்காரனுக்கு..உங்கள் ப்ளாக் மூலம் என் வாழ்த்தை பதிவு செய்கிறேன்...

திருப்பூர் மணி Tirupur mani said...

:-)

சிவமஞ்சுநாதன் said...

//@ திருப்பூர் மணி:
:-) //

:-) means to a lot to me..thank you..

ILLUMINATI said...

// காதலால் நனைந்த ஒரு இரவின் விடில் எப்படி வறண்டுகிடக்கும்..//

//உலகத்துல பூனை, நாய் மற்றும் குருவிகிட்ட காதல சொல்லாத காதலர்களை வெரல் விட்டு எண்ணிடலாம்..
நானெல்லாம் கம்ப்யூட்டர்-க்கு first propose பண்ணிட்டு அப்புறம்தான் அவங்ககிட்ட சொன்னேன்..//

//அந்த நிமிஷம் அருவி மாதிரி காதல் உங்களுக்குள்ள அடிச்சு துவைக்கும்,//

இது ரொம்ப முத்துன stage தம்பி...இப்படியே போச்சுன்னா வெளிய ரப்சர் பண்ண மாதிரி உம்மையும் பண்ண வேண்டியது இருக்கும் ஓய்... :)

//பக்கத்துக்கு சீட்ல இருக்கும் குழந்தை முடிய பிடிச்சு இழுங்க..
காதல் இருக்கற ஒருத்தனை எவனும் எதுவும் பண்ண முடியாது,
(பண்ணினாலும் ஒன்னும் ஒரைக்கது நமக்கு...)//

ஆமா,இல்லைனா மட்டும் நமக்கு மான ரோசம் இருக்குமாக்கும்... ;)

seriously , ரொம்ப நல்லா இருக்குது நண்பா.ரொம்ப ரசிச்சேன்....
சங்கத்துல சேர்ந்துட்டேன் ஓய்...
அப்புறம்,இந்த வோர்ட் verification அ தூக்குயா..சனியன் சாவடிக்குது... :)

--
ILLUMINATI

http://illuminati8.blogspot.com

சிவமஞ்சுநாதன் said...

@ILLUMINATI:
ரொம்ப ரசிச்சு படிச்சிருக்கீங்க...
மிக்க நன்றிங்க...
word verirffication remove பண்ணிட்டேன்.... :-)

Zero to Infinity said...

முன் குறிப்பு: படத்தில் இருக்கும் மடல்கள், மாடல்கள்
.
.
KAVITHA....KAVITHA....KAVITHA

On the whole...your blog is ...very Nice and Touching..Mr. Shiva.

Nilavan said...

தற்செயலாக தான் உங்கள் பிளாக் பார்த்தேன். உடனே follower ஆக வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது. ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை. :) அருமையான பதிவு.

kanagadurga said...

nice... nice... nice... no words to gift u other than this... keep rocking man... i v become a big of urs... thank u...