Monday, May 17, 2010

முதல் நாள் இன்று

வாழ்க்கை துணை..
துணைவி..
மனைவி..
காலமெல்லாம் காதலி..
இந்த எல்லா வார்த்தைகளும் மனதிற்குள் எதோ ஒரு குதூகலத்தை ஏற்படுத்த..
அவளுடன் வாழப்போகும் வாழ்க்கை ஒரு ஒத்திகையாய் திரும்ப திரும்ப ஒளிப்படமாய் மனதிற்குள் ஓட,
நில்லாமல் ஓடும் மனம்,
நின்று போன இதயம்,
எதையும் அவளிடம் வெளிக்காட்டாமல் அல்லது வெளிப்படையாய் வெளிக்காட்டாமல் ஒரு உரையாடல் நிகழ வேண்டும்/நிகழ்த்த வேண்டும்..
இது சாத்தியமா? ஆம் எனில் எப்படி இது சத்தியம்.? இதுதான் கேள்வி...


பதில்: சாத்தியம்
எப்படி சாத்தியம்: பதிவை மேலும் தொடர்க

நடிகர் சூர்யா நடிப்பதற்கு ஆரம்பிப்பதற்கு முந்தைய இரவு, சிவகுமாருடன் சேர்ந்து மணிரத்தினத்தை பாக்க போனபோது என்ன நடந்தது..?
அறிமுக படலம் முடிந்து,
மெல்லிதாய் சூர்யாவை சிரிக்க சொன்ன மணி..
சூர்யா முடித்ததும், சிரித்து சொன்ன வார்த்தைகள் ..
"சிரிப்பது என்பது உதட்டை பொறுத்ததல்ல..
கண்களால் சிரிக்க வேண்டும் "..

கண்களால் சிரிப்பதற்கு கண்ணாடி இடைஞ்சலாய் இருக்கும் என் அதை கழட்டும் முன்பு இந்த ஆய்வு முடிவை கண்ணாடியுடன் படிக்கவும்..
அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வு:
கண்ணாடி போட்டவர்களை பற்றி என்ன நினைகிறார்கள் மக்கள்..?
முடிவு: கண்ணாடி போட்டவர்கள் புத்திசாலிகள் என 73 % மக்கள் சொன்னார்கள்..
என்ன காரணம் என்ற போது, உருப்படியாய் யாருமே பதில் சொல்லல.
 சுருக்கமா சொன்ன..நம்ம ஊர்ல செவப்பா இருகாறவன் பொய் சொல்லமாட்டன்னு சொல்லற மாதிரி கண்மூடித்தனமாய் இல்லாமல் ரொம்ப ஆழமான மனதிருக்குள்ளிருந்து சொன்ன ஒரு பதில்தான் மேற்சொன்ன ஆய்வு முடிவு...

அப்போ மனசுல இருந்து பேசுனா சரின்னு முடிவுக்கு வந்து..
நெறைய செய்திகளை மனசுக்குள் சேர்த்து வைத்து..
ஒத்திகை பார்த்துட்டு போகவேண்டாம்..

ஏன்னா கீழ்க்கண்ட எதுவும் நடக்கலாம்:

நிகழ்வு 1 : எப்படியும் அவங்கள பார்த்ததும் உங்க மனச அவங்ககிட்ட கொடுத்துட்டு, மறுபடியும் ஒன்னாம் வகுப்புல teacher-a பார்த்த்ததும் முழிச்ச மாதிரியே முழிப்பீங்க...

நிகழ்வு 2 : அவங்கள பார்த்ததும் எல்லாம் மறந்து, இளையராஜா BGM மட்டும் கேட்கும், வார்த்தைகள்அற்ற மௌனமும், இசையும், காதலின் பரிணாம வளர்ச்சிக்கான அடையாளங்கள்.. ஆனா இது காதலின் மூன்றாம் கட்டம்..இப்போ வேணாம்

நிகழ்வு 3 : நீங்க என்ன பத்தி என்ன நினைக்கீரிங்க அப்படின்னா மனசு கேக்க சொன்ன, உங்க உதடு அழகா சொல்லும் "நீங்க உங்களைப்பத்தி நின்ன நெனைக்கீரிங்கனு" அதனால தேர்ந்டுத்த கேள்விகள் வேண்டாம்

யோவ் எதவுமே சொல்லவேண்டாம்ன்னு சொல்லற, எதுவுமே சொல்லாம இருக்க வேண்டாம்ன்னு சொல்லற..நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உன் பதிவை படிக்கறேன் என உரிமையோட கோபப்பட்டால் ..உங்களுக்கு என புன்னகையை பதிலாக தருகிறேன்...மேலும் படிக்க...


முந்தைய நாள் இரவில் செய்யவேண்டியவை:
அவங்கள பார்ப்பதற்கு முந்தைய இரவில்..இளையராஜாவின் மெல்லிசை கேட்காமல், துள்ளல் இசை கேட்கவும்..எடுத்துகாட்டு: "வர்ற வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு, ரெண்டு வாழைமரம் கட்டபோறேண்டீ"

தபுசங்கர் கவிதைகள் படிக்கவும்..

ஒரு ரோஜாபூ வாங்கி வந்து உற்று பார்க்க வேண்டாம், ஏன்னா, விடிய வரைக்கும் அதையே பாத்துட்டு இருப்பீங்க, விடிஞ்சதும் கண்ணு வீங்கி, வல்லவன் சிம்பு மாதிரி getup மாறிடும்..

நல்ல காமெடி பக்க முடியாது,
நல்லா ஜோக்  வராது,
நல்ல புத்தகம் படிக்க முடியாது,
நல்லா தூங்க முடியாது..
இதெல்லாம் மாற்ற என்ன பண்ணலாம்..!!!
ஒண்ணுமே பண்ண முடியாது..அனுபவிச்சே ஆகணும்..
காதல்ன்ன சும்மாவா என்ன..!!!
நாங்கெல்லாம் சரியா தூங்கி 3 வருஷம் 35 நாள் ஆச்சு..

மறுநாள் காலை சற்று ஈரத்துடன் விடியும்:
பின்ன? காதலால் நனைந்த ஒரு இரவின் விடில் எப்படி வறண்டுகிடக்கும்..

இந்த நொடியில் இருந்து இனிமேல் நடக்க போறது எல்லாம் உங்க மனசுல
புகைப்படம் எடுத்தது போல பதியனும்.. நீங்க வருங்கால தபுசங்கர்..mind-ல வச்சுக்கங்க...

வீட்டு மூலைல இருக்கும் பல்லிகிட்ட gudmorning  சொல்லுங்க..
பூனைகுட்டிக்கு முத்தம் கொடுக்காதீங்க ஏமாந்து போகட்டும்..
பல் விளக்கும் போது கண்ணாடி பாக்காதீங்க..அப்புறம் நாள் பூரம் பல்லு மட்டும்தான் விளக்குவீங்க...
நல்லா shave பண்ணுங்க, அறை குறையா குளிங்க..
பேனவை மறந்துட்டு சட்டை போட்டுட்டு வெளிய போங்க..

பறவை எங்க இருக்குமோ அங்க தேடிப்போய் ஒரு பறவையை தேர்ந்தெடுத்து உற்று பாருங்க, முடிஞ்சா என்ன,  கண்டிப்பா அந்த பறவைகிட்ட, அவங்ககிட்ட கேட்க்க இதுவரைக்கும் வச்சிருந்த கேள்விகளை கேளுங்க, இந்த  உலகத்துல பூனை, நாய் மற்றும் குருவிகிட்ட காதல சொல்லாத காதலர்களை வெரல் விட்டு எண்ணிடலாம்..
நானெல்லாம் கம்ப்யூட்டர்-க்கு first propose  பண்ணிட்டு அப்புறம்தான் அவங்ககிட்ட சொன்னேன்..

