Sunday, December 27, 2009

காதலில் காமம்

ஒரு அருமையான மாலை நேரம்,
என் மௌனம் கண்டு திகைத்த அவள்,

அவள்: என்னடா எப்பவும் லொடலொடன்னு பேசுவே இன்னிக்கு சத்தமே காணோம்?

நான்: இல்ல, நம்ம தமிழின்  பெருமையை யோசிச்சு கிட்டு இருக்கேன்.

அவள்: நான் இருக்கும் போது எல்லாத்தையும் யோசி, ஆன நான் போன பின்னாடி என்ன பத்தி மட்டும் யோசி.
ம்ம்ம்.. அப்படி என்ன யோசிக்கரே..?

நான்: இப்போ தமிழ்ல 'ம' மற்றும் அதான் குடும்ப சொற்களுக்குள்ள
(மி, மெ, மொ)உறவை பத்தி யோசிக்கறேன்..

அவள்: புரியாத மாதிரி பேசாதே..
நான்:
இப்போ ம, மெ, மு, மி, மொ இந்த எல்லா எழுக்களில் இருந்து ஆரம்பிக்கும் எல்லா வார்த்தைகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கு..
எடுத்துக்காட்டு சொல்றேன் கேளு:
ம- மச்சம்
இப்போ ஒரு "மச்சம்" உன் வயத்துல இருக்குன்னு வச்சுக்கோ,
இது மறைவான இடத்துல இருக்கறதனால இதை "மறைபொருள்ன்னு" சொல்லலாம்,
இது உன் உடம்புல இருக்கறதால இதை "மெய்ப்போருள்ன்னு"  சொல்லலாம்...

மு- முத்தம்
முத்தத்துல பல வகை இருக்கிறது உனக்கே தெரியும்,
இதழ் முத்தம், செவி முத்தம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்,

மி- மிச்சம்
இப்போ கலவில இருவைகயான கோட்பாடுகள் மிக பிரசித்தம்,
1 . இறங்கு வரிசை
2 . ஏறுவரிசை
முத்தத நெத்தில ஆரம்பிச்சு, அப்பறம் புருவம், இமைகள்ன்னு கீழ இறங்கி,
பாதம் சேர்வது-இறங்கு வரிசை
இறங்கு வரிசைய தலைகீழா செஞ்சா ஏறுவரிசை..
இப்படியான கோட்பாடுகள கடைபிடிக்கும் போது, எங்கேயது சிக்கி போய்ட்டா மீதி முடிக்கவேண்டிய பகுதிகள நாம "மிச்சம்"ன்னு சொல்றோம்..

மொத்தம்: மிச்சமே வைக்காம தலைவன் முடிச்சான்னா அதுதான் மொத்தம்..

அவள்: போதும்டா, ஆமா இப்படியெல்லாம் யோசிக்க உனக்கு யாருடா சொல்லிகுடுத்தா?
 என் மூளை என நான் செல்லமாய் சிரிக்க.

இல்லாத ஒன்ன பத்தி பேசதேன்னு எவ்வளவு தடவ சொன்னாலும் நீ கேட்ட்கமாட்டியா என சொல்லி அவள் காதை கடிக்க..
முடியாது என நான் அவள் கன்னம் கடிக்க...

ஒரு கொசு கடித்து இந்த கனவு கலைந்தது...

கட்டிக்கொண்டு, கதை பேசி, முத்தம் கொடுத்து

கட்டிக்கொள்ளும்போது,
கதை கேட்கிறாய்,
கதை சொல்லும்போது
முத்தம் கேட்கிறாய்,
முத்தம் தரும்போது
மீண்டும் கட்டிக்கொள்ள சொல்கிறாய்,
என்ன வேண்டுமென
முடிவை சொல் எனேக்கேட்ட போது,
உன்னிடம் இருக்கும் எல்லாமும்
எனச்சொல்லி கட்டிக்கொண்டாய்,
நான் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டேன்..

