Wednesday, September 30, 2009

தனிமை...

தனிமை...
தோல்வியில் முடிந்த நாளின் பின்னிரவில்,
ஏமாற்றத்தின் விளிம்பில்,
புதிய பாதையின் தொடக்கத்தில்,
பழைய காதலியின் சிரிப்பில்,
எல்லா தனிமைகளும்,
ஏதோ வேறொன்றால் விரட்டபடுகின்றன...
காதலின் முடிவில்,
வந்த தனிமை மட்டும்,
அதே காதலினால் மட்டுமே
விரட்டப்பட வேண்டும் என
எதிர்பார்த்து காத்திருக்கிறது...

முடிக்கப்படாத வார்த்தைகள்..

உனக்கு பிடித்த பாடல் கேட்ட போது,
பிடித்த ஊர்,
பிடித்த புத்தகம், வண்ணம், பறவை, பூ,
என என் எல்லா கேள்விக்கும்
ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னவளே...
உன் எந்த பதிலும் என்னில் முழுமை பெறவில்லை,
நீ எனக்கு என்ன பிடிக்கும் என கடைசி வரை கேட்காததால்...

Saturday, September 26, 2009

கனவுகள்

நான்: ஒரு முட்டாள் தனமான ஒரு கேள்வி கேட்கட்டுமா..?
அவள்: அப்படி என்ன கேள்வி..?

நான்: நம் திருமண நாளன்று என்ன வண்ண ஆடை உடுத்த போகிறாய்?
அவள்: நீ.. கனவோடு வாழ்வதை நிறுத்து..

நான்: நீ, நான் கண்ட கனவுகளின் மொத்த ஒருவம்..
நீ சொல்வதை செய்ய, நீ இல்லாமல் நான் வாழவேண்டும்...முடியாது என்னால்..

அவள்: நான் இல்லையென்றால் என்ன, என்னை, எங்கேயோ பார்த்ததாக பலர் சொல்ல கேட்டிருக்கேன்... so நீ என்னை போல இருக்கும் இருக்கும் ஒருவளை தேடி கண்டு பிடி..

நான்: எல்லா பெண் சாமி சிலைகளும் உன்னை போலவே இருக்கு.. கோவிலுக்கு போன எல்லாருக்கும் உன்னை பார்த்தது போலவே இருக்கும்...
எந்த சாமியை, எப்படி நான் மனம் முடிக்க...

அவள்: நீ கனவோடு வாழ்வதை நிறுத்தாதே.....

நீ+நான்= முரண்பாடு

நீ எனக்கு கனவுகளின் பிரம்மண்டாம்
கவிதைகளின் ஊற்று...
மழைமாத இரவின் குதுகலம்...
நான் சாய்ந்துகொள்ளும் மௌனத்தின் மடி...
இருப்பினும்
நீ கனவு கோட்டை கட்ட பிடிக்காத civil engineer,
கவிதை கேட்காத ஞானி,
மழை மாத இரவில் உறங்க துடிக்கும் குழந்தை..
நீ என் தோளில் சாய மறுக்கும் மௌனம்...

Tuesday, September 22, 2009

கண்ணாமூச்சிகாணமல் போனவள் ஒரு நாள் கிடைத்தாள்,
நான் இனிமேல் கிடக்க மாட்டேன் என சொல்லி,
காணாமல் போக வந்ததாய் சொன்னாள்,
கிடைத்தது காதல்,
காணமல் போனது இதயம்,

மீண்டும் கிடைக்கவில்லை அவள்,
காணாமல் போக மறுக்கிறது காதல்,
கிடைப்பாள் அவள்,
கிடைக்காமலே போகட்டும் இதயம்....

நியூட்டனின் 3 - ம் விதி

வினை:
காதலை மட்டுமே வேண்டும் என கேட்கும் என் மனது,
காதலை மட்டும் தர மறுக்கும் அவள் மனது..

எதிர் வினை:
இழப்பின் வலியில் பிறந்தது கவிதை-எனக்கு,
காதலின் அழுத்தத்தில் பிறந்தது மௌனம்- அவளுக்கு..

இந்த இழப்பும், அந்த மௌனமும் சேர்ந்து மறுபடியும் அதே காதல் பிறக்காத என்ற நம்பிக்கையில் வாழ்க்கை..

Monday, September 7, 2009

கண்ணை மறைத்த காதல்

குளித்து முடித்துவிட்டு வரும் நீ..
எப்பொழுதும் வம்பு இழுக்கும் நான்..
சிணுங்கி சிரிக்கும் நீ...
அன்று மேற்கண்ட எதவும் நடக்க வில்லை..
படுக்கை அறையில்..
புத்தகம் படிக்கும் நான்..
நீ அருகில் வருவதை
கவனித்தும் கட்டிக்கொள்ளாமல்,
கவனமாய் புத்தகம் படித்த என்னிடம்..
நீ கேட்ட கேள்வி...
இன்னும் எவ்ளோ நேரம், இந்த நடிப்பு தொடரும் என்றாய்..
இந்த புத்தகத்திற்கு தலைப்பு கண்டு பிடிக்கும் வரை என்றேன் நான்..
என்ன உளர்ரிங்க,
அட்டையில் இருக்குமே என்னாச்சு?
இந்த புத்தகத்தின் சிறப்பே அதுதான்..
எல்லா பக்கத்தின் நடுவிலும் ஒரு குறிப்பு இருக்கும்..
எந்த 10 பக்கத்தை சேர்த்து படித்தாலும் உனக்கு தலைப்பு புரியும் என்றேன்..
எதுவும் பேசாமல் என்னருகில் வந்த நீ
புத்கத்தை வெறித்து பார்த்து கொண்டே..
என் தோள்மேல் கை போட்டு நீயும் படிக்க ஆரம்பித்தாய்...
அன்று வெள்ளிகிழமை,
தலை பின்னாமல் விட்டிருந்தாய்...
மின்விசிறியின் வேகத்துக்கு நடனமாடியது உன் கூந்தல்..

