Saturday, May 30, 2009

விடுமுறை நாள் கிராமம்

கோடை விடுமுறை நாட்களில்.....
வெளியூரில் இருந்து வரும் பையன்கள், உள்ளுர் பையன்கள் என்று பேதமில்லாமல் கலந்து கிட்டி,
நீச்சல்,
எறிபந்து,
கோலி,
கள்ளன் போலீஸ்,
ரயில் விளையாட்டு,
கதை பேசுதல்,
கிறுகிறுவானம்,
மீன்பிடிக்க போவது,
மரமேறுவது,
சிகரெட் அட்டை சேகரித்து விளையாடுவது,
பச்ச குதிரை,
கல்லா மண்ணா,
வைக்கோல் போர் ஏறி குதிப்பது,
சினிமா பெயர் சொல்லி விளையாடுவது,
ஊஞ்சல்,கபடி,
கவண்கல் எறிந்து குருவி அடிப்பது,
ஒணான் பிடித்து மூக்கு பொடி போட்டு ஆட வைப்பது,
வீட்டில் திரை கட்டி பொம்மாலட்டம் காட்டுவது,
சைக்கிள் டயரை உருட்டி விளையாடுவது,
வாடகை சைக்கிள் எடுத்து ஒட்டுவது. என எத்தனையோ விளையாட்டுகள்...... விளையாடி களைத்து வீடு வராமல்,
தெருவில் நின்று கதைத்து,
பசி உயிரை தின்னும் போது வீட்டு வாசல் மிதிப்போம்,
எப்பொழுதும் புலம்பும் பாட்டி,
வழக்கம் போல வசைகள் ஆரம்பித்தாலும்,
நாளைக்கான விளையாட்டுகளை பட்டியல் போட்டு,
படுக்கை விரித்து தூங்குவோம்,
உடுக்கை இழந்தவன் கை போல அங்கே இடுக்கண் களையும் நண்பனை நினைத்து....
இந்த விடுமுறையில் ஊருக்கு போன போது,
கிராமத்து வீட்டிற்குள் முடங்கி கிடந்த தங்கையின் மகனிடம் என்ன விழையாடலாம் எனக்கேட்ட போது,
வீடியோ கேம் என பட்டென சொல்லி,
சட்டென என் செல்போன் பறித்தான்,
எனக்கு என் செல்போனின் எந்த பட்டனை அழுத்தி அவனுக்கு எப்படி கிராமாம் கற்பிப்பது என கடைசி வரை தெரியவேயில்லை........

4 comments:

surpanagai said...

hey, your sayaries are too good :) Really i admire ur imagination. Excellent.

கிர்பால் said...

அண்ணா. ரொம்ப நல்லா இருக்கு. உங்களோட இந்த திறமை எனக்கு இவ்ளோ நாள் தெரியாம போச்சே!!!

Seenivasan said...

ரொம்ப நல்ல இருக்குதுப்பா!!!...
கடைசியா வரிகள் என்னமோ பண்ணுதுப்பா!!!!!

Siva said...

மிக்க நன்றி தோழர்களே மற்றும் தோழிகளே...