Tuesday, December 22, 2009

வசந்தகால பறவையின் வரலாறு

வசந்தகால பறவை..
இந்த வார்த்தை எனக்கு அறிமுகமான வரலாறு உங்களுக்கு புரியணும்னா...
ஒரு மனோதத்துவ மருத்துவர் மனநிலையில் இருந்து இத நீங்க படிக்கணும்...


" அப்போ   எனக்கு 8 வயசு, நடுராத்திரிக்கு ஒருமணி நேரம் இருந்துச்சு,
வேகமா வந்து மாமா எழுப்பி  விட்டாரு. என்னை பிரச்சனைன்னு கேட்டா..
புதுசா dress வாங்கிட்டு வந்திருக்கேன் சொல்லி, ஒரு  ஜோடி டிரஸ் கொடுத்தாரு,
இதுதான் வசந்தகால பறவை ஸ்டைல்ன்னு சொல்லி எப்படி இருக்குன்னு கேட்டாரு..
காவி நிறத்தில் அமீபா வரைந்த மாதிரி ஒரு சட்டைய கொடுத்துட்டு, இதுதான் வசந்தகால பறவைன்னு சொன்னா யாரு  மருத்துவரே நம்புவாங்க..?
நல்ல தூக்க கலக்கம், வசந்தகால பறவைன்னா என்னன்னு
 கேட்டேன்..நியாமான கேள்விதானே இது?
இதுதெரியாதா,  ரமேஷ் அரவிந்த் நடுச்சு புதுசா வந்திருக்கற  படம்ன்னு பதில் வந்துச்சு...
அட அப்படியான்னு ரமேஷ்  அரவிந்த்க்கு அந்த டிரஸ் போட்டு ஒரு டான்ஸ் ஆட விட்டேன்...
அந்த சட்டையோட அழகவிடவும், அந்த சட்டை வசந்தகால
 பறவை வார்த்தைக்கு தொடர்புடையதா இருந்தது,  எனக்கு ரொம்ப பெருமை தந்தது..
 இன்னிக்கு வரைக்கும் அந்த படம் பாக்க முடியல...
ஆனா நல்லதூக்க்துல  சொன்ன அந்த அழகான தமிழ்ச்சொல் ஏனோ மனசுக்குள்ள அப்படியே ஒட்டிகிடுச்சு.."


   இதுதான் டாக்டர் நடந்ததுன்னு இப்போ நான் கண்ணாடிய கழட்டி வச்சா இந்த flashback முடிவுக்கு சரியா இருக்கும் நினைக்கேறேன்.....

Friday, December 4, 2009

வெறுமை

நள்ளிரவில்..
யாருக்கும் தெரியாமல் பூக்கும் பூ..
யாருக்காக கத்துகிறோம் என தெரியாமல் கத்தும் சுவர்கோழி..
ஊருக்கு வெளிய எரியும் மின்விளக்கு,
காரணம் இல்லாமல் அழும் குழந்தை,
எதற்காக எழுதுகிறேன் என தெரியாத நான்...
எதோ தொடர்பு இருக்கிறது எங்களுக்குள்...
அது வெறுமை தவிர்த்தல் என்பதாக கூட இருக்கலாம்...

என்ன செய்ய?

நீ என்னுடன் வாழமுடியாது...
தீர்மானமாய் சொல்லிவிட்டாய்..நீ
உன்னுடன் வாழ்வதற்கு
சேமித்து வைத்த கனவுகளை என்ன செய்ய?
என் கிராமத்து வீட்டில் கூடுகட்டும்
பேர் தெரியாத குருவிக்கு கொடுத்துவிட்டேன் என் கனவுகளை...
ஜாதி மதம் கடந்து வாழும் அந்த குருவி கொண்டுசெல்லட்டும்
புரிந்துகொள்ள முடியாத அதன் உலகிற்கு...

என்ன நடக்குது இங்கே...