சரி சரி நேரம் ஆய்டுச்சு..உங்க தூரத்துல ரொம்ப நேரமா பாவமா நிக்கற நண்பனை கூட்டிகிட்டு சாப்பிட போங்க...
"கண்டுபிடிச்சதில் இருந்து இன்று வரை வடிவம் மாறாமல் இருக்கும் இந்த
இட்லி போல
அவளை பார்த்ததில் இருந்து
என் பார்வை நிரந்தரமாய் மூடும் வரை
என் காதல் வடிவம் மாறாமல் இருக்கும்" அப்படின்னு நீங்க சொல்ற
கவிதையை கேட்க்க கண்டிப்பாய் ஒரு அப்பாவி வேண்டும் நமக்கு...

இப்போ அநேகமா அந்த பொண்ணு/அவங்க/உங்க வருங்காலம்/எதிர்காலம்/நிகழ்காலம் கால் பண்ணுவாங்க,
3 ரிங்கு விட்டுட்டு அட்டென் பண்ணுங்க,
எவ்ளோ நேரத்துல வருவாங்கன்னு confirm பண்ணிட்டு,
நண்பனை வீட்டுக்கு போக சொல்லிட்டு,
பக்கத்துக்கு சீட்ல இருக்கும் குழந்தை முடிய பிடிச்சு இழுங்க..
காதல் இருக்கற ஒருத்தனை எவனும் எதுவும் பண்ண முடியாது,
(பண்ணினாலும் ஒன்னும் ஒரைக்கது நமக்கு...)

அமைதி புயலாய் கிளம்புங்க சத்தம இல்லாம ஒரு மனச சாய்க்க போறீங்க..
அந்த திமிர் இருக்கட்டும்..
அதோ அவங்க தூரத்துல வராங்க..
உங்க இதயம் துடிக்கறது உங்க காதுல கேக்கும்,
train  வருதுன்னு எங்கேயாவது திரும்பி,  கெடைச்ச நேரத்தை வீண் பண்ணாதீங்க,
அவங்க பக்கத்துல வந்துட்டாங்க, so என்ன பேச போறீங்க?

"நாசமா போச்சு, அதே தெரிஞ்சுக்கதானே இவ்ளோ நேரம் படிச்சேன்.."
அப்படின்னு நீங்க சொல்லறது எனக்கு கேட்குது"

என் அனுபவத்தில் இருந்தும், மனசில் இருந்தும் சொல்றேன்,
எதுவுமே  prepare பண்ணாதீங்க,
சும்மா ஜெனரல் கேள்விகள் கேளுங்க,
ஒரு கட்டத்துல
அவங்கள காதலிக்க சொல்லி உங்க கிட்ட எதோ ஒன்னு வந்துசொல்லும்,
அந்த எதோ ஒன்னும் அவங்க கிட்டேயும் உங்கள காதலிக்க சொல்லும்...
அந்த நிமிஷம் அருவி மாதிரி காதல் உங்களுக்குள்ள அடிச்சு துவைக்கும்,
அப்புறம் எப்படியாவது பேசறத ஒரு 5 நிமிஷம் நிறுத்திட்டு வந்து எனக்கு பின்னூடடம் போடுங்க..
வாழ்த்துக்கள்....