5 நிமிட மௌனத்திற்கு பிறகு..
காதல் கண்ணை மறைக்குது என்ற என்னை..
எப்படி பார்ப்பது என தெரியாமல் பார்த்தாய்..

அன்னிக்கு காதல்தான் எல்லாம் என்றாய்..
இன்று காதல் கண்ணை மறைக்குது என்கிறாய்..
எப்படா நீ புரியற மாதிரி பேசுவே என்றாய்..

என் காதல் உன்னில் எங்கே ஒளிந்திருக்கிறது என்று உன்னால்
உறுதியாக கூற முடியுமா..?
நீ வெட்டிபோடும் நகம் முதல்..
நீ வெட்டாமல் விழும் முடி வரை...
என் காதல் உன்னில் பிரிக்க முடியாத அளவு இரண்டரகலந்து கிடக்கும் போது..
என் முகம் மறைக்கும் உன் கூந்தல் என் கண்ணை மறைக்கும் காதல் இல்லாமல் வேறன்ன...?

தேவதையின் காதலன்

அன்று நல்ல மழை..
வீட்டுக்குள் நீ...
கடைக்கு சென்ற நான்..
தவிப்போடு நம் காதல்..
ஒரு கையில் புத்தகம்
மறு கையில் குடை..
உன் மனக்கதவு தட்டி பழக்கப்பட்ட நான்...
517-வது முறையாக..வீட்டு கதவு தட்ட..
திறக்கும் நீ... சிரிக்கும் நான்..
முறைக்கும் நீ..
என்ன ஆச்சுடா என் கேள்வி..
யாரைகேட்டு குடை எடுத்து போனிங்க என்ற உன் கேள்வி-யை,
உலகத்தின் எந்த காதல் கணவனும் எதிர்கொண்டிருக்கமாட்டன்...
"என்ன தேவதை இன்னைக்கு உளறுது" என்ற என்னிடம்..
நீங்க எப்படியும் மழையில் நனைந்து வருவீங்க
என் சேலை தலைப்பில், உங்க தலை துவட்டலாம்
என்டிருந்தேன்... இப்படி நனையாம வந்து நின்ன என்ன அர்த்தம்..?
சொல்லிய உன்னை
கண் இமைக்காமல் பார்த்த நான்..
நீ கண் இமைக்கும் நேரத்தில்..
குளியலறை shower-இல..
உடை மாற்றாமல்...
தொப்பலாய் நனைந்து வந்து உன் முன்னே நிற்க..
கிருக்கனாட நீ..என கேட்டு..
என்னை கட்டி கொண்ட அந்த நிமிடம்...
தேவதையின் காதலன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்தது...

நீ அழகாக இல்லை..

நீ அழகாக இல்லை..
நீ ராட்சசி..
நீ இதயமற்றவள்..
நீ கோபக்காரி..
நீ பொய்களின் பிறப்பிடம்
உன்னை திட்ட ஆரம்பித்தவுடன்,
தீர்ந்துவிட்டன வார்த்தைகள்...

2007 ஆண்டுகள்
பழமையான தமிழே
உன்னிடம் மௌனம் கற்கும் போது ..
27 ஆண்டுகள் மட்டுமே
பழமையான நான்
எப்படி உன் மௌனம் கலைக்க..?

எப்படி சொல்ல?

உன் மௌனதிற்கான அர்த்தம் தேடி ,
களைத்து வீடு திரும்பிய
நாளின் பின்னிரவில்..
மௌனமாய் நிலவை
வெறித்த என்னிடம்
நண்பன் கேட்ட கேள்வி..
"ஏன் மௌனமாய்- இருக்கிறாய்?"
உன் மௌனத்திற்கு
பொருள் தேடி களைத்து...
ஒன்றும் புரியாமல்,
தாய் அழும்போது
அழும் குழந்தைபோல்
நீ மௌனமைஇருப்பதல்
நானும் மௌனமயிருகிறேன்
என எப்படி சொல்ல...

மௌனத்தின் அர்த்தம்

எல்லா மௌனகளுக்குபின்னும்
ஒரு அர்த்தம்
இருக்கும்- என்றவளே..
நான் ஆயுள் முழுக்க
மௌனமாக இருக்க தயார்
என் வாழ்வின் அர்த்தம் நீயானால்....

முடிவற்ற காதல்..

மௌனத்தின் ஊற்று- நீ
மௌனத்தின் கீற்று- நான்
உன் கீற்று புன்னகையால்
என் ஊற்று பேச்சை நிறுத்தியவள்..
பேச்சற்ற நான்,
இதயமற்ற நீ,
நின்று போன இதயம,
நிற்க மறுத்த காதல்
என் நின்ற இதயம் துடித்தது உனக்காக
துடிப்பை நிறுத்தியவளே நீ என்பதை அறியாமலே...

சிரிப்பும் சிந்தனையும்

Student: Shall i call u as donkey?
Teacher: u idiot, you shouldn't..
Student:Shall i call a donkey as "sir".
Teacher: Yes, as per your wish..
but why you suddenly asking this question?

student: nothing "SIR"...just as i thought and asked "SIR"....

conclusion:
Stay commited in your decision
but stay flexible in your approach...