Sunday, December 27, 2009

காதலில் காமம்

ஒரு அருமையான மாலை நேரம்,
என் மௌனம் கண்டு திகைத்த அவள்,

அவள்: என்னடா எப்பவும் லொடலொடன்னு பேசுவே இன்னிக்கு சத்தமே காணோம்?

நான்: இல்ல, நம்ம தமிழின்  பெருமையை யோசிச்சு கிட்டு இருக்கேன்.

அவள்: நான் இருக்கும் போது எல்லாத்தையும் யோசி, ஆன நான் போன பின்னாடி என்ன பத்தி மட்டும் யோசி.
ம்ம்ம்.. அப்படி என்ன யோசிக்கரே..?

நான்: இப்போ தமிழ்ல 'ம' மற்றும் அதான் குடும்ப சொற்களுக்குள்ள
(மி, மெ, மொ)உறவை பத்தி யோசிக்கறேன்..

அவள்: புரியாத மாதிரி பேசாதே..
நான்:
இப்போ ம, மெ, மு, மி, மொ இந்த எல்லா எழுக்களில் இருந்து ஆரம்பிக்கும் எல்லா வார்த்தைகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கு..
எடுத்துக்காட்டு சொல்றேன் கேளு:
ம- மச்சம்
இப்போ ஒரு "மச்சம்" உன் வயத்துல இருக்குன்னு வச்சுக்கோ,
இது மறைவான இடத்துல இருக்கறதனால இதை "மறைபொருள்ன்னு" சொல்லலாம்,
இது உன் உடம்புல இருக்கறதால இதை "மெய்ப்போருள்ன்னு"  சொல்லலாம்...

மு- முத்தம்
முத்தத்துல பல வகை இருக்கிறது உனக்கே தெரியும்,
இதழ் முத்தம், செவி முத்தம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்,

மி- மிச்சம்
இப்போ கலவில இருவைகயான கோட்பாடுகள் மிக பிரசித்தம்,
1 . இறங்கு வரிசை
2 . ஏறுவரிசை
முத்தத நெத்தில ஆரம்பிச்சு, அப்பறம் புருவம், இமைகள்ன்னு கீழ இறங்கி,
பாதம் சேர்வது-இறங்கு வரிசை
இறங்கு வரிசைய தலைகீழா செஞ்சா ஏறுவரிசை..
இப்படியான கோட்பாடுகள கடைபிடிக்கும் போது, எங்கேயது சிக்கி போய்ட்டா மீதி முடிக்கவேண்டிய பகுதிகள நாம "மிச்சம்"ன்னு சொல்றோம்..

மொத்தம்: மிச்சமே வைக்காம தலைவன் முடிச்சான்னா அதுதான் மொத்தம்..

அவள்: போதும்டா, ஆமா இப்படியெல்லாம் யோசிக்க உனக்கு யாருடா சொல்லிகுடுத்தா?
 என் மூளை என நான் செல்லமாய் சிரிக்க.

இல்லாத ஒன்ன பத்தி பேசதேன்னு எவ்வளவு தடவ சொன்னாலும் நீ கேட்ட்கமாட்டியா என சொல்லி அவள் காதை கடிக்க..
முடியாது என நான் அவள் கன்னம் கடிக்க...

ஒரு கொசு கடித்து இந்த கனவு கலைந்தது...

3 comments:

Veliyoorkaran said...

அயோயோ சிவா செக்ஸ் கதை எழுத ஆரம்பிச்சுட்டாரு...எல்லாரும் ஒடுங்க..காதலையே இந்த ஆளு பிரிச்சு மேயுவாறு..செக்ஸ் இவர் கைல மாட்டிகிட்டு என்ன பாடுபடபோகுதோ..... :) ....ஹி ஹி ...சோக்கா கீது மே....அந்த பாழாப்போன கொசுவ மட்டும் பெட்ரோல் ஊத்தி கொளுத்தும்... ச்சே அதுகப்ரம் என்ன நடந்துச்சுன்னு தெரியலையே....

Anonymous said...

Siva...you can add that vote button in your page..If you want..Why I am telling you is it will help us to promote your page to others.... ..en innum vekaama irukeenga...nalla eluthuku vilambaram thevailaingara aanavamaa... ? :)

Veliyoorkaran said...

வசந்த கால பறவையோட புது கூடு ரொம்ப அழகா இருக்குங்க...அழகான தேர்வு... :)