Monday, September 7, 2009

கண்ணை மறைத்த காதல்

குளித்து முடித்துவிட்டு வரும் நீ..
எப்பொழுதும் வம்பு இழுக்கும் நான்..
சிணுங்கி சிரிக்கும் நீ...
அன்று மேற்கண்ட எதவும் நடக்க வில்லை..
படுக்கை அறையில்..
புத்தகம் படிக்கும் நான்..
நீ அருகில் வருவதை
கவனித்தும் கட்டிக்கொள்ளாமல்,
கவனமாய் புத்தகம் படித்த என்னிடம்..
நீ கேட்ட கேள்வி...
இன்னும் எவ்ளோ நேரம், இந்த நடிப்பு தொடரும் என்றாய்..
இந்த புத்தகத்திற்கு தலைப்பு கண்டு பிடிக்கும் வரை என்றேன் நான்..
என்ன உளர்ரிங்க,
அட்டையில் இருக்குமே என்னாச்சு?
இந்த புத்தகத்தின் சிறப்பே அதுதான்..
எல்லா பக்கத்தின் நடுவிலும் ஒரு குறிப்பு இருக்கும்..
எந்த 10 பக்கத்தை சேர்த்து படித்தாலும் உனக்கு தலைப்பு புரியும் என்றேன்..
எதுவும் பேசாமல் என்னருகில் வந்த நீ
புத்கத்தை வெறித்து பார்த்து கொண்டே..
என் தோள்மேல் கை போட்டு நீயும் படிக்க ஆரம்பித்தாய்...
அன்று வெள்ளிகிழமை,
தலை பின்னாமல் விட்டிருந்தாய்...
மின்விசிறியின் வேகத்துக்கு நடனமாடியது உன் கூந்தல்..

5 நிமிட மௌனத்திற்கு பிறகு..
காதல் கண்ணை மறைக்குது என்ற என்னை..
எப்படி பார்ப்பது என தெரியாமல் பார்த்தாய்..

அன்னிக்கு காதல்தான் எல்லாம் என்றாய்..
இன்று காதல் கண்ணை மறைக்குது என்கிறாய்..
எப்படா நீ புரியற மாதிரி பேசுவே என்றாய்..

என் காதல் உன்னில் எங்கே ஒளிந்திருக்கிறது என்று உன்னால்
உறுதியாக கூற முடியுமா..?
நீ வெட்டிபோடும் நகம் முதல்..
நீ வெட்டாமல் விழும் முடி வரை...
என் காதல் உன்னில் பிரிக்க முடியாத அளவு இரண்டரகலந்து கிடக்கும் போது..
என் முகம் மறைக்கும் உன் கூந்தல் என் கண்ணை மறைக்கும் காதல் இல்லாமல் வேறன்ன...?

11 comments:

SUBBU said...

பட்டாசு கெளப்புதுங்க.....
நீங்க கவிஞரா??????

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Siva said...

இல்ல சுப்பு..நான் கவிஞன் இல்ல...
ஒரு பெரிய காதல் தோல்விக்கு பின்னால நான் அனுபவிக்கற வலிய எழுதறேன்..

-சிவா

SUBBU said...

சரி விடுங்க, ஒன்ன இழந்தாதான் இன்னொன்னு கிடைக்கும்போல :(((

vignesh said...

Shiva enna achi.......

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்ல கவிதை சிவா.about me இல் இருக்கிற வரிகளும் உங்களை யாரென சொல்கிறது.காதல்ல தோத்துட்டிங்கள்ள கவிதையில் ஜெயிப்பிங்க!வாழ்த்துக்கள்!

Veliyoorkaaran.. said...

என் லேப்டாப் நெனஞ்சே போச்சு ஒய்....உம்ம காதல்ல...
உங்கள எப்டிங்க வேணாம்னு சொன்னுச்சு அந்த புள்ள....
கொடும கோவிந்தராஜன்...

Siva said...

//
சரி விடுங்க, ஒன்ன இழந்தாதான் இன்னொன்னு கிடைக்கும்போல :(((
//

அந்த இன்னொன்னு, இதாவே இருக்கட்டும்ன்னு, இந்த கொரங்கு மனசு
கேட்கறதே மதிக்காம இருக்க, முயற்சி பண்ணறேன் சுப்பு...

Siva said...

//உம்ம காதல்ல...
உங்கள எப்டிங்க வேணாம்னு சொன்னுச்சு அந்த புள்ள....//

அவ வேண்டாம்ன்னு சொன்ன அந்த நிகழ்வு இப்படிதாங்க கடந்து போச்சு...
--------------------------
"என்னிடம் உன்னை காதலிக்க சொல்லிய அந்த எதோ ஒன்று உன்னிடமும் என்னை காதலிக்க சொல்லியதா" என்று கேட்டேன்...(தபு ஷங்கர்-தான் இப்படி கேட்க சொன்னாரு...)

"ஆமாம் சொல்லியது ஆனா எங்க அப்பா வேண்டாம்னு சொல்லிட்டாருன்னு" பதில் வந்தது...

அவளுக்கு தெரியாம வந்த வந்த காதல் மாதிரி, எனக்கு கண்ணிரும் வந்தது..
கண்ணீர நான் துடைக்க, காதலை அவள்...

செல் பேசி இருந்தும் மௌனம் மட்டுமே பேசும் அவளிடம். இன்றும் மௌனத்தில் மட்டுமே பேசுகிறேன்..
என் மௌனம் அவளிடம் ஒரு நாள் பேசும் என்ற நம்பிக்கையில்....
-----------------

Siva said...

//
Shiva enna achi.......
//

முதல்ல திடீர்ன்னு
கவிதை வந்தது,
என்னடா இது ரொம்ப ஓவர்-அ இருக்கேன்னு,
கன்னம் தடவிய போது-காதல் வந்தது புரிந்தது..
இனிமேல் வசந்தம் வரும்ன்னு நெனச்சு கண்ணை மூடிய போது,
கண்ணீர் மட்டும் வந்தது..
கண்ணை திறந்த போது மீண்டும் கவிதை வந்தது..

இப்ப என் மனசும் கேட்குது "சிவா என்ன ஆச்சுன்னு"
நீங்களே ஒரு நல்ல பதிலா சொல்லுங்க விக்னேஷ்...

Siva said...

//
காதல்ல தோத்துட்டிங்கள்ள கவிதையில் ஜெயிப்பிங்க!வாழ்த்துக்கள்!
//

அவ பாக்கும் போது,
நடக்கும் போது,
சிரிக்கும் போது,
கண் சிமிட்டும் போது,
அவள் சிந்தும் கவிதைகளை,
எடுத்து ஒரு நோட்-ல எழுதி வச்சு,
அப்பப்போ இந்த blog-la போட்டு வச்சிடுவேன்..
இப்போ நீங்க பாராட்டுற அளவுக்கு,
இந்த கவிதை வந்திடுச்சு,
இப்போ இது எனக்கு சொந்தமா இல்ல அவளுக்கா?

அரசனுக்கு சொந்தம் இல்லைன்ன்லும்
அரசனை பற்றி பாடி,
பரிசு பெறும் புலவன் போல்,
நான் அவளுக்கு சொந்தம் இல்லையென்றாலும்,
அவளை பற்றி பாடி பரிசு(உங்க வாழ்த்து) பெறுகிறேன்..

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி..