Sunday, December 27, 2009

காதலில் காமம்

ஒரு அருமையான மாலை நேரம்,
என் மௌனம் கண்டு திகைத்த அவள்,

அவள்: என்னடா எப்பவும் லொடலொடன்னு பேசுவே இன்னிக்கு சத்தமே காணோம்?

நான்: இல்ல, நம்ம தமிழின்  பெருமையை யோசிச்சு கிட்டு இருக்கேன்.

அவள்: நான் இருக்கும் போது எல்லாத்தையும் யோசி, ஆன நான் போன பின்னாடி என்ன பத்தி மட்டும் யோசி.
ம்ம்ம்.. அப்படி என்ன யோசிக்கரே..?

நான்: இப்போ தமிழ்ல 'ம' மற்றும் அதான் குடும்ப சொற்களுக்குள்ள
(மி, மெ, மொ)உறவை பத்தி யோசிக்கறேன்..

அவள்: புரியாத மாதிரி பேசாதே..
நான்:
இப்போ ம, மெ, மு, மி, மொ இந்த எல்லா எழுக்களில் இருந்து ஆரம்பிக்கும் எல்லா வார்த்தைகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கு..
எடுத்துக்காட்டு சொல்றேன் கேளு:
ம- மச்சம்
இப்போ ஒரு "மச்சம்" உன் வயத்துல இருக்குன்னு வச்சுக்கோ,
இது மறைவான இடத்துல இருக்கறதனால இதை "மறைபொருள்ன்னு" சொல்லலாம்,
இது உன் உடம்புல இருக்கறதால இதை "மெய்ப்போருள்ன்னு"  சொல்லலாம்...

மு- முத்தம்
முத்தத்துல பல வகை இருக்கிறது உனக்கே தெரியும்,
இதழ் முத்தம், செவி முத்தம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்,

மி- மிச்சம்
இப்போ கலவில இருவைகயான கோட்பாடுகள் மிக பிரசித்தம்,
1 . இறங்கு வரிசை
2 . ஏறுவரிசை
முத்தத நெத்தில ஆரம்பிச்சு, அப்பறம் புருவம், இமைகள்ன்னு கீழ இறங்கி,
பாதம் சேர்வது-இறங்கு வரிசை
இறங்கு வரிசைய தலைகீழா செஞ்சா ஏறுவரிசை..
இப்படியான கோட்பாடுகள கடைபிடிக்கும் போது, எங்கேயது சிக்கி போய்ட்டா மீதி முடிக்கவேண்டிய பகுதிகள நாம "மிச்சம்"ன்னு சொல்றோம்..

மொத்தம்: மிச்சமே வைக்காம தலைவன் முடிச்சான்னா அதுதான் மொத்தம்..

அவள்: போதும்டா, ஆமா இப்படியெல்லாம் யோசிக்க உனக்கு யாருடா சொல்லிகுடுத்தா?
 என் மூளை என நான் செல்லமாய் சிரிக்க.

இல்லாத ஒன்ன பத்தி பேசதேன்னு எவ்வளவு தடவ சொன்னாலும் நீ கேட்ட்கமாட்டியா என சொல்லி அவள் காதை கடிக்க..
முடியாது என நான் அவள் கன்னம் கடிக்க...

ஒரு கொசு கடித்து இந்த கனவு கலைந்தது...

கட்டிக்கொண்டு, கதை பேசி, முத்தம் கொடுத்து

கட்டிக்கொள்ளும்போது,
கதை கேட்கிறாய்,
கதை சொல்லும்போது
முத்தம் கேட்கிறாய்,
முத்தம் தரும்போது
மீண்டும் கட்டிக்கொள்ள சொல்கிறாய்,
என்ன வேண்டுமென
முடிவை சொல் எனேக்கேட்ட போது,
உன்னிடம் இருக்கும் எல்லாமும்
எனச்சொல்லி கட்டிக்கொண்டாய்,
நான் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டேன்..

Tuesday, December 22, 2009

வசந்தகால பறவையின் வரலாறு

வசந்தகால பறவை..
இந்த வார்த்தை எனக்கு அறிமுகமான வரலாறு உங்களுக்கு புரியணும்னா...
ஒரு மனோதத்துவ மருத்துவர் மனநிலையில் இருந்து இத நீங்க படிக்கணும்...


