Saturday, January 16, 2010

கைதொடும் அழகு

நீ கைதொடும்
பொருள்களெல்லாம்
அழகானவைகளாக மாறிவிடுகின்றன,
ஒரு முறை என்னை தீண்டிவிட்டுப்போ,
ஒரு பேரழகியின் காதலன்,
குறைந்தபட்சம்
அழகாகவேனும் இருக்கவேண்டுமல்லவா!!!

உன்னிடம் பேசும் எல்லோரிடமும்

உன்னிடம் பேசும் எல்லோரிடமும்
பேசத்துடிக்கிறது மனது,
ஒரு தேவதையிடம் பேச
குறைந்த பட்சம் என்ன தவம் செய்ய வேண்டுமென,
ஒருவரது சொல்லிவிடமாட்டர்களா என்னை?

ஒரு கனவுகோப்பை

பெரு வண்ணங்களற்ற ஒரு ஆடையில்
சோம்பல் முறித்து,
இரட்டை சடையிலிருந்து,
விலகியும் ஒட்டியும்
இருக்கும் முடிகளை புறந்தள்ளி,
விறகடுப்பில் சமைக்கும்
உன் அம்மாவிடம்
தேனீர் வாங்கி நீ பருகும் போது,
எதிரே அமர்ந்து உன்னைப்பருக
நினைத்த கனவில்,
பாதியில் திடுக்கிட்டு விழித்தேன்,
தேவதை தேனீர் அர்ந்துவது
ஒருவாறு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்,
அதென்ன விறகடுப்பு சமையல்
என மனது கேட்டபோதுதான்
புரிந்து கொண்டேன்,
நான் உழவன் மகன்
என்பதை மறந்துவிட்டேன் என்பதை!!!
என்னை எனக்கு நினைவு படுத்த,
உன்னையும் உன் நினைவுகளையும்,
உபயோகபடுதிக்கொள்கிறேன்   நான்,
என்னை மன்னிகாதே
வேண்டுமென்றால் மணந்துகொள்...

பொறுக்கி

நீ சிந்திய வெட்கத்தை
பொறுக்க ரோட்டரமாய் நான்,
"பொறுக்கி பசங்களுடன்
சேராதே"  காதோரமாய்
சொல்லியனுப்பிய உன் அம்மா!
சொல்லாமல் சிரிக்கும் நீ,
"சரிதான்" நம்மைப்பார்த்து
கேலி பேசுகிறது  காதல்..

ஒருதலைபட்சமானவள்

நீ சிணுங்கி சிரிக்கும் போது,
உன் உதடு தொட வரும்
காற்றை அனுமதித்துவிட்டு,
அதே நோக்கத்தில் வரும்
உன் காதோர முடியை
விளக்கிசெல்பவளே!
நாளை
உன் இதழ் தொட வரும்
என் கைகளை அனுமதித்துவிட்டு,
என் இதழ்களை தடுக்கமாட்டாய்,
என என்ன நிச்சயம்..!
எழுதிக்கொடு இப்பொழுது,
நீ ஒருதலைபட்சமானவள் இல்லையென்று,
பேனாவும் பேப்பரும் இல்லையென்றால் என்ன?
என் கன்னமும் உன் உதடுகளும்
எதற்கு இருக்கின்றன?

எப்படி இது சாத்தியம்?

எல்லோரையும் பார்க்கும்
கண்களால்தான் என்னை பார்க்கிறாயா?
நம்ப முடியவில்லை...!
உன் பார்வையை நேருக்கு நேர்
சந்தித்த 13-வது நாள்,
எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது,
உன்னை சுற்றி எப்படி
ஒரு உலகம்
ஆரோக்கியமாய் இயங்குகிறது?

பயணங்கள் முடியவேண்டாம்

பேருந்து பயணத்தில்
நீ என் தோள் சாய்ந்து தூங்கும் போது,
நான் என் உலகம் மறக்கலாம்,
பயணத்தின் முடிவில்
என்னைப்பற்றி நீ எனக்கு சொல்ல,
அதிர்ச்சியில்
உன் பட்டாம்பூச்சி விழிகள்
 படபடக்காமலிருக்க,
ஏதாவதொன்று செய்து செய்துகொள் நீ இப்பொழுதே...

ஏன் காத்திருக்க வேண்டும்?

