Friday, December 19, 2008

காதல் நொறுங்கிய நொடிகள்

பேருந்து நிறுத்தம்,
நல்ல வெயில்
ஒன்பது குழந்தைகள்
பெற்றுக்கொள்ளலாம்
உன்னையும் சேர்த்து பத்து
சம்மதமா என்றேன்..?
இமை மூடாமல்
என்னை படித்தவள்,
ஏழு போதும் என்றாள்,
வாழ்க்கை அடித்த அடியில்
எங்களுக்கு புரிந்தது
எங்கள் காதல் கரைதொடது என்பது..
பேருந்து நிறுத்தம்
காதலை நிறுத்தி கொள்வோம்
இருவரும் எடுத்த முடிவு..
நான் சாகும் வரை நீ என்னில் வாழ்வாய்,
நான் மனதிற்குள் சொல்லியது
அவளுக்கு கேட்கவில்லை..
எனக்கான பேருந்து
உனக்கான நான்,
நீ இல்லாமல் என் பயணம்...
காதல் அடித்த அடியின் வலி தாங்காமல்
தடுமாறி தவழ்ந்தவன்..
அலைபேசியில் உனை அழைத்து
போகிறேன் என சொன்னபோது..
பார்த்து போங்கண்ணா என்று நீ சொன்ன நொடி,
நம் காதல் நொறுங்கி தெறித்து
நான் செத்து விழுந்தேனடி..

Thursday, December 18, 2008

பார்வை

என்னை பார்த்துக்கொல்லதே
என்னை பார்த்துக்கொள்..

காணாமல் போனவள்


முதல் பார்வையில்
என்னை முடமாக்கியவளே
இரண்டாம் பார்வையில்
இதயம் மற்றியவளே,
உன் இரு விழிகள்
என் இருபது வருட வாழ்வு
தோற்றுவிட்டேன் நான்...
பேருந்து பயணங்கள்
கடற்கரை சாலைகள்
புது அறிமுங்கள்
பழைய நினைவுகள்
எல்லாவற்றிலும் உன்னையே தேடுகிறேன்..
பூவுக்கு பிறந்தவளே
தலையணைக்குள் தவம் இருப்பவளே
உன்னில் என்னை விழ செய்து
என்னில் உன்னை எழ செய்தவளே..
தலை கோத உன்விரல்கள்
தாலாட்ட உன் மடி
சுவாசிக்க உன் மூச்சு காற்று
எதுவும் வேண்டாம்..
உன்
ஒற்றை பார்வை
கீற்று புன்னகை
போதுமடி எனக்கு..
இந்த சின்ன சென்னையில்
என் பெரிய காதலுக்கு கண்ணாமுச்சி கட்டுபவளே...
இந்த ஐநூறு வீதி சென்னை
என் ஆயிரம் கைகள் காதலுக்கு முன் மண்டிஇட்டே தீரும்...
அன்று கலைப்பேன் என் தவம்
தந்துவிடு காதல் வரம்...

தூர்வைகள்...


அப்பாவின் தோளில் தூங்கிய நாட்கள்,
பாட்டிக்கு சொன்ன கதைகள்,
அண்ணனிடம் போட்ட சபதங்கள்,
முதல் காதலுக்கு எழுதிய கவிதைகள்,
வீட்டை சுற்றி ரீங்காரமிடும் அந்த குருவியின் கூட்டை பிரித்து வீட்டுக்குள் வைத்து குட்டி குருவியின் ஓசைக்காக காத்திருத்த மாலை பொழுதுகள்,
கூட்டு சேர்ந்து ஓனான் கொன்று திவிரவாதியாய் திரிந்த நிமிடங்கள்,
எல்லாம் மனதில் பசுமையாய்...
கணிபொறியுடன் கை கோர்த்து
வனம் தொட்ட பின்னும்
விழுதுகள் வழியே இறங்கி
வேர்களுடன் வாழ துடிக்குது மனது...

Tuesday, December 16, 2008

கடைசி காதல்.....


அந்தி நேரம்
அவசர அவசரமாய் மறையும் சூரியன்
ஆரவாரமாய் நான்
ஆர்ப்பட்டமில்லாமல் அவள்
இமைகளில் இறங்கி
இதயம் திருடியவள்,
உயிரை திரித்து
உறக்கம் கலைத்தவள்,
என்னவள்,
எனக்காக மட்டுமெ பிறந்தவள்,
காதலிக்கிறேன் அவளை,
நான்: காதல் பற்றி?
அவள்: புன்னகை....
நான்: காதல் கல்யாணங்கள்?
அவள்: சிறந்தது....நான் காதல் கல்யாணம் செய்யபோகிறேன்..
நான்: காதல் என்பது பைத்தியகரதனமனதா?
அவள்: அந்த பைத்தியகாரதனதிலும் ஓர் அர்த்தம் இருக்கிறது....
நான்: நான் பைத்தியம் ஆக போகிறேன், என் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கு...
அவள்: அடுத்த ஜென்மத்தில் நம்பிக்கை இருக்கிறதா?
நான்: இல்லை..
அவள்: .....
நான்:....
அவள்: நானும் அவனும் காதலர்கள்....
நான்: கண்டிப்பாக காதல் பைதியகாரதனமனதுதான்....
அவள்: எல்லா பைத்தியகாரதனதிலும் ஓர் அர்த்தம் இருக்கிறது....
நான்: ஆழமான பார்வை...
அவள்: புன்னகை...

ஈரமான இதயம்,
இதமான சொற்கள்,
அழகான அவள்,
அதே காதலுடன் நான்,
ஆரவாரமாய் அவள்
ஆர்பாட்டமில்லாமல் நான்..
அருமையான மாலை....