" அப்போ   எனக்கு 8 வயசு, நடுராத்திரிக்கு ஒருமணி நேரம் இருந்துச்சு,
வேகமா வந்து மாமா எழுப்பி  விட்டாரு. என்னை பிரச்சனைன்னு கேட்டா..
புதுசா dress வாங்கிட்டு வந்திருக்கேன் சொல்லி, ஒரு  ஜோடி டிரஸ் கொடுத்தாரு,
இதுதான் வசந்தகால பறவை ஸ்டைல்ன்னு சொல்லி எப்படி இருக்குன்னு கேட்டாரு..
காவி நிறத்தில் அமீபா வரைந்த மாதிரி ஒரு சட்டைய கொடுத்துட்டு, இதுதான் வசந்தகால பறவைன்னு சொன்னா யாரு  மருத்துவரே நம்புவாங்க..?
நல்ல தூக்க கலக்கம், வசந்தகால பறவைன்னா என்னன்னு
 கேட்டேன்..நியாமான கேள்விதானே இது?
இதுதெரியாதா,  ரமேஷ் அரவிந்த் நடுச்சு புதுசா வந்திருக்கற  படம்ன்னு பதில் வந்துச்சு...
அட அப்படியான்னு ரமேஷ்  அரவிந்த்க்கு அந்த டிரஸ் போட்டு ஒரு டான்ஸ் ஆட விட்டேன்...
அந்த சட்டையோட அழகவிடவும், அந்த சட்டை வசந்தகால
 பறவை வார்த்தைக்கு தொடர்புடையதா இருந்தது,  எனக்கு ரொம்ப பெருமை தந்தது..
 இன்னிக்கு வரைக்கும் அந்த படம் பாக்க முடியல...
ஆனா நல்லதூக்க்துல  சொன்ன அந்த அழகான தமிழ்ச்சொல் ஏனோ மனசுக்குள்ள அப்படியே ஒட்டிகிடுச்சு.."


   இதுதான் டாக்டர் நடந்ததுன்னு இப்போ நான் கண்ணாடிய கழட்டி வச்சா இந்த flashback முடிவுக்கு சரியா இருக்கும் நினைக்கேறேன்.....

Friday, December 4, 2009

வெறுமை

நள்ளிரவில்..
யாருக்கும் தெரியாமல் பூக்கும் பூ..
யாருக்காக கத்துகிறோம் என தெரியாமல் கத்தும் சுவர்கோழி..
ஊருக்கு வெளிய எரியும் மின்விளக்கு,
காரணம் இல்லாமல் அழும் குழந்தை,
எதற்காக எழுதுகிறேன் என தெரியாத நான்...
எதோ தொடர்பு இருக்கிறது எங்களுக்குள்...
அது வெறுமை தவிர்த்தல் என்பதாக கூட இருக்கலாம்...

என்ன செய்ய?

நீ என்னுடன் வாழமுடியாது...
தீர்மானமாய் சொல்லிவிட்டாய்..நீ
உன்னுடன் வாழ்வதற்கு
சேமித்து வைத்த கனவுகளை என்ன செய்ய?
என் கிராமத்து வீட்டில் கூடுகட்டும்
பேர் தெரியாத குருவிக்கு கொடுத்துவிட்டேன் என் கனவுகளை...
ஜாதி மதம் கடந்து வாழும் அந்த குருவி கொண்டுசெல்லட்டும்
புரிந்துகொள்ள முடியாத அதன் உலகிற்கு...

என்ன நடக்குது இங்கே...

வணத்துபூச்சி பார்த்து தொலைந்து போன நான்..
மழைக்கு பின்னான மண்வாசனையில் மறைந்துபோன நான்...
ஒரு மழழையின் சிரிப்பில் சொக்கிப்போன நான்..
ராமகிருஷ்ணனின் புத்தகத்தில் சிக்கிப்போன நான்...
பூக்களின் வாசனையில் புதைந்துபோன நான்...
உன் பார்வையின் வீச்சில் இரண்டாம் முறை பிறந்துவந்தேன்..

யார் நீ?

திறந்திருக்கும் ஜன்னலில் பெய்யும் ஐஸ்கட்டி மழை ..நீ
தூக்கத்தில் சிரிக்கும் குழந்தை... நீ
மௌனத்தில் பேசும் புத்தர்...நீ
மகரந்தம் சுமந்து சிரிக்கும் மல்லிகை...நீ
இதயத்தில் ஆணி அடிக்கும் ராட்சசி...நீ
பூக்களுடன் பேசும் புனைகை... நீ
நான் யார் உனக்கு என நீ கேட்ட பொழுது...
மேற்கண்ட எந்த உவமையும் வெளிப்படவில்லை..
நீ என் தேவதை என்பதை தவிர...

முடிவு


உன்னை பற்றி மட்டுமே
எழுத ஆரம்பித்த வலை பக்கத்தில்
ஓரிரு கவிதைகள்
உன்னை பற்றி இல்லாமல் இருக்கலாம்..
ஆனாலும் நான்
உன்னைபற்றிதான் எழுதுகிறேன்
என சொன்னகணத்தில்
"தெரியும் 7 -வது முறை படிக்கும்போது
புரிந்தது" என்ற உன் பதிலை
நான் எதிர்பார்க்கவில்லை...
என்ன பதில் சொல்வதென
தேரியவில்லை...
"நீ இல்லாமல் போகும் நாளில் இந்த வலைபூவே இல்லாமல் போகும்.."

நிசப்தங்கள்


உன் வார்த்தைகளுக்கு இடையிலான
மௌனங்கள்- இந்த பிரபஞ்சத்தின் நிசப்தங்கள்..
புத்தரின் மௌனங்களை ரசித்த எனக்கு
உன் மௌனங்களை ரசிக்க முடியவில்லை..
பேச தெரியாமல் மௌனமாய் நீ..
பேச முடியாமல் மௌனமாய் நான்..
வார்த்தைகள் அற்ற உலகில் பூக்களாய்
பிறக்க வேண்டியவள் நீ..
பூக்கள் மட்டும் உள்ள உலகில் காற்றாய்
பிறக்க வேண்டியவன் நான்..
மனிதர்களாய் பிறந்து தொலைத்து ஏன் என புரியவில்லை நமக்கு.. !?!

ஏமாற்றத்தின் வலி

"நீ எனக்கானவள் இல்லை" என நண்பன் சொன்னபோது,
தேவதைகளை புரிந்துகொள்வது
உன்னை போன்ற மனிதர்களால் முடியாது
என பதில் சொல்லிவந்தேன்..
என் தொலைபேசிக்கு பதில்
பேசாத உன்னை பற்றி என்ன சொல்ல ...
"மானுடர்கள் அழைப்புக்கு
பதில் சொன்னால் அவள் எப்படி தேவதையை இருக்க முடியும்"
என சொல்லி வந்தேன்...
ஏமாற்றத்தின் வலியை பகிர்ந்துகொள்வது எப்படி? என தெரியவில்லை எனக்கு...

தோல்வியல் வெற்றி

பெரும்பாலான நேரங்களில்
உன்னிடம் தோற்றுப்போகிறேன் நான்..
நீ வேற்றிபெரவேண்டி
நான் தோற்றுப்போவது
உனக்கு புரியும் நாளில்
நான் வெற்றிபெறுவேன்
நீ தோற்றுப்போவாய்...
வெற்றிகளும் தோல்விகளும்
கணிக்கட்டும் காதலுக்கான இலக்கணங்களை,
இவைகளுக்கு அப்பாற்பட்ட
ஒரு வாழ்வை வாழ்ந்து முடிப்போம் வா,
நம் இறுதி ஊர்வலத்தில்,
ஒரு தேவதையின் கனவு நிறைவேறியது
என உலகம் உரக்க சொல்லட்டும்...

உன் பருவத்திமிர் கண்டு,


தொடர் மழைக்கு பின்,
வானவில்லுக்கு வெட்கப்பட்டு வெளியே வராத வண்ணத்துபூச்சி...
சூரியனுடன் சேர்ந்து சுவாசிக்கும் ஈசல்பூச்சி..
அவள் தொடர் பார்வைக்கு பின்,
வெளி வர வெட்கப்படும் மீசை,
என் நினைவுடன் சேர்ந்து நடை போடும் உன் ,
பருவ மாற்றங்கள்..
அவள் பார்வைக்கு முன்னும் பின்னும் வரும் மாற்றங்கள்,
பருவத்தால் வந்த மாற்றங்களா?
பார்வையால் வந்த மாற்றங்களா?
மௌனத்தால் பதில் சொல்லிபோகிறாள் அவள்..
புரியவில்லை எனக்கு...

Thursday, December 3, 2009

தண்டனை

என் உயிர் நீயான பின்பு
மரண தண்டனையாய் மௌனம் கொடுத்து,
யாரை கொல்லப்போகிறாய்?

யாரை குறை சொல்ல?!?

நான் இருக்கும் திசை தெரிந்தும்,
பிடிவாதமாய் பாதை மாற்றி நடக்கிறாள் அவள்,
அவளை பார்ப்பது என் இஷ்டம்,
என்னை பார்க்காமேல இருப்பது அவள் இஷ்டம்...
என் பார்வைகளை குறை சொல்லாதே
என்னில் காதல் இருக்கும் வரை...
அவள் பாரமுகதையும் குறை சொல்லாதே,
அவளில் காதல் வரும் வரை....