முதலிரவு முடிந்த நாளின்
அழகான காலையில்,
எப்போது குழந்தை பிறக்கும்
எனக்கேட்ட என்னை,
கண்சுருக்கி, உதடு சுழித்து,
என் காதுமடல் திருகி,
"காதல்  வந்ததற்கும்
கல்யாணத்துக்கு ஒரு வருடம்
இடைவெளி இருந்துச்சுல்ல, இப்ப மட்டும் என்ன அவசரம்,
போய் பல்துலக்கு "
என நீ கட்டளை இட்ட நொடியில்,
ஏன் இரவு வரை காக்க வேண்டுமென மனது கேட்டது..
பின்குறிப்பு: இரவு வரை காத்திருப்பது குழந்தைக்காக அல்ல

தேவதை கதை

பார்த்துக்கொண்டிருக்கும் போதே
மழையாய்,
பறவையாய், வண்ணத்துப்பூச்சியாய்
மல்லிகையின் மகரந்தமாய்,
மௌனமாய் மாறிவிடுகிறாய் நீ!
நான் கேட்ட எல்லா தேவதை கதைகைவிடவும்
வித்தியாசமானவள் நீ,
கூடுதலாய் பூமியிலும்  நடக்கிறாய் நீ..

கண்ணில் கண்ணில்

நேரில் வா பார்க்கலாம் என்றாய்,
உன் கண்கள் பார்க்க பயந்து
மண்ணைபார்த்த என்னைப்பார்த்து
இரக்கமே இல்லாமல் நீ கேட்ட கேள்வி,
"மண்ணுன்னா உனக்கு அவ்வளவு  பிடிக்குமா?
வேணும்னா கொஞ்சம் மண்ணை அள்ளி உன் கண்ணில் போடட்டுமா?"
வந்த சிரிப்பை அடக்கமுடியாமல்
உன்னை அள்ளி என் கண்ணில் போட்டுக்கொண்டேன்..

காணாத கனவு

"ஒளிபடைத்த கண்ணினாய்  வா வா"
என் வயதிற்கு வரும் முன் பாடும் போது,
நீ வந்து நிற்ப்பாய்
என கனவிலும் நினைக்கவில்லை நான்,
இன்று என் கனவெல்லாம் நீயாகிகிடக்கிறாய்..

நான் Vs வெற்றி

ஏன் இவ்வளவு அழகாக பிறந்தாய்?
என் இதய துடிப்பை நிறுத்தி,
இமைகள் படபடப்பை அதிகமாக்கி,
எனக்கு சூன்யம் வைத்துவிட்டு
லாவகமாய் உன்னை தேவதை என்றும்
அழைக்க வைத்துவிட்டாய்,
நாளை நான்,
பைத்தியகாரனானால்,
என்னை தேவதை பிடித்துவிட்டதென
ஊருக்குள் சொல்லும்படி
என் நண்பர்களிடம் சொல்லிவிட்டேன் நான்..
எப்படியும் தோற்க்கமாட்டேன் நான்
நீ இருக்கும் வரை...

அவை அப்படித்தான்

அனிச்சமலர் பாதங்களில்,
என்னதான் எதிர்பார்க்கின்றன
உன் கொலுசுகள்?
ஏன் இத்தனை சிணுங்கல்கள்?
உன் பாதம் தொட்ட வெற்றிக்களிப்பா?
நாளை உன் அழகின் மொத்த பிரமாண்டம்
காணும் நாளில்,
உன் கை விரல் மோதிரம் போல்
மௌனமாய் உன்னில் சரணடையும்,
அதுவரை பொறுத்துக்கொள் அதன் கூச்சலை..

என்ன அர்த்தம்?

ஆண்கள் எவரேனும்
பூச்சூடி சென்றால்,
நீ எங்கோ ஒரு பூவை
அன்றைய தினம்
தொட்டிருக்கிறாய் என்று அர்த்தம்..

மாறிப்போன விதிகள்

நீ வந்த நாளில்,

பூங்காகளிக்களில்
அறிவிப்புபலகை மாறிப்போனது,
"பூக்களை தொட்டுவிட்டுப்போவென",
தேவதை தொட்டபூவை,
பார்க்க யாருக்குதான் ஆசை இருக்காது?

முடிக்கப்பட வேண்டிய வேலைகள்

முடிக்க வேண்டிய வேலைகள் நிறையவே இருக்கின்றன,
நீ சடை பின்ன கூந்தல் வளர்க்க வேண்டும்,
நமக்கு பிறக்க போகும்
9  குழந்தைகளுக்கும் பேர் வைக்க வேண்டும்,
நீ முத்தம் தரப்போகும்
நேரங்களை முன்கூட்டியே அனுமானிக்க வேண்டும்,
நமக்கு பிடித்த இளையராஜா பாடல்களை
தொலைக்காட்டிசியில் எதேச்சையாக
போடும் போது,
எத்தனை முத்தம் பரிமாரிக்கொல்வதென,
முடிவுகட்ட வேண்டும்,
தயவுசெய்து உன் காதலை கொஞ்சம் கடன்கொடு..

நீ, கவிதை, நாம்

பின்னரவு 1  மணிக்கு மேல்
உனக்கான கவிதைகள் அதிகம்
பிறக்கின்றன...
நடு இரவில்
விழிக்க வைத்து
விடிய விடிய கவிதை எழுத வைக்கும்
உன்னை தேவதை என்றழைப்பதா?
மோகினி என்றழைப்பதா?