வணத்துபூச்சி பார்த்து தொலைந்து போன நான்..
மழைக்கு பின்னான மண்வாசனையில் மறைந்துபோன நான்...
ஒரு மழழையின் சிரிப்பில் சொக்கிப்போன நான்..
ராமகிருஷ்ணனின் புத்தகத்தில் சிக்கிப்போன நான்...
பூக்களின் வாசனையில் புதைந்துபோன நான்...
உன் பார்வையின் வீச்சில் இரண்டாம் முறை பிறந்துவந்தேன்..

யார் நீ?

திறந்திருக்கும் ஜன்னலில் பெய்யும் ஐஸ்கட்டி மழை ..நீ
தூக்கத்தில் சிரிக்கும் குழந்தை... நீ
மௌனத்தில் பேசும் புத்தர்...நீ
மகரந்தம் சுமந்து சிரிக்கும் மல்லிகை...நீ
இதயத்தில் ஆணி அடிக்கும் ராட்சசி...நீ
பூக்களுடன் பேசும் புனைகை... நீ
நான் யார் உனக்கு என நீ கேட்ட பொழுது...
மேற்கண்ட எந்த உவமையும் வெளிப்படவில்லை..
நீ என் தேவதை என்பதை தவிர...

முடிவு


உன்னை பற்றி மட்டுமே
எழுத ஆரம்பித்த வலை பக்கத்தில்
ஓரிரு கவிதைகள்
உன்னை பற்றி இல்லாமல் இருக்கலாம்..
ஆனாலும் நான்
உன்னைபற்றிதான் எழுதுகிறேன்
என சொன்னகணத்தில்
"தெரியும் 7 -வது முறை படிக்கும்போது
புரிந்தது" என்ற உன் பதிலை
நான் எதிர்பார்க்கவில்லை...
என்ன பதில் சொல்வதென
தேரியவில்லை...
"நீ இல்லாமல் போகும் நாளில் இந்த வலைபூவே இல்லாமல் போகும்.."

நிசப்தங்கள்


உன் வார்த்தைகளுக்கு இடையிலான
மௌனங்கள்- இந்த பிரபஞ்சத்தின் நிசப்தங்கள்..
புத்தரின் மௌனங்களை ரசித்த எனக்கு
உன் மௌனங்களை ரசிக்க முடியவில்லை..
பேச தெரியாமல் மௌனமாய் நீ..
பேச முடியாமல் மௌனமாய் நான்..
வார்த்தைகள் அற்ற உலகில் பூக்களாய்
பிறக்க வேண்டியவள் நீ..
பூக்கள் மட்டும் உள்ள உலகில் காற்றாய்
பிறக்க வேண்டியவன் நான்..
மனிதர்களாய் பிறந்து தொலைத்து ஏன் என புரியவில்லை நமக்கு.. !?!

ஏமாற்றத்தின் வலி

"நீ எனக்கானவள் இல்லை" என நண்பன் சொன்னபோது,
தேவதைகளை புரிந்துகொள்வது
உன்னை போன்ற மனிதர்களால் முடியாது
என பதில் சொல்லிவந்தேன்..
என் தொலைபேசிக்கு பதில்
பேசாத உன்னை பற்றி என்ன சொல்ல ...
"மானுடர்கள் அழைப்புக்கு
பதில் சொன்னால் அவள் எப்படி தேவதையை இருக்க முடியும்"
என சொல்லி வந்தேன்...
ஏமாற்றத்தின் வலியை பகிர்ந்துகொள்வது எப்படி? என தெரியவில்லை எனக்கு...

தோல்வியல் வெற்றி

பெரும்பாலான நேரங்களில்
உன்னிடம் தோற்றுப்போகிறேன் நான்..
நீ வேற்றிபெரவேண்டி
நான் தோற்றுப்போவது
உனக்கு புரியும் நாளில்
நான் வெற்றிபெறுவேன்
நீ தோற்றுப்போவாய்...
வெற்றிகளும் தோல்விகளும்
கணிக்கட்டும் காதலுக்கான இலக்கணங்களை,
இவைகளுக்கு அப்பாற்பட்ட
ஒரு வாழ்வை வாழ்ந்து முடிப்போம் வா,
நம் இறுதி ஊர்வலத்தில்,
ஒரு தேவதையின் கனவு நிறைவேறியது
என உலகம் உரக்க சொல்லட்டும்...

உன் பருவத்திமிர் கண்டு,


தொடர் மழைக்கு பின்,
வானவில்லுக்கு வெட்கப்பட்டு வெளியே வராத வண்ணத்துபூச்சி...
சூரியனுடன் சேர்ந்து சுவாசிக்கும் ஈசல்பூச்சி..
அவள் தொடர் பார்வைக்கு பின்,
வெளி வர வெட்கப்படும் மீசை,
என் நினைவுடன் சேர்ந்து நடை போடும் உன் ,
பருவ மாற்றங்கள்..
அவள் பார்வைக்கு முன்னும் பின்னும் வரும் மாற்றங்கள்,
பருவத்தால் வந்த மாற்றங்களா?
பார்வையால் வந்த மாற்றங்களா?
மௌனத்தால் பதில் சொல்லிபோகிறாள் அவள்..
புரியவில்லை எனக்கு...

Thursday, December 3, 2009

தண்டனை

என் உயிர் நீயான பின்பு
மரண தண்டனையாய் மௌனம் கொடுத்து,
யாரை கொல்லப்போகிறாய்?

யாரை குறை சொல்ல?!?

நான் இருக்கும் திசை தெரிந்தும்,
பிடிவாதமாய் பாதை மாற்றி நடக்கிறாள் அவள்,
அவளை பார்ப்பது என் இஷ்டம்,
என்னை பார்க்காமேல இருப்பது அவள் இஷ்டம்...
என் பார்வைகளை குறை சொல்லாதே
என்னில் காதல் இருக்கும் வரை...
அவள் பாரமுகதையும் குறை சொல்லாதே,
அவளில் காதல் வரும் வரை....

Wednesday, September 30, 2009

தனிமை...

தனிமை...
தோல்வியில் முடிந்த நாளின் பின்னிரவில்,
ஏமாற்றத்தின் விளிம்பில்,
புதிய பாதையின் தொடக்கத்தில்,
பழைய காதலியின் சிரிப்பில்,
எல்லா தனிமைகளும்,
ஏதோ வேறொன்றால் விரட்டபடுகின்றன...
காதலின் முடிவில்,
வந்த தனிமை மட்டும்,
அதே காதலினால் மட்டுமே
விரட்டப்பட வேண்டும் என
எதிர்பார்த்து காத்திருக்கிறது...

முடிக்கப்படாத வார்த்தைகள்..

உனக்கு பிடித்த பாடல் கேட்ட போது,
பிடித்த ஊர்,
பிடித்த புத்தகம், வண்ணம், பறவை, பூ,
என என் எல்லா கேள்விக்கும்
ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னவளே...
உன் எந்த பதிலும் என்னில் முழுமை பெறவில்லை,
நீ எனக்கு என்ன பிடிக்கும் என கடைசி வரை கேட்காததால்...

Saturday, September 26, 2009

கனவுகள்

நான்: ஒரு முட்டாள் தனமான ஒரு கேள்வி கேட்கட்டுமா..?
அவள்: அப்படி என்ன கேள்வி..?

நான்: நம் திருமண நாளன்று என்ன வண்ண ஆடை உடுத்த போகிறாய்?
அவள்: நீ.. கனவோடு வாழ்வதை நிறுத்து..

நான்: நீ, நான் கண்ட கனவுகளின் மொத்த ஒருவம்..
நீ சொல்வதை செய்ய, நீ இல்லாமல் நான் வாழவேண்டும்...முடியாது என்னால்..

அவள்: நான் இல்லையென்றால் என்ன, என்னை, எங்கேயோ பார்த்ததாக பலர் சொல்ல கேட்டிருக்கேன்... so நீ என்னை போல இருக்கும் இருக்கும் ஒருவளை தேடி கண்டு பிடி..

நான்: எல்லா பெண் சாமி சிலைகளும் உன்னை போலவே இருக்கு.. கோவிலுக்கு போன எல்லாருக்கும் உன்னை பார்த்தது போலவே இருக்கும்...
எந்த சாமியை, எப்படி நான் மனம் முடிக்க...

அவள்: நீ கனவோடு வாழ்வதை நிறுத்தாதே.....

நீ+நான்= முரண்பாடு

நீ எனக்கு கனவுகளின் பிரம்மண்டாம்
கவிதைகளின் ஊற்று...
மழைமாத இரவின் குதுகலம்...
நான் சாய்ந்துகொள்ளும் மௌனத்தின் மடி...
இருப்பினும்
நீ கனவு கோட்டை கட்ட பிடிக்காத civil engineer,
கவிதை கேட்காத ஞானி,
மழை மாத இரவில் உறங்க துடிக்கும் குழந்தை..
நீ என் தோளில் சாய மறுக்கும் மௌனம்...

Tuesday, September 22, 2009

கண்ணாமூச்சிகாணமல் போனவள் ஒரு நாள் கிடைத்தாள்,
நான் இனிமேல் கிடக்க மாட்டேன் என சொல்லி,
காணாமல் போக வந்ததாய் சொன்னாள்,
கிடைத்தது காதல்,
காணமல் போனது இதயம்,

மீண்டும் கிடைக்கவில்லை அவள்,
காணாமல் போக மறுக்கிறது காதல்,
கிடைப்பாள் அவள்,
கிடைக்காமலே போகட்டும் இதயம்....

நியூட்டனின் 3 - ம் விதி

வினை:
காதலை மட்டுமே வேண்டும் என கேட்கும் என் மனது,
காதலை மட்டும் தர மறுக்கும் அவள் மனது..

எதிர் வினை:
இழப்பின் வலியில் பிறந்தது கவிதை-எனக்கு,
காதலின் அழுத்தத்தில் பிறந்தது மௌனம்- அவளுக்கு..

இந்த இழப்பும், அந்த மௌனமும் சேர்ந்து மறுபடியும் அதே காதல் பிறக்காத என்ற நம்பிக்கையில் வாழ்க்கை..

Monday, September 7, 2009

கண்ணை மறைத்த காதல்

குளித்து முடித்துவிட்டு வரும் நீ..
எப்பொழுதும் வம்பு இழுக்கும் நான்..
சிணுங்கி சிரிக்கும் நீ...
அன்று மேற்கண்ட எதவும் நடக்க வில்லை..
படுக்கை அறையில்..
புத்தகம் படிக்கும் நான்..
நீ அருகில் வருவதை
கவனித்தும் கட்டிக்கொள்ளாமல்,
கவனமாய் புத்தகம் படித்த என்னிடம்..
நீ கேட்ட கேள்வி...
இன்னும் எவ்ளோ நேரம், இந்த நடிப்பு தொடரும் என்றாய்..
இந்த புத்தகத்திற்கு தலைப்பு கண்டு பிடிக்கும் வரை என்றேன் நான்..
என்ன உளர்ரிங்க,
அட்டையில் இருக்குமே என்னாச்சு?
இந்த புத்தகத்தின் சிறப்பே அதுதான்..
எல்லா பக்கத்தின் நடுவிலும் ஒரு குறிப்பு இருக்கும்..
எந்த 10 பக்கத்தை சேர்த்து படித்தாலும் உனக்கு தலைப்பு புரியும் என்றேன்..
எதுவும் பேசாமல் என்னருகில் வந்த நீ
புத்கத்தை வெறித்து பார்த்து கொண்டே..
என் தோள்மேல் கை போட்டு நீயும் படிக்க ஆரம்பித்தாய்...
அன்று வெள்ளிகிழமை,
தலை பின்னாமல் விட்டிருந்தாய்...
மின்விசிறியின் வேகத்துக்கு நடனமாடியது உன் கூந்தல்..

5 நிமிட மௌனத்திற்கு பிறகு..
காதல் கண்ணை மறைக்குது என்ற என்னை..
எப்படி பார்ப்பது என தெரியாமல் பார்த்தாய்..

அன்னிக்கு காதல்தான் எல்லாம் என்றாய்..
இன்று காதல் கண்ணை மறைக்குது என்கிறாய்..
எப்படா நீ புரியற மாதிரி பேசுவே என்றாய்..

என் காதல் உன்னில் எங்கே ஒளிந்திருக்கிறது என்று உன்னால்
உறுதியாக கூற முடியுமா..?
நீ வெட்டிபோடும் நகம் முதல்..
நீ வெட்டாமல் விழும் முடி வரை...
என் காதல் உன்னில் பிரிக்க முடியாத அளவு இரண்டரகலந்து கிடக்கும் போது..
என் முகம் மறைக்கும் உன் கூந்தல் என் கண்ணை மறைக்கும் காதல் இல்லாமல் வேறன்ன...?

தேவதையின் காதலன்

அன்று நல்ல மழை..
வீட்டுக்குள் நீ...
கடைக்கு சென்ற நான்..
தவிப்போடு நம் காதல்..
ஒரு கையில் புத்தகம்
மறு கையில் குடை..
உன் மனக்கதவு தட்டி பழக்கப்பட்ட நான்...
517-வது முறையாக..வீட்டு கதவு தட்ட..
திறக்கும் நீ... சிரிக்கும் நான்..
முறைக்கும் நீ..
என்ன ஆச்சுடா என் கேள்வி..
யாரைகேட்டு குடை எடுத்து போனிங்க என்ற உன் கேள்வி-யை,
உலகத்தின் எந்த காதல் கணவனும் எதிர்கொண்டிருக்கமாட்டன்...
"என்ன தேவதை இன்னைக்கு உளறுது" என்ற என்னிடம்..
நீங்க எப்படியும் மழையில் நனைந்து வருவீங்க
என் சேலை தலைப்பில், உங்க தலை துவட்டலாம்
என்டிருந்தேன்... இப்படி நனையாம வந்து நின்ன என்ன அர்த்தம்..?
சொல்லிய உன்னை
கண் இமைக்காமல் பார்த்த நான்..
நீ கண் இமைக்கும் நேரத்தில்..
குளியலறை shower-இல..
உடை மாற்றாமல்...
தொப்பலாய் நனைந்து வந்து உன் முன்னே நிற்க..
கிருக்கனாட நீ..என கேட்டு..
என்னை கட்டி கொண்ட அந்த நிமிடம்...
தேவதையின் காதலன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்தது...

நீ அழகாக இல்லை..

நீ அழகாக இல்லை..
நீ ராட்சசி..
நீ இதயமற்றவள்..
நீ கோபக்காரி..
நீ பொய்களின் பிறப்பிடம்
உன்னை திட்ட ஆரம்பித்தவுடன்,
தீர்ந்துவிட்டன வார்த்தைகள்...

2007 ஆண்டுகள்
பழமையான தமிழே
உன்னிடம் மௌனம் கற்கும் போது ..
27 ஆண்டுகள் மட்டுமே
பழமையான நான்
எப்படி உன் மௌனம் கலைக்க..?

எப்படி சொல்ல?

உன் மௌனதிற்கான அர்த்தம் தேடி ,
களைத்து வீடு திரும்பிய
நாளின் பின்னிரவில்..
மௌனமாய் நிலவை
வெறித்த என்னிடம்
நண்பன் கேட்ட கேள்வி..
"ஏன் மௌனமாய்- இருக்கிறாய்?"
உன் மௌனத்திற்கு
பொருள் தேடி களைத்து...
ஒன்றும் புரியாமல்,
தாய் அழும்போது
அழும் குழந்தைபோல்
நீ மௌனமைஇருப்பதல்
நானும் மௌனமயிருகிறேன்
என எப்படி சொல்ல...

மௌனத்தின் அர்த்தம்

எல்லா மௌனகளுக்குபின்னும்
ஒரு அர்த்தம்
இருக்கும்- என்றவளே..
நான் ஆயுள் முழுக்க
மௌனமாக இருக்க தயார்
என் வாழ்வின் அர்த்தம் நீயானால்....

முடிவற்ற காதல்..

மௌனத்தின் ஊற்று- நீ
மௌனத்தின் கீற்று- நான்
உன் கீற்று புன்னகையால்
என் ஊற்று பேச்சை நிறுத்தியவள்..
பேச்சற்ற நான்,
இதயமற்ற நீ,
நின்று போன இதயம,
நிற்க மறுத்த காதல்
என் நின்ற இதயம் துடித்தது உனக்காக
துடிப்பை நிறுத்தியவளே நீ என்பதை அறியாமலே...

சிரிப்பும் சிந்தனையும்

Student: Shall i call u as donkey?
Teacher: u idiot, you shouldn't..
Student:Shall i call a donkey as "sir".
Teacher: Yes, as per your wish..
but why you suddenly asking this question?

student: nothing "SIR"...just as i thought and asked "SIR"....

conclusion:
Stay commited in your decision
but stay flexible in your approach...

Monday, August 17, 2009

நிலாக்கால நிழல்

என் எல்லா கேள்விகளுக்கும்
எரிச்சல் இல்லாமல் பதில் சொல்லத்தெரிந்தவர், அப்பா....

கடலை மகசூல் காலங்களில்
காவலுக்கு
கிணற்று மேட்டில் அவர் தூங்கபோன நாட்களில்
போர்வைக்குள் பூனைகுட்டியாய் நான்,

விடியும் வரை கதை கேட்க நினைத்து,
கேள்விகள் கேட்ட ஒரு நாளின் பின்னிரவு 2 மணிக்கு
முதல் முறையாக அவருக்கு கேள்வி கேட்க
ஒரு நிமிடம் கொடுத்தேன்,

அப்பா: "நள்ளிரவு 2 மணி வரை விழித்திருக்கும் நீ,
நாளை எப்படி 7 மணி பள்ளி பேருந்திற்கு கிளம்புவாய்?"

(பள்ளி பேருந்துகளை என் கற்பனை குதிரை கண்
முன்னே இழுத்து வந்து போட்டது)
நான்: ம்ம்ம்ம்ம்... எங்கள் பள்ளி பேருந்தில்,
மூன்றில் 2, TATA பேருந்துகள்,
ஏன் எல்லாரும் TATA பேருந்துகள் மட்டுமே வாங்குகிறார்கள்?

அப்பா: நம் தோட்டத்தில் இருக்கும் இரண்டு கடப்பாறைகளில்,
ஒன்று அடிக்கடி முனை மழுங்கி போகிறது, மற்றொன்று தரமானது,
எது உனக்கு வேண்டும்?
நான்: தரமானது,
அப்பா: TATA வாடிக்கையாளர்களும் உன்னை போலவே நினைக்கிறார்கள்,

அன்று நான் உழவன் மகன்,
இன்று நான் TATA-வின் தொழிலாளி,
நாளைய விவசாயிக்கு,
என் தந்தையின் நேற்றைய பதிலை கொண்டுசேர்க்கும்
கடமை என் தோள்களில்...

Saturday, May 30, 2009

விடுமுறை நாள் கிராமம்

கோடை விடுமுறை நாட்களில்.....
வெளியூரில் இருந்து வரும் பையன்கள், உள்ளுர் பையன்கள் என்று பேதமில்லாமல் கலந்து கிட்டி,
நீச்சல்,
எறிபந்து,
கோலி,
கள்ளன் போலீஸ்,
ரயில் விளையாட்டு,
கதை பேசுதல்,
கிறுகிறுவானம்,
மீன்பிடிக்க போவது,
மரமேறுவது,
சிகரெட் அட்டை சேகரித்து விளையாடுவது,
பச்ச குதிரை,
கல்லா மண்ணா,
வைக்கோல் போர் ஏறி குதிப்பது,
சினிமா பெயர் சொல்லி விளையாடுவது,
ஊஞ்சல்,கபடி,
கவண்கல் எறிந்து குருவி அடிப்பது,
ஒணான் பிடித்து மூக்கு பொடி போட்டு ஆட வைப்பது,
வீட்டில் திரை கட்டி பொம்மாலட்டம் காட்டுவது,
சைக்கிள் டயரை உருட்டி விளையாடுவது,
வாடகை சைக்கிள் எடுத்து ஒட்டுவது. என எத்தனையோ விளையாட்டுகள்...... விளையாடி களைத்து வீடு வராமல்,
தெருவில் நின்று கதைத்து,
பசி உயிரை தின்னும் போது வீட்டு வாசல் மிதிப்போம்,
எப்பொழுதும் புலம்பும் பாட்டி,
வழக்கம் போல வசைகள் ஆரம்பித்தாலும்,
நாளைக்கான விளையாட்டுகளை பட்டியல் போட்டு,
படுக்கை விரித்து தூங்குவோம்,
உடுக்கை இழந்தவன் கை போல அங்கே இடுக்கண் களையும் நண்பனை நினைத்து....
இந்த விடுமுறையில் ஊருக்கு போன போது,
கிராமத்து வீட்டிற்குள் முடங்கி கிடந்த தங்கையின் மகனிடம் என்ன விழையாடலாம் எனக்கேட்ட போது,
வீடியோ கேம் என பட்டென சொல்லி,
சட்டென என் செல்போன் பறித்தான்,
எனக்கு என் செல்போனின் எந்த பட்டனை அழுத்தி அவனுக்கு எப்படி கிராமாம் கற்பிப்பது என கடைசி வரை தெரியவேயில்லை........

Friday, May 29, 2009

கைகுழந்தை காதல்

கைகுழந்தை காதல்
எங்களுக்குள் கபடி விளையாடி,
இருவரும் தோற்று, காதல் ஜெயிதததாய் கை கொட்டி சிரித்தது,
இப்பொழுதும் காதல் குழந்தையை கொஞ்ச மனம் துடிக்கிறது,
எங்களில் யார் தாய், யார் தந்தை என தெரியாமலே...

மௌனம்

மௌனமாய் விளைவித்த மாற்றங்களுடன்-அவள்
மௌனத்தில் விளைந்த மாற்றங்களுடன்- நான்
மௌனங்களும் மாற்றங்களும் எங்களுக்குள் மாறவேஇல்லை,
செய்வினை, செயப்பாட்டுவினை மாறாத நம் தமிழ் போல...

கான்க்ரீட் காடுகள்

புத்தகங்களில் நிம்மதி தேடாத தேடுதல்
நட்சத்திரம் என்ன மறந்த இரவுகள்
மழைக்கு பின் மண்வாசனை நுகர மறுக்கும் வேலை
செல்போன் சிணுங்கல்களில் சிக்கிபோகும் செவிகள்
ஆடை குறைத்து, ஆபாசம் நிறைக்கும் கலாச்சாரம்
சினிமா சிறைக்குள் சிக்கிக்கொள்ள துடிக்கும் இதயம்
பிளாஸ்டிக் பூக்களில் வாசம் தேடும் மனது
கன்னிகளின், கண்ணிகளில், கவனம் கலைக்கும் கண்கள்,
எல்லாம் சரியென நண்பன் சொன்னால்,
நீ வாழ்வது கான்க்ரீட் காட்டில் என்பதும் சரியே...