Tuesday, May 4, 2010

நா. பிச்சமூர்த்தியும் வெளியூர்க்காரனும்

ஒரு ஊர்ல ஒரு ஓவிய கண்காட்சி நடந்தது
கண்காட்சி பக்க வந்தவங்க எல்லாரும் ஒரு படத்துக்கு முன்னாடி நின்னு இது ரொம்ப அழக இருக்குன்னு பேசிகிட்டாங்க.
ஒருத்தனுக்கு மட்டும் ஒன்னும் புரியல, அங்க இருந்த ஓவியர கூப்பிட்டு,
என்ன இது  தலைப்பும் இல்ல, வரைந்தவன் பெரும் இல்ல, ஓவியமும் தெளிவா இல்ல இந்த ஓவியத்துக்கு என்ன அர்த்தம்ன்னு கேட்டான்..
இதே கேள்விய பிக்காசோ கிட்ட கேட்டபோது அவரு என்ன சொன்னாரு தெரியுமா?
குயில் கூவுறதுக்கு என்ன அர்த்தமோ அதுதான் என் ஓவியத்திற்கும், இது ஒரு அழகு அவளோதான்..ரசிக்க முடிஞ்சா ரசிச்சிட்டு போ அப்படின்னாராம்...
அதேதான் இந்த ஓவியத்திற்கும் அப்படின்னு ஓவியர் சொல்ல..
உற்று  பார்த்தவன் மெல்ல பேசினான்,
ஒரு வகையில் பார்த்தா, மரத்துக்கு கீழ மாடு மேயரமாதிரி இருக்கு...
தலைகீழா பார்த்தா அருவி மலைமேல இருந்து விழற மாதிரி இருக்கு..

கடைசியில் முதலில் எதிர் பார்த்த மாதிரியே அதே ஓவியத்திற்கு முதல் பரிசு கிடைத்தது...
பரிசு வழங்கும் நாளும் அறிவிக்கப்பட்டது..

இதை எதிர்த்து கோர்டில் வழக்கு தொடரப்பட்டது,
வழக்கு தொடர்ந்தவன் அந்த ஓவியத்தை தான் வரைந்ததாக சொல்ல..
வழக்கு ஆரம்பித்தது..நீதிபதி நடந்தவை கேட்டார்..
விளக்கினான் ஓவியன்..
இவன் ஒரு car mechanic இவன் கார்களுக்கு வர்ணம் அடிக்கும்போது
வர்ணம் சிந்தமல் இருக்க ஒரு வித காகிதத்தின் மேல் நின்று கொண்டு வேலை செய்வான்...
அந்த காகிதத்தில் இருந்த வண்ண சிதறல்களில் மனதை பறிகொடுத்து, அதை கண்காட்சியில் வைத்தேன் அதுவே முதல் பரிசு பெற்ற இந்த ஓவியம்...
வழக்கு மேலும் நடைபெற்றது...

தீர்ப்பு:
"என்னதான் தொழிலாளி சிந்திய வர்ணம் இதுவாக இருந்தாலும் அவனுக்கு ஓவியம் பற்றிய அறிவோ உணர்வோ கிடையாது...அதை ஓவியமாக பார்த்து உலகிற்கு உணர்த்திய ஓவியனுக்கே இந்த பரிசு"

பரிசு வழங்கும் நாளுக்கு முன்னிரவில் ஓவியனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது...
தான் அவசரமாக வெளியூர் செல்ல இருப்பதால் இந்த பரிசை அந்த தொழிலாளிக்கே கொடும்படி கேட்டுகொள்ளப்பட்டது...

அப்படி வெளியூர் கெளம்பி போனவர்தான் இந்த வெளியூர்காரன்...
நான் எழுதினது கவிதைன்னே தெரியாம கவிதை(ஓவியத்திற்கு கவிதையை மாற்றாக கொள்க) எழுதினவன் நான்...
வெளியூர்க்காரன் இல்லைனா நான் என்னைக்கோ இந்த blog-a மூடிட்டு படம்பக்க போயிருப்பேன்...

மிக்க நன்றி வெளியூர்க்காரன்.....
பின் குறிப்பு: மேற் சொன்ன கதை எழுதியவர் நா. பிச்சமூர்த்தி, மறுபதிவும் ஒப்பிடலும் மட்டுமே,  நான்..