என்ற சந்தேகம் என்னில் ஏனோ எழவில்லை!
எல்லோரும் என்னை
தேவதைக்காதலன் என்றழைப்பதால்..

ஏன் தாமதம்

உன்னைவிட அடர்த்தியான,
ஆழமான, நளினமான
கவிதை உலகில் இல்லை,
நியாப்படி பார்த்தால்,
மிகச்சிறந்த கவிஞருக்கான
விருதை என்றோ கொடுத்திருக்க வேண்டும்
உன் தந்தைக்கு..

Tuesday, January 12, 2010

நீயும் நானும்

நீயும் நானும்
கட்டிக்கொண்டு தூங்குகையில்,
நம் காதல் விழித்துக்கொண்டு,
இரவு முழுவதும் தூங்காமல் அலைகிறது...

விரல்

நாளை முதல்
என் சுண்டு விரலுக்கு முத்தம் கொடுப்பதை,
நிறுத்து நீ,
உன் எச்சில் தின்று,
நாடு விரலையும் தாண்டி,
வேகமாய் வளர்கிறது என் சுண்டுவிரல்..

சிவப்பு

தினம் தினம் நான் கைக்கு மருதாணி
வைக்கிறேனா?  எனக்கேட்டு
பக்கத்து வீட்டு குழந்தை நச்சரிக்கிறது,
என்னைப்போலவே அவளுக்கும் கை சிவக்கனுமாம்,
ஒரே ஒரு முறை அவளுக்காக
சிறிது மருதாணி அரைத்து வை,
எனக்கு வழக்கம்போல்
உன் முத்தம் போது...

எல்லாம் உனக்காக

காதல் புரியவில்லை
உனக்கென மிகபெரிய அளவில்,
கவிதை எழுதி காத்திருக்கும்
என்னைப்போல,
உன் முனுமுனு   பிரார்த்தனை
புரியவில்லையென,
மிகப்பெரிய அளவில்
காதுவளர்த்து காத்திருக்கிறார்,
பிள்ளையார்,
காக்க வைத்தது போதும்,
தரிசனம் கொடு,
எனக்கும் கடவுளுக்கும்...

காரணம்

உனக்கு வேண்டியதெல்லாம்,
உனக்குள்ளே இருக்கு என்றவளே,
தலை கவிழ்ந்து
என்னை திரும்பிகூட பார்க்காமல்
செல்கிறாய் நீ..
நான் உனக்குள்ளும் இருக்கிறேனா என்ன?

நாத்திகம் முதல் ஆத்திகம் வரை..

உனக்கும் அம்மனுக்கும்
6 வித்தியாசம்
கண்டுபிக்க முயன்ற என் கையிலிருந்த
புகைப்படத்தை,
நீ பிடிங்கிக்கொண்டு,
என்னை நீ கோபமாய் பார்த்தபோது..
நான் ஆத்திகனானேன்...

சந்திப்பு

இனிமேல் கடற்கரையில்,
நாம் சந்தித்துக்கொள்ள வேண்டாம்,
உன்னை தீண்ட,
எனக்கும் தென்றலுக்கும்
நடக்கும் சண்டையில்,
எப்பொழுதும் நான் ஜெயிப்பதே இல்லை...

ஈர்ப்பு

அம்மா அபசகுனமோ என்கிறாள்,
அப்பா சன்னல் சாத்துகிறார்,
தங்கை பேயென புருவம் சுருக்கி பார்க்கிறாள்,
பின்னே,
பஞ்சமுக விளக்கில்,
நீ ஏற்றிய 5  தீபங்களும் உன்னையே நோக்கி எரிந்தால்,
யார்தான் குழம்பமாட்டார்கள்...

ஒருதலைபட்சம்

அலை உன் கால் தொடலாம்,
தென்றல் உன் கன்னம் தொடலாம்,
உடை உன் இடை தொடலாம்,
நான் உன் விரல் தொடக்கூடாதோ?
காதலில் மட்டும்
 ஏன் இப்படி விதிகள் ஒருதலைபட்சமாய்?

உதட்டுசுழி

நீ உதடு சுழித்து பழிச்சான் காட்டும்போது
உன்னை முத்தமிட்டே பழகிவிட்டேன் நான்..
நாளை பக்கத்து வீட்டு குழந்தையுடன்,
சண்டை போடும்போது உன் கோபத்தை காட்ட,
உதடு சுழித்து தொலைக்காதே,
பின் நள்ளிரவில்,
குழந்தைகள் முன் முத்தமிடுவது தவறென,
நீ எனக்கு அறிவுரை சொல்ல வேண்டி வரலாம்..