Friday, April 2, 2010

காவியக்காதல்

அன்றிரவு
இரண்டாவது ஆட்டம் சினிமா முடித்து,
பழைய நண்பனிடம்
காவியக்காதல் ஆகபோகும் நம் காதலை
சொல்லிக்கொண்டே வருகையில்
எதிரில் நின்ற காவலர் கண்ணில் படவில்லை,
ஓரம்கட்டப்பட்ட பைக்கில் இறங்கி,
திமிராய் நின்றேன்,

எங்கே பொய் வருகிறாய்? -காவலர்
"கனவுத்தொழிற்சாலைக்கு"- இது நான்
"சினிமாவிற்கு"- இது என் நண்பன்
ஒரே சமயத்தில் சொன்னோம்,

கா: "யார் நீ?"
நான்: தேவதையின் காதலன்
கா:எது?

தேவதையின் காதலன் சத்தமாய்
இரண்டாம் முறை சொல்லி விறைப்பாய் நின்றேன்,

கா: (முகம் சுழித்தவாரே...) அடையாள அட்டை எடு..

உன் புகைப்படம் கொடுத்துவிட்டு ஆர்வமாய்
அவரைப்பார்த்தேன்..
கா: யார் இது?
நா: இந்த காதலனின் தேவதை..
சற்று விரைப்பனார் காவலர்..

என் நண்பனிடம் திரும்பி யார் இது எனக்கேட்டார்,

இது புகைப்படம் எடுக்கப்பட்ட தேவதைன்னு சொல்லுடான்னு
கண்சிமிட்டினேன்..

கடுப்பான நண்பன், பல்லை கடித்துகொண்டிருந்தான்,

எனக்கான அடையாளம் நீயானபின்பு
எனக்கான அடையாள அட்டை
உன் புகைப்படம்அல்லாது வேறன்ன இருக்கமுடியும்?


"இது புகைப்படம் எடுக்கப்பட்ட தேவதை"ன்னு நான் அழுத்தமாக
சொன்னபோது,
காதோடு சேர்த்து விழுந்த அடியில்
பொறிகலங்கி பூமி அதிர்வது
கண்ணில் தெரிந்தது..

"!ஹைய்யா! என் காதல் கவியக்காதலாகிவிட்டது"
என நான் துள்ளி குதித்த போது
காவலரும் என் நண்பனும் ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள்..


பின்ன என்னடி,

நான் உன்னை காதலிக்கறது தெரிஞ்சு,
உன் அப்பனாவது
ஆள் வச்சு அடிச்சிருக்கணும்,
உன் அண்ணனாவது
அவன் நண்பர்கள் நாலு பேரை
கூட்டிகிட்டு வந்து மிரட்டி இருக்கணும்,
நீயாவது ஒரு முறை முரசிருக்கணும்,
இது எதுவுமேஇல்லை,
ஒரு காதல் காவியக்காதல்
ஆகணும்ன்ன ஒரு சின்ன வன்முறை கூட இல்லாம எப்படி?

10 comments:

பட்டாபட்டி.. said...

சூப்பர் கவிதைண்ணே

Veliyoorkaran said...

காலைலேயே தனியா உக்காந்து, முகம் தெரியாத என்னோட காதலிய நெனைச்சு வெக்கப்பட வெச்சுடீங்களே சிவா.எல்லாத்தையும் படிச்சேன்..என்னத்த சொல்ல,எல்லாம் வழக்கம்போலத்தான்...!! (சூப்பர்.)..கடைசி பதிவு சூப்பரோ சூப்பருங்க...!! :) உங்களால இப்போ நானும் பெரும்பாலான பதிவுகளுக்கு அஞ்சலி போட்டோவ யுஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்...!!)

Veliyoorkaran said...

@@Siva///

என்னையும் என்னவளையும் படிப்பவர்கள், காதல் வராமல் செத்துப்போகமாட்டார்கள்.///

சத்தியமான வார்த்தை ஓய்..!! தக்காளி காதல் ராட்சஷன் ஓய் நீரு..! :)

Veliyoorkaran said...

???????????????????????????????????

சிவமஞ்சுநாதன் said...

@Veliyookaran:
தாமதத்துக்கு மனிக்கவும்...
இனிமல் ஒழுங்கா blogkku வருவேன்னு உருதியளிக்கறேன்....

//நானும் பெரும்பாலான பதிவுகளுக்கு அஞ்சலி போட்டோவ யுஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்...!! //
அஞ்சலி பொண்ணு டக்குன்னு எப்படி இவ்ளோ அழகா மாறிச்சு?

//காதல் ராட்சஷன் ஓய் நீரு..! //
ரொம்ப அழமான வார்த்தைகள்...
என்கிட்டே காதல் இருக்குதோ இல்லையோ...
ஆனா நீங்க படிக்கற வரைக்கும் நான் எழுதுவேன்...

@Pattapatti:
//சூப்பர் கவிதைண்ணே//
Veliyookaran மூலமா உங்கள எனக்கு தெரியும்...
மிக்க நன்றிங்க...

Veliyoorkaran said...

@@@சிவமஞ்சுநாதன் said...
@Veliyookaran:
தாமதத்துக்கு மனிக்கவும்...
இனிமல் ஒழுங்கா blogkku வருவேன்னு உருதியளிக்கறேன்....//////////

:)

பட்டாபட்டி.. said...

Blogger Veliyoorkaran said...

@@@சிவமஞ்சுநாதன் said...
@Veliyookaran:
தாமதத்துக்கு மனிக்கவும்...
இனிமல் ஒழுங்கா blogkku வருவேன்னு உருதியளிக்கறேன்....//////////

:)
//

அண்ணாச்சி.. அடுத்த கவிதைய போடுங்க...

Zero to Infinity said...

Thanks patapati and Veliyoor to introduce this blog..

சிவமஞ்சுநாதன் Sir...Since last few days I am reading all your poems...most of them are excellent...

முத்துராஜ் said...

சிவமஞ்சுநாதன்,

கலக்கிட்டிங்க சிவா... Veliyookaran பதிவை மேய்ந்துகொண்டு இருக்கையில் உங்க பதிவோட லிங்க் கிடைத்த்து. இவ்வளவு நாளா உங்க பதிவ பார்க்கலயேனு உண்மையா feel பண்றேன் பாஸ்...

//என்னையும் என்னவளையும் படிப்பவர்கள், காதல் வராமல் செத்துப்போகமாட்டார்கள்//

இது தான் என்னை படிக்க தூண்டிய வரிகள்...

உங்க எல்லா பதிவும் படிச்சுட்டேன் எல்லாமே அருமை... "தேவதையின் காதலன்" பதிவு சான்ஸே இல்ல பாஸ்.... மிக அருமை...

இனி நானும் உங்கள் பதிவின் ரசிகன்... :)

தொடர்ந்து கலக்குங்க...

முத்துராஜ் said...

//அஞ்சலி பொண்ணு டக்குன்னு எப்படி இவ்ளோ அழகா மாறிச்சு?//

நானும் இதையே தான் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன். என் systemத்தில wallpaperஆ அந்த பொண்ண வச்சிருக்கேன்னா பாருங்களேன்...