Tuesday, May 4, 2010

நா. பிச்சமூர்த்தியும் வெளியூர்க்காரனும்

ஒரு ஊர்ல ஒரு ஓவிய கண்காட்சி நடந்தது
கண்காட்சி பக்க வந்தவங்க எல்லாரும் ஒரு படத்துக்கு முன்னாடி நின்னு இது ரொம்ப அழக இருக்குன்னு பேசிகிட்டாங்க.
ஒருத்தனுக்கு மட்டும் ஒன்னும் புரியல, அங்க இருந்த ஓவியர கூப்பிட்டு,
என்ன இது  தலைப்பும் இல்ல, வரைந்தவன் பெரும் இல்ல, ஓவியமும் தெளிவா இல்ல இந்த ஓவியத்துக்கு என்ன அர்த்தம்ன்னு கேட்டான்..
இதே கேள்விய பிக்காசோ கிட்ட கேட்டபோது அவரு என்ன சொன்னாரு தெரியுமா?
குயில் கூவுறதுக்கு என்ன அர்த்தமோ அதுதான் என் ஓவியத்திற்கும், இது ஒரு அழகு அவளோதான்..ரசிக்க முடிஞ்சா ரசிச்சிட்டு போ அப்படின்னாராம்...
அதேதான் இந்த ஓவியத்திற்கும் அப்படின்னு ஓவியர் சொல்ல..
உற்று  பார்த்தவன் மெல்ல பேசினான்,
ஒரு வகையில் பார்த்தா, மரத்துக்கு கீழ மாடு மேயரமாதிரி இருக்கு...
தலைகீழா பார்த்தா அருவி மலைமேல இருந்து விழற மாதிரி இருக்கு..

கடைசியில் முதலில் எதிர் பார்த்த மாதிரியே அதே ஓவியத்திற்கு முதல் பரிசு கிடைத்தது...
பரிசு வழங்கும் நாளும் அறிவிக்கப்பட்டது..

இதை எதிர்த்து கோர்டில் வழக்கு தொடரப்பட்டது,
வழக்கு தொடர்ந்தவன் அந்த ஓவியத்தை தான் வரைந்ததாக சொல்ல..
வழக்கு ஆரம்பித்தது..நீதிபதி நடந்தவை கேட்டார்..
விளக்கினான் ஓவியன்..
இவன் ஒரு car mechanic இவன் கார்களுக்கு வர்ணம் அடிக்கும்போது
வர்ணம் சிந்தமல் இருக்க ஒரு வித காகிதத்தின் மேல் நின்று கொண்டு வேலை செய்வான்...
அந்த காகிதத்தில் இருந்த வண்ண சிதறல்களில் மனதை பறிகொடுத்து, அதை கண்காட்சியில் வைத்தேன் அதுவே முதல் பரிசு பெற்ற இந்த ஓவியம்...
வழக்கு மேலும் நடைபெற்றது...

தீர்ப்பு:
"என்னதான் தொழிலாளி சிந்திய வர்ணம் இதுவாக இருந்தாலும் அவனுக்கு ஓவியம் பற்றிய அறிவோ உணர்வோ கிடையாது...அதை ஓவியமாக பார்த்து உலகிற்கு உணர்த்திய ஓவியனுக்கே இந்த பரிசு"

பரிசு வழங்கும் நாளுக்கு முன்னிரவில் ஓவியனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது...
தான் அவசரமாக வெளியூர் செல்ல இருப்பதால் இந்த பரிசை அந்த தொழிலாளிக்கே கொடும்படி கேட்டுகொள்ளப்பட்டது...

அப்படி வெளியூர் கெளம்பி போனவர்தான் இந்த வெளியூர்காரன்...
நான் எழுதினது கவிதைன்னே தெரியாம கவிதை(ஓவியத்திற்கு கவிதையை மாற்றாக கொள்க) எழுதினவன் நான்...
வெளியூர்க்காரன் இல்லைனா நான் என்னைக்கோ இந்த blog-a மூடிட்டு படம்பக்க போயிருப்பேன்...

மிக்க நன்றி வெளியூர்க்காரன்.....
பின் குறிப்பு: மேற் சொன்ன கதை எழுதியவர் நா. பிச்சமூர்த்தி, மறுபதிவும் ஒப்பிடலும் மட்டுமே,  நான்..

7 comments:

பட்டாபட்டி.. said...

கவிதை மட்டும்தான் எழுதுவீங்கன நினைச்சேன்..

எழுத்து நடை நல்லாயிருக்கு சார்..
கலக்குங்க...

ரெட்டைவால் ' ஸ் said...

சிவா.. காதலோட இந்த மாதிரியும் எழுதுங்களேன்...!

Veliyoorkaran said...

வசந்த கால பறவைகள்...
நான் பதிவுலகலத்துல அதிதீவிரமா ரசிக்கிற வெகுசில வலைபூக்கள்ள அதிமுக்கியமானது...! உங்க பதிவுல என்ன பத்தி வந்தத நான் மிகபெரிய மரியாதையா நெனைக்கறேன்...ரொம்ப நன்றி சிவா..! வெளியூர்காரன் என்னென்னிக்கும் வசந்த கால பறவையின் காதலுக்கு அடிமை...! :)

Veliyoorkaran said...

சிவா சார்...சொல்லறதுக்கே கூச்சமா இருக்கு...ஹி..ஹி..எனக்கொரு பிகர் உஷார் ஆயிருச்சு...வீட்ல பார்த்துருக்காங்க.இன்னும் ரெண்டு நாள்ல அந்த புள்ளைகிட்ட போன்ல பேசணும்...வீட்ல பார்த்த பொண்ணுகிட்ட பர்ஸ்ட் பர்ஸ்ட் எப்டி கலக்கலா பேசலாம்ங்கரத பத்தி ஒரு பதிவு போடுங்களேன்...இது ஒரு சீனியர் நேயரின் விருப்பம்..! :)

சிவமஞ்சுநாதன் said...

@பட்டாபட்டி: இதேமாதிரி நெறைய கதை இருக்கு...இனிமே கதை படிக்க ரெடியா இருங்க..:-)


@ரெட்டைவால்ஸ்: இந்த ப்ளாக் ஆரம்பிக்கும்போது காதலை பற்றி மட்டும் எழுதவேகூடாதுன்னு நெனச்சு ஆரம்பிச்சேன்.. ஆனா காதல் என்ன சும்மா விடல.. .. இனிமேல் கொஞ்சம் குட்டி கதைகள் எழுதறேன்...:-)

//@வெளியூர்க்காரன்: உங்க பதிவுல என்ன பத்தி வந்தத நான் மிகபெரிய மரியாதையா நெனைக்கறேன்...//
இன்னும் நெறைய இருக்கு உங்களுக்காக :-)

//@வெளியூர்க்காரன்: வீட்ல பார்த்த பொண்ணுகிட்ட பர்ஸ்ட் பர்ஸ்ட் எப்டி கலக்கலா பேசலாம்ங்கரத பத்தி ஒரு பதிவு போடுங்களேன்...இது ஒரு சீனியர் நேயரின் விருப்பம்..! //

ரொம்ப ரொம்ப கஷ்டமான அதே சமயத்துல ரொம்ப அசத்தலான தலைப்பு... கண்டிப்பா எழுதறேன்..:-)

Veliyoorkaran said...

@@ரொம்ப ரொம்ப கஷ்டமான அதே சமயத்துல ரொம்ப அசத்தலான தலைப்பு... கண்டிப்பா எழுதறேன்..//

Hi Siva...Dont take too much of time..!

Naan wednesday pesanum avangakitta...!

Please make it fast..!

I am waiting...! :)

சிவமஞ்சுநாதன் said...

@வெளியூர்க்காரன்:
//Please make it fast..!
I am waiting...! :)
//
பதிவு போட்டுட்டேன்..:-)
ஆபீஸ்ல கொஞ்சம் வேல அதிகம் so அதனால கொஞ்சம் லேட்
மனசுக்கு ரொம்ப நிறைவ இருக்கு..
வாழ்த்துக்கள